தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச்சென்ற
இயேசுவே நமக்குரிய எடுத்துக்காட்டு - திருத்தந்தை
இயேசுவே நமக்குரிய எடுத்துக்காட்டு - திருத்தந்தை
வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கம் வழக்கம்போல் நிரம்பி வழிய,
விசுவாச ஆண்டு குறித்த போதனைகளை இவ்வார பொது மறைபோத கத்திலும் தொடர்ந்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களின் பதிலு ரையாக நம் உடன் வாழ் மக்களுக்கு
கிறிஸ்தவ விசு வாசத்தை எடுத்துரைப்பதும், இறைவனைக் குறித்து அவர்களுடன்
உரையாடுவதும் எவ்வாறு என்பது குறித்து, விசுவாச ஆண்டின் இந்த மறைக்கல்வி
தொடரின் ஒரு பகுதியாக இன்று நோக்குவோம். இயேசு கிறிஸ்துவின் கடவுளை நம்
காலத்தின் மக்க ளுக்கு கொண்டுவருவதை இது குறித்து நிற்கிறது. இயேசுவின்
நற்செய்தியின் உள் மையப்பகுதிக்கு அமைதியாகவும் தாழ்ச்சியுடனும்
சான்றுபகர்வதையும் இது குறித்து நிற்கிறது. இது அன்பே வடிவான இறைவனின்
நற்செய்தி. அவரே சிலுவை வரையிலும் சென்ற இயேசுவில் நமக்கு நெருக்கமாக
வந்தார். மேலும் உயிர்ப்பின் வழி நமக்கு முடிவற்ற வாழ்வு குறித்த
வாக்குறுதி யையும் நம்பிக்கையையும் தந்தார். மக்களின் கேள்விகள்,
போராட்டங்கள், தேவை கள் குறித்த அன்புநிறை அக்கறையின் வழியாக மக்களை,
தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச்சென்றதன் மூலம் இயேசு நமக்குரிய
எடுத்துக்காட்டாக உள்ளார். நம் உடன்வாழ் மக்களுக்கு இறைவனைக் கொணர்வதில்
குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் மகிழ்விலும் உரையாடலிலும்
மன்னிப்பிலும் அன்பிலும் விசுவாச வாழ்வு குடும்பங்களிலேயே தினமும்
வாழப்படுகிறது. நம்மை அன்பால் மீட்டு நம் உயர்நிலையை வெளிப்படுத்திய இயேசு
கிறிஸ்துவின் கடவுள், மனித நகர் இறைநகராக மாறும் வண்ணம்
புதுப்பிக்கப்படுமாறு திருச்சபைக்குள் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
இவ்வாறு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும்
சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படவுள்ள எயிட்ஸ்
விழிப்புணர்வு தினம் குறித்த தன் கருத்துக்களையும் வழங்கினார்: "பல இலட்சம்
உயிர்களைப் பலி வாங்கி, பலரின் துன்பங்களுக்கு காரணமாகிய இந்நோய்,
பெரும்பாலும் ஏழை நாடு களின் மக்களையே பாதித்துள்ளதை நான் அறிவேன். ஒவ்வோர்
ஆண்டும் தாயின் வழியாக எண்ணற்ற குழந்தைகள் இந்நோயைப் பெறுவது கவலை
அளிப்பதாக உள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த திருச்சபை மேற்கொள்ளும் அனைத்து
முயற்சி களும் வெற்றியடைய ஊக்கமளிக்கிறேன்."
மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.