இயேசுவை மக்களுக்கு முதலில் வெளிப்படுத்தியவர்
திருமுழுக்கு யோவான் - திருத்தந்தை
உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப
உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று புனித திரு முழுக்கு யோவானைப் பற்றி எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு நாம், நமது ஆண்டவருக்காக வழியை தயார் செய்த மாபெரும் புனிதரான திருமுழுக்கு யோவானின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். கடவு ளின் மக்களை மனந்திரும்ப அழைக்கும் பாலை நிலக் குரலாக யோவான் இருந்தார். நாம் இன்று அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்து, ஆண்டவருக்காக நம் இதயங்களில் ஓர் அறையை உருவாக்குவோம். மரியாவின் முதிர்ந்த வயது உறவினரான எலிசபெத் யோவானை கருத்தரித்தது 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்பதற்கான ஓர் அடையாளம். இயேசுவின் முன்னோடியாகவும், இறைமகனுக்காக வழியைத் தயார் செய்யும் ஒரு தூதுவராகவும் திருமுழுக்கு யோவான் பிறந்தார். முப்பது ஆண்டு களுக்கு பின் யோர்தான் நதியில் மக்களுக்கு திருமுழுக்கு வழங்கத் தொடங்கியதால், யோவான் திருமுழுக்காளர் ஆனார். மெசியாவின் உடனடி வருகைக்காக மக்களை மனந்திருப்பி தயார்செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். கடவுள் இந்த மாபெ ரும் புனிதருக்காக ஒரு பணியை வைத்திருந்தார். இயேசுவுக்கு திருமுழுக்கு வழங் கியவராகவும், தனது கொடூர மரணத்தால் இறைமகனுக்கு சான்று பகர்ந்தவராகவும், இயேசுவை மக்களுக்கு முதலில் வெளிப்படுத்தியவராகவும் அவர் இருந்தார்.
மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை, வட இத்தாலியில் சமீபத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை வருகின்ற செவ்வாய்க்கிழமை தான் பார்வையிட உள்ளதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களோடு திருச்சபை முழுவதன் ஒருமைப்பாட் டினைத் தெரிவித்துக்கொண்ட அவர், தேவையில் இருப்போர் அனைவருக்காகவும் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.