Thursday, October 11, 2012

அக்டோபர் 11, 2012

இன்றைய ஆன்மீகப் பாலைவன உலகில் கிறிஸ்துவை
மீண்டும் அறிவிக்க வேண்டும் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியில் இவ்வியாழனன்று விசுவாச ஆண்டினைத் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு மறையுரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஒரு புதிய விசுவாச ஆண்டையும் புதிய நற்செய்தி அறிவிப்பு பணியையும் பரிந்துரைக்கின்றது என்றால் இது கடந்த ஐம்பது ஆண்டுகளின் நிறைவைக் கவுரவப்படுத்து வதற்காக அல்ல, ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளைவிட இன்று இன்னும் அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது என்பதற் காகவே. இந்தத் தேவைக்கானப் பதில், திருத்தந்தையரால், ஆயர்கள் மாமன்றத் தந்தையரால் மற்றும் பொதுச்சங்கக் கொள்கைத் திரட்டுகளால் விரும்பப்பட்ட ஒன்றாகும். புதிய நற்செய்தி அறிவிப்பு பணியை ஊக்குவிப்பதற்கென ஒரு திருப்பீட அவை உருவாக்கப்பட்டதும் இந்தச் சூழலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகில் ஆன்மீகப் பாலைவனம் வளர்ந்து வருவதை அண்மைப் பல ஆண்டுகளாகக் காண முடிகின்றது. கடவுள் இல்லாத உலகமும் மனித வாழ்வும் எப்படி இருக்கும் என்பதற்கு வரலாற்றின் சில பக்கங்கள் மூலம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கக் காலத்திலே ஏற்கனவே பார்க்கக் கூடியதாய் இருந்தது. ஆனால் இப்பொழுது இதனை நாம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றிலும் பார்க்க முடிகின்றது.
   ஆயினும், இந்தப் பாலைவன மற்றும் இந்த வெறுமை அனுபவத்திலிருந்து, விசுவசிப்பதன் மகிழ்ச்சியையும் அதன் உயிர்த்துடிப்பான முக்கியத்துவத்தையும் நாம் மீண்டும் கண்டுணருகிறோம். நாம் வாழ்வதற்கு எது முக்கியம் என்பதன் மதிப்பை இந்தப் பாலைவனத்திலிருந்து மீண்டும் கண்டுணருகிறோம். எனவே இன்றைய உல கில் இறைவன் மீதான தாகத்தின் மற்றும் வாழ்வின் மூலக்காரணமான பொருளைத் தேடுவதன் எண்ணற்ற அடையாளங்கள் வெளிப்படையாக அல்லது மறைவாக அடிக் கடி வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தப் பாலைவனத்திற்கு விசுவாசத்தின் மக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களது சொந்த வாழ்வால் நம்பிக்கையை உயிர்பெறச் செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிகாட்டும் விசுவாசிகள் தேவைப்படுகிறார்கள். வாழ்ந்து காட்டப்படுகின்ற விசுவாசம், நம்பிக்கையின்மையில் இருந்து விடுதலை யாக்கும் கடவுளின் அருளுக்கு இதயத்தைத் திறக்கின்றது. எக்காலத்தையும்விட இக் காலத்தில் நற்செய்தி அறிவித்தல் என்பது கடவுளால் மாற்றமடைந்த புதிய வாழ்வுக் குச் சான்று பகர்வதாகும். இதன் மூலம் கடவுளின் பாதையைக் காட்ட முடியும்.
   விசுவாச ஆண்டு என்பது இன்றைய உலகில் பயணத்திற்கு எது தேவையோ அவற்றை மட்டும் நம்மோடு எடுத்துக் கொண்டு பாலைவனங்களில் திருப்பயணங்கள் மேற்கொள்வதாகும். நம் ஆண்டவர் இயேசு தம் சீடர்களை மறைப்பணிக்கு அனுப்பும் போது சொன்னது போல, பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் எனக் கூறியதை நினைவுகூருவோம். ஆனால் நற்செய்தி, பொதுச்சங்க ஏடுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளி யிடப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏட்டில் வெளிப்படுத்தப்பட் டுள்ள திருச்சபையின் விசுவாசம் ஆகியவை இதில் நமக்குச் சுடர்விடும் வெளிப்பாடு களாக உள்ளன. எனது பெருமதிப்புக்குரிய மற்றும் அன்புச் சகோதரர்களே, 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இறைவனின் தாயாம் அன்னை மரியாவின் விழாவாக இருந்தது. இந்த மரியாவிடம் இந்த விசுவாச ஆண்டை அர்ப்பணிப்போம். புதிய நற் செய்தி அறிவிப்பு பணிக்கு அன்னை மரியா வழிகாட்டும் விண்மீனாக இருக்கிறார்.