புதன் மறைபோதகம்: இயேசுவின் மகனுக்குரிய
உரிமையில் நாமும் பங்கு பெற்றுள்ளோம் - திருத்தந்தை
உரிமையில் நாமும் பங்கு பெற்றுள்ளோம் - திருத்தந்தை
இப்புதன் காலை, தூய பேதுரு
பேராலய வளா கத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான விசு வாசிகளுக்கு தன்
பொது மறைபோதகத்தை வழங் கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தூய பவுலின்
மடல்களில் செபம் குறித்து காணப்படும் சிந்தனை களுக்கு விளக்கம் கொடுக்கும்
தொடரைக் கடந்த வாரத்தில் தொடங்கிய திருத்தந்தை, இறைவனை அப்பா என அழைக்க
நம்மை
தகுதியாக்கும் தூய ஆவி குறித்து தூய பவுலின் மடல்களில் காணப் படும் இரு
பகுதிகளை (கலா 4:6;
உரோ 8:5) நோக்குவோம் என இவ்வார பொது மறை போதகத்தைத் தொடங்கினார்.
தந்தையுடன் நாம் கொள்ளும் அன்புறவை வெளிப்படுத்தும் விதமாக
'அப்பா' என்ற வார்த்தை இயேசுவால் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை, நாம் இந்த
வார்த்தை யைப் பயன்படுத்துவது என்பது, நம்முள் காணப்படும் கிறிஸ்துவின்
ஆவியின் பிரசன்னத்தின் கனியாகும். திருமுழுக்கில் நாம் பெற்ற தூய ஆவியின்
கொடை வழியாக,
இயேசுவின் முடிவற்ற மகனுக்குரிய உரிமையில், நாம் தத்தெடுத்தல் மூலம் பங்கு
பெற்று, இறைவனின் குழந்தைகளாக மாறியுள்ளோம். கிறிஸ்தவ செபம் என்பது நம்
முயற்சி மட்டுமல்ல, மாறாக, நமக்குள் இருந்து நம்மோடு இணைந்து தந்தையாம்
இறைவனை நோக்கி கூக்குரலிடும் தூய ஆவியின் செயலாகும் என தூய பவுல் நமக்குக்
கற்பிக்கிறார். கிறிஸ்துவின் உடலாம் திருச்சபையின் உயிருள்ள
உறுப்பினர்களாகிய நாம், நம்முள் உறைந்திருக்கும் மூவொரு கடவுளின் அன்பில்
நம் செபத்தின் வழி நுழைகிறோம். நமது தனி மனித செபம் என்பது திருச்சபையின்
செபம் எனும் மிக உயரிய இன்னிசையின் ஒரு பகுதியாகும். நம்முள்
உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு நம் இதயங்களை முற்றிலுமாகத்
திறப்போம். அதன் வழி, நாம் தந்தையாம் இறைவனில் மேலும் அதிக நம்பிக்கை
கொள்வதற்கும், இயேசுவின் சாயலாக நாம் மாறுவதற்கும் வழிநடத்தப்படுவோமாக!
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதில் பங்கேற்ற, சுவீடனின் எவாஞ்சலிக்கல் - லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் உறுப்பி னர்களுக்கும், பிலிப்பைன்சின் மணிலா புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழ கத்தின் உறுப்பினர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தியா, இங்கி லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வந்து பொது மறைபோதகத்தில் கலந்துகொண்ட திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.