புதன் மறைபோதகம்: திருவழிபாட்டிலேயே இறைவன்
வந்து நம் வாழ்வில் நுழைகிறார் - திருத்தந்தை
வந்து நம் வாழ்வில் நுழைகிறார் - திருத்தந்தை
காஸ்தல் கந்தல்போவிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்திற்கு வந்து புதன் பொது மறை போதகம் வழங்கிய திருத்தந்தை 16ம்
பெனடிக்ட், இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
திருவழிபாட்டுச் செபம் குறித்த திருச்சபையின் இயல்புநிலை குறித்து இன்று நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். திருவழிபாடு என்பது தூய ஆவியில் தந்தையாம் இறைவனை நோக்கி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய செபத்தினில் பங்குபெறுவது ஆகும். இயேசுவில் ஒன்றிணைந்திருக்கும் அவரின் மறையு டலாம் திருச்சபை, தந்தையாம் இறைவனுக்கு தன் வழிபாட்டை செலுத்துகிறது. தந்தைக்கான இயேசுவின் செபத்தில் நம்மை நாம் அடை யாளம் கண்டுகொள்ளும்போது, வானகத்திலுள்ள தந்தையாம் இறைவனின் குழந்தை களாக, கிறிஸ்தவர்களாக இருப்பதன் ஆழமான தன்மையை நாம் மீண்டும் கண்டு கொள்கிறோம்.
திருவழிபாடு என்பது இயேசுவை
முழுமையாக, முகம் முகமாக எதிர்கொள்வதும், அவரோடும் அவரின் மறையுடலாம்
திருச்சபையோடும் ஒன்றித்திருப்பதும் ஆகும். இவ்வாறு, திருவழிபாடு என்பது
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட, உயி ருள்ள அனைத்துலகச் சமூகத்தில்
பங்குபெறுவதாகும். திருச்சபையில், திருச்சபை வழியாக திருச்சபையின்
வார்த்தைகளை நம்முடையதாக மாற்றி நாம் உரையாடக் கற்றுக்கொள்ளும்போது,
இறைவனின் உடனிருப்பை முழுமையாக உணர்ந்துகொள் ளும் நிலையாக செபம் மாறுகிறது.
திருவழிபாட்டில் திருச்சபை, தன்னிலையில் உண்மைத்தன்மையுடையதாக இருக் கிறது.
ஏனெனில், திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி வந்து நம் வாழ் வில்
நுழைகிறார். திருவழிபாடு என்பது நமக்காக அல்ல, மாறாக இறைவனுக்காக
கொண்டாடப்படும் ஒன்று என்பதை மனதில் நிறுத்துவோம். இது அவரின் செயல்பாடு,
அவரே அதன் முக்கியக் கருப்பொருள். திருவழிபாட்டில் நம் பங்கு என்னவெனில்,
கிறிஸ்துவாலும் அவரின் மறையுடலாம் திருச்சபையோடும் நாம் வழிநடத்தப்படும்
வகையில் நம்மையேத் திறந்தவர்களாகச் செயல்படுவதாகும்.
இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் திறக்கப்படுவதற்கும் ஒரு வாரத்திற்கு முன் னால்
மரியன்னை திருத்தலம் இருக்கும் லொரெத்தோவிற்கு அருளாளர் திருத்தந்தை 23ம்
அருளப்பர் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டை நினைவுகூரும் வித மாக நாளை
(4ந்தேதி) அதே இடத்திற்கான என் திருப்பயணத்தை மேற்கொள்கின் றேன். அன்னை மரியாவின்
பரிந்துரையை நோக்கிய என் செபத்தில் என்னோடு இணைந்திருக்குமாறு உங்களை நான்
வேண்டுகிறேன். புதிய நற்செய்தி அறிவித்தல் குறித்த ஆயர் மாமன்றமும்,
விசுவாச ஆண்டும் தொடங்க உள்ளன. நம் காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
நற்செய்தியை எடுத்துரைக்கும் திருச்சபையின் பணி யில் அன்னை மரியா உடன் வந்து
உதவுவாராக!
இவ்வாறு, தன்
மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்
அளித்தார்.