Wednesday, December 12, 2012

டிசம்பர் 12, 2012

கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு
திட்டத்தில் அவர் நம்மில் ஒருவரானார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளுக்கு ஒத்திணங்கிச் செல்லும் விதமாக இவ்வார புதன் பொது மறைபோதகத்தில், இறைவ னின் மீட்பு திட்டம் குறித்த தனது கருத்துக்களை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக் கல்வி போதகத்தின் தொடர்ச்சியாக இன்று, கடவுள் இவ்வுகிற்கு தன்னையே வெளிப்படுத்தியது மற் றும் அவரின் மீட்பு திட்டம் குறித்து நோக்குவோம். இஸ்ரயேலர்களின் வரலாற்றில் இது எவ்வகையில் வளர்ச்சியடைந்தது என்பது குறித்து திருவிவிலியம் நமக்குக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில், தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் வழியாக கடவுள் வரலாற்றில் நுழைந்ததை காண்கிறோம். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், மையமாக திகழ்ந்த விடுதலைப்பயண நிகழ்வில் கடவுளின் வல்லமை சிறப்பாக வெளிப்பட்டது. பாஸ்கா நிகழ்வு இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கடவுளின் நினைவாக தொடர்ந்தது. கடவுள் எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை விடுவித்ததால், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு சென்று அவரை உண்மையான ஒரே கடவுளாக வழிபட்டார்கள். பின் வந்த நூற்றாண்டுகளில் இஸ்ர யேல் மக்கள் இறைவனின் இந்த மீட்பு செயல்களைத் தங்கள் மனதிற்குள் மகிழ்ச்சி யுடன் நினைத்து கொண்டாடி வந்தனர். மீட்பின் வரலாற்றில் கடவுளது செயலைப் புகழ்ந்துரைக்கும் கன்னி மரியா, "மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமை யும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண் டுள்ளார்" என்கிறார். கடவுளின் விடுதலை அளிக்கும் திட்டம் தொடர்வதால், மனிதர் தமது ஆண்டவருக்கு பணிந்து, தனது நம்பிக்கையாலும் அன்பு செயல்களாலும் பதி லளிக்க வேண்டும். கடவுள் படைப்பு செயலில் மட்டுமின்றி, நமது வரலாற்றில் நுழைந்ததன் வழியாகவும் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் உருவாக காரண மான வாக்கு, கடவுளின் உண்மை முகத்தை காட்டும் வகையில் இயேசுவாக மனித உடலெடுத்தார்.
   கடவுள் தொடக்கத்தில் இருந்தே தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருக்க மனிதரை அழைத்துள்ளார். மனிதன் அவருக்கு கீழ்ப்படிய மறுத்து, அவரது நட்புறவை இழந்தபோதிலும், கடவுள் அவனை ஒருபோதும் மரணத்தின் ஆற்றலுக்கு கையளிக் கவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் மனிதரோடு உடன்படிக்கை செய்து கொண் டார். முதலில் நோவா வழியாகவும், பின்பு ஆபிரகாம் வழியாகவும், விடுதலைப்பய ணத்தின்போது சீனாய் மலையில் மோசே வழியாகவும் கடவுள் உடன்படிக்கைகளை செய்து கொண்டார். அதன் பிறகு மனித குலம் அனைத்தும் எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக் கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத் திட்டம், இறைமகனின் வருகையில் தன் உச்சநிலையை அடைந்தது. இறுதியாக, வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு திட்டத்தில், அவர் நம்மில் ஒருவரானார். இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டது குறித்து ஆழ்ந்து தியானிக்கவும், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். நமது விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழியாக ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் உடனிருப்புக்கு சாட்சிகளாக திகழவும், இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும், பெத்லகேம் குடிலை நிறைத்த ஒளியை நம் வாழ்வில் பிரதிபலிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். உலக வாழ்வின் துன்பங் களில் இயேசுவின் அன்னையாம் மரியா உங்களுக்கு துணையாக இருந்து ஆறுதல் அளிப்பாராக!
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.