நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் இறைவனுக்கு
நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - திருத்தந்தை
நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - திருத்தந்தை
கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு முன் தயாரிப்புகளின் காலமான
திருவருகைக் காலத்தின் முதல் புதனன்று வத்திக்கானில் திருப் பயணிகளை
சந்தித்த திருத்தந்தை, திருவருகைக் காலத்தின் சிறப்புக்கள் குறித்து
எடுத்துரைத்தார்.
இந்த
'நம்பிக்கை ஆண்டில்' நம் மீட்பு குறித்த இறைத்திட்டத்தின் மகத்துவத்தை
ஆழ்ந்து சிந்தித்து திருவருகைக்காலத்தை தொடங்குவோம். இறைவ னின் சொந்த
பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், உலகம் தோன்றுவதற்கு முன்னரே கடவுள் நம்மை
கிறிஸ்து வழியாகத் தேர்ந் தெடுத்தார் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய
திருமுகத்தின் தொடக்கத்தில் வாசிக்கின்றோம். இத்திருமுக பகுதி, இறைவனின்
கருணைமிகு அன்பை புகழ்ந்து பாடுகின்றது. காலநிறைவில் விண்ணிலுள்ளவை,
மண்ணிலுள்ளவை அனைத்தை யுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்க வேண்டும்
என்பதே இறைவனின் திட்டமாகும். தனது இத்திட்டத்தை இறைவன் பல்வேறு வழிகளில்
வெளிப்படுத்தி யுள்ளார். இறைமகனின் மனித பிறப்பிலும் தூய ஆவியை
பொழிந்ததிலும் அவ் வெளிப்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன. இறைவன் தம் மகன்
இயேசுவில் தன்னை வெளிப்படுத்தியது நம் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களோடுத்
தொடர்புடை யது. அதேவேளை, நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் நம்மை
இறைவனுக்கு அர்ப் பணிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வீக
வெளிப்பாடுகளுக்கு நம் மனம் மற்றும் விருப்பத்தின் சுதந்திர இசைவாக, நம்
வாழ்வு மற்றும் நம்மைச் சுற்றியி ருக்கும் உலகின் உண்மை நிலைகளை புதிய
வழிகளில் காண்பதற்கு உதவும் மனமாற்றத்திற்கு விசுவாசம் அழைப்பு
விடுக்கிறது. இத்திருவருகைக்காலத்தில், இறைவனின் அன்பு திட்டத்தின்
உள்ளழகைக் குறித்து மேலும் ஆழமாகத் தியா னிப்போம். அதே நேரம், இவ்வுலகில்
இறைவனின் மீட்புத் தொடர்புடைய உடனி ருப்பின், வாழும் அடையாளமாக இருக்க
முயல்வோம்!
இவ்வாறு தன் பொதுமறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு தன் பொதுமறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.