Wednesday, November 28, 2012

நவம்பர் 28, 2012

தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச்சென்ற
இயேசுவே நமக்குரிய எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கம் வழக்கம்போல் நிரம்பி வழிய, விசுவாச ஆண்டு குறித்த போதனைகளை இவ்வார பொது மறைபோத கத்திலும் தொடர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களின் பதிலு ரையாக நம் உடன் வாழ் மக்களுக்கு கிறிஸ்தவ விசு வாசத்தை எடுத்துரைப்பதும், இறைவனைக் குறித்து அவர்களுடன் உரையாடுவதும் எவ்வாறு என்பது குறித்து, விசுவாச ஆண்டின் இந்த மறைக்கல்வி தொடரின் ஒரு பகுதியாக இன்று நோக்குவோம். இயேசு கிறிஸ்துவின் கடவுளை நம் காலத்தின் மக்க ளுக்கு கொண்டுவருவதை இது குறித்து நிற்கிறது. இயேசுவின் நற்செய்தியின் உள் மையப்பகுதிக்கு அமைதியாகவும் தாழ்ச்சியுடனும் சான்றுபகர்வதையும் இது குறித்து நிற்கிறது. இது அன்பே வடிவான இறைவனின் நற்செய்தி. அவரே சிலுவை வரையிலும் சென்ற இயேசுவில் நமக்கு நெருக்கமாக வந்தார். மேலும் உயிர்ப்பின் வழி நமக்கு முடிவற்ற வாழ்வு குறித்த வாக்குறுதி யையும் நம்பிக்கையையும் தந்தார். மக்களின் கேள்விகள், போராட்டங்கள், தேவை கள் குறித்த அன்புநிறை அக்கறையின் வழியாக மக்களை, தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச்சென்றதன் மூலம் இயேசு நமக்குரிய எடுத்துக்காட்டாக உள்ளார். நம் உடன்வாழ் மக்களுக்கு இறைவனைக் கொணர்வதில் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் மகிழ்விலும் உரையாடலிலும் மன்னிப்பிலும் அன்பிலும் விசுவாச வாழ்வு குடும்பங்களிலேயே தினமும் வாழப்படுகிறது. நம்மை அன்பால் மீட்டு நம் உயர்நிலையை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் கடவுள், மனித நகர் இறைநகராக மாறும் வண்ணம் புதுப்பிக்கப்படுமாறு திருச்சபைக்குள் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
   இவ்வாறு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படவுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் குறித்த தன் கருத்துக்களையும் வழங்கினார்: "பல இலட்சம் உயிர்களைப் பலி வாங்கி, பலரின் துன்பங்களுக்கு காரணமாகிய இந்நோய், பெரும்பாலும் ஏழை நாடு களின் மக்களையே பாதித்துள்ளதை நான் அறிவேன். ஒவ்வோர் ஆண்டும் தாயின் வழியாக எண்ணற்ற குழந்தைகள் இந்நோயைப் பெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த திருச்சபை மேற்கொள்ளும் அனைத்து முயற்சி களும் வெற்றியடைய ஊக்கமளிக்கிறேன்."
   மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, November 25, 2012

நவம்பர் 25, 2012

இறையாட்சியை அறிவித்து பரப்பும் பணியைத்
திருச்சபை கொண்டுள்ளது - திருத்தந்தை

   கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலி முடிந்ததும், வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்பதைக் கொண்டாடுகிறது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் வரும் இந்த பெருவிழா, கடவுளே அனைத்துக்கும் அனைத்துமாக இருக்கும் இறையாட்சியைப் பற்றிய நமது பார் வையை விரிவாக்குகிறது. புனித சிரில் இவ்வாறு கூறுகிறார்: "நாம் கிறிஸ்துவின் முதல் வருகையைப் பற்றி மட்டுமல்ல, அதைவிட அழகான இரண்டாவது வருகை யைப் பற்றியும் அறிவிக்கிறோம். உண்மையில், முதலாவது வெளிப்பாடு துன்பத்துக் குரியது, இரண்டாவதோ இறை அரசுரிமைக்குரிய மாட்சியைக் கொண்டு வரும்... முதலாவதில், அவர் சிலுவையின் அவமானத்துக்கு உட்பட்டார், இரண்டாவதில் அவர் வானதூதர்கள் புடைசூழ மாட்சி பெறுவார்."
   இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறி விப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன் மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவதையும் கொண்டுள்ளன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவது போல, தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிறிஸ்து நிறுவிய இறையாட்சி முதலில் கிறிஸ்து என்ற மனிதரில் வெளியானது. கிறிஸ்துவின் இந்த இறையாட்சி திருச்சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு தொடக்கமும் விதையுமாக இருக்கும் இத்திருச்சபை, தூய ஆவியின் வல்லமையால் அனைத்து நாடுகளிலும் அதனை அறிவித்து பரப்பும் பணியைக் கொண்டுள்ளது. குறித்த காலத்தின் முடிவில் நமது ஆண்டவர் இறையாட்சியைத் தந்தையாம் இறைவனிடம் வழங்குவார் மற்றும் அன்புக் கட்டளைக்கு இயைந்த வகையில் வாழ்ந்த அனைவரையும் அவரிடம் கையளிப்பார்.
   நற்செய்திக்குரிய நமது மனமாற்றத்தின் மூலம், கடவுளின் மீட்பு பணியைத் தொடர்ந்தாற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பணிவிடை ஏற்க அன்றி, உண் மைக்கு சான்று பகர வந்த அரசரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோம். இந்த உணர் வுடன், இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஆறு பேருக் காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் தூய ஆவியால் நம்பிக்கை யிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு அவரின் அனைத்துக் கொடைகளாலும் அவரால் நிரப்பப்படுவார்களாக!

Wednesday, November 21, 2012

நவம்பர் 21, 2012

கடவுளின் படைப்பை விவேகத்தோடு கையாள்வதில் நம்பிக்கையும் அறிவியலும் சேர்கின்றன - திருத்தந்தை

   வத்திக்கானின் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், விசுவாசத்தைப் புரிந்து கொள்வது குறித்து விளக்கினார் .
அன்பு சகோதர சகோதரிகளே,
   நம்பிக்கை ஆண்டில் நாம் கேட்டுவரும் புதன் மறை போதகத்தின் தொடர்ச்சியாக, கடவுளின் உண்மை யின் மகிமையோடு சந்திப்பதாக, கடவுள் மீதான நம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து இன்று நோக்குவோம். நம்பிக்கை மூலமாக கடவுள் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். வாழ்வின் நிறைவையும், மகிழ்ச்சியையும் மறுவுலகில் பெறுவதற்காகக் காத்திருக்கும் நாம், இவ்வுலகில் விவேகத்துடன் வாழ்வதற்கும் நம்பிக்கை வழியாகக் கற்றுக் கொள்கிறோம். கடவுள் பற்றிய உண்மையை மனித மனத்திற்குத் திறந்து வைப்பதில் நம்பிக்கையும் அறிவும் ஒன்று சேர்ந்து செயல்படு கின்றன. உண்மையைத் தேடும் அறிவானது, கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இடம்பெறும் சந்திப்பில் உள்தூண்டுதலையும், வழிகாட்டுதலையும், நிறைவையும் கண்டு கொள்கின்றது. அதேநேரம், நம்பிக்கை, தனது இயல்பிலே கொண்டிருக்கும் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடுகின்றது. மனிதரின் அறநெறி வாழ்வின் முன்னேற்றத்துக்கும், அவர் படைப்பை விவேகத்தோடு கையாள்வதற்கு மான சேவையில் நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்த்துச் செல்கின்றன. இறை மகன் இயேசு கிறிஸ்துவில் நமது மீட்பின் நற்செய்தியானது உண்மையான மனி தத்தை நமக்கு வழங்குகிறது. மனிதர் மற்றும் அகிலத்தின் பேருண்மையைப் புரிந்து கொள்வதற்கு ஓர் இலக்கணத்தையும் இது நமக்கு வகுக்கின்றது. நமது மனித மாண்பு மற்றும் அழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையின் ஒளிக்கு இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நமது மனங்களைத் திறப்போமாக!
   இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இஸ்ரேல் - காசா இடையிலான பிரச்சனை குறித்தும் பின்வருமாறு தன் கருத்துகளை வெளிப் படுத்தினார்: காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் புரட்சியாளருக் கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இஸ்ரேலுக்கும் காசா பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இந்த வன் முறையில் பலியானவர்கள் மற்றும் துன்புறுவோருக்காக நான் செபிக்கிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி களை நான் ஊக்குவிக்கிறேன். இரு தரப்பு அதிகாரிகளும் அமைதிக்கு ஆதரவாகத் துணிச்சலான தீர்மானங்களை எடுப்பதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரும். அதிகமான சண்டைகளால் பாதிக்கப் பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு அமைதியும் ஒப்புரவும் தேவை.
   இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெ ரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, November 18, 2012

நவம்பர் 18, 2012

இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள மாற்கு நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
   விவிலிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறுதி காலத்தைக் குறித்து கூறப்படும் தவறான அர்த்தங் களை ஒதுக்கிவைத்து, இயேசுவின் கூற்றில் நாம் உண்மையான அர்த்தத்தைக் காணவேண்டும். இறுதி காலத்தைப் பற்றிய தேவை யற்ற கணிப்புகளிலிருந்து விலகி, இன்றும், நாளையும், எப்போதும் நல்வழியைத் தேடவேண்டும் என்ற அறிவுரையை இயேசு இன்றைய நற்செய்தியில் வழங்குகிறார். பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு பல்வேறு உருவகங்களைப் பயன்படுத்தினாலும், சாவிலிருந்து உயிர்ப்புக்குச் செல்வதற்கு, தன்னை ஒரு வழியாகக் காட்டினார்.  நம்மைச்சுற்றி முரண்பட்டப் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நமது செயல்பாடுகளுக்கு நாமே பொறுப்பு என்றும், இறுதிநாளில் இச்செயல்பாடுகளின் அடிப்படையிலேயே நாம் தீர்வு பெறுவோம். இன்றைய உலகில் நம்மைச் சுற்றி நிகழும் இயற்கைப் பேரி டர்கள், போர்கள் ஆகிய துயர நிகழ்வுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தினாலும், இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப் பட்டுள்ளோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

Wednesday, November 14, 2012

நவம்பர் 14, 2012

நம் வாழ்விலிருந்து கடவுள் அகற்றப்படும்போது
நாம் குறைவுபடுகின்றோம் - திருத்தந்தை

  வத்திகானில் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
   இறைவன்பேரில் நாம் கொள்ளும் அந்தரங்கமான பேரார்வம் மனித இதயத்தின் ஆழத்தில் காணக்கிடக்கிறது என்று, நம்பிக்கையின் ஆண்டு குறித்த நம் மறைபோதகத்தொடரில் கடந்த வாரம் நோக்கினோம். கடவுளை அறிந்துகொள்ளவும், நம் மகிழ்வை கடவுளில் கண்டுகொள்ளவும் நாம் எடுக்கும் முயற்சிகளில் தன் அருளின் துணை தந்து, நம்மைத் தூண்டி, நமக்கு துணையாக இறைவன் வருகிறார். இருப்பினும் இன்றைய மதச்சார்பற்ற உலகில் விசுவாசம் என்பது நியாயப்படுத்தமுடியாத ஒன்றாக பலருக்குத் தோன்றுகிறது. நடைமுறை கடவுள்மறுப்புக் கொள்கையை எதிர்நோக்கும் நாம், கடவுள் இல்லை என்பது போன்று எண்ணி அதுபோல் வாழ்வை நடத்தும் சோதனைக்கு உள்ளாகின்றோம். இறைவனால் படைக்கப்பட்டு அவருடன் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருப்பதில் பொதிந்திருக்கும் உயரிய மாண்பைக் கொண்டிருக்கும் நம் வாழ்விலிருந்து கடவுள் அகற்றப்படும்போது நாம் குறைவுபடுகின்றோம். விசுவாசிகள் என்ற முறையில் நாம் நம் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் நம்பத்தகும் பகுத்தறிவுவாத காரணங்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த காரணங்களை நாம், தன்னைப் படைத்த இறைவனைப்பற்றிப் பேசும் படைப்புகளின் அழகில் கண்டுகொள்ளலாம். மனிதனின் இதயத்தில் முடிவற்றதாய் நிலைத்திருக்கும் ஏக்கத்தின் நிறைவை இறைவனில் மட்டுமே நாம் கண்டுகொள்ளமுடியும். மேலும், இறைவனுடன் நாம் கொள்ளும் தினசரி ஒன்றிப்பின் வழி நம்மை ஒளியூட்டி உருமாற்றும் விசுவாசத்தின் வழியாகவும் நம் ஏக்கத்தின் நிறைவைக் கண்டுகொள்ள முடியும். கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்திய இறைவனை அறிந்து அன்புகூர மற்றவர்களையும் வழிநடத்திச்செல்ல உதவும் விதமாக உயிருள்ள விசுவாசத்தின் சாட்சிகளாக நாம் விளங்குவோமாக!
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.