வன்முறை ஒருபோதும் மனித குலத்திற்கு
உதவியாக அமைந்ததில்லை - திருத்தந்தை
உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றைய நற்செய்தியை மையமாகக் கொண்டு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத் தியதை எடுத்துக்கூறுகின்ற இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், கோவிலில் இருந்த ஆடு, மாடு, புறா விற்போரையும், நாணயம் மாற்றுவோரையும் அங் கேயிருந்து துரத்திய இயேசு ஓர் இறைவாக்கினரைப் போல செயல்படுவதைப் பார்க்கிறோம். கடவுளின் பெயரால் வரும் இறைவாக்கினர் கள், அத்துமீறல்களை அடிக்கடி கண்டனம் செய்தனர், சில சமயங்களில் அடையாளச் செயல்களையும் மேற்கொண்டனர். இயேசுவை ஒரு வன்முறையாளராக விவரிக்க முடியாது. ஏனெனில், வன்முறை இறையாட்சிக்கு எதிரானது; அது எதிர் கிறிஸ்து வின் ஆயுதம். வன்முறை ஒருபோதும் மனித குலத்திற்கு உதவியாக அமைந்த தில்லை - அது மனிதத்தன்மையை இழக்கச் செய்வதாகவே இருக்கிறது.

மூவேளை செப உரைக்கு பின் புயலால் பேரழிவை சந்தித்த மடகாஸ்கர் மக்கள் மீது தனது சிந்தனையை திருப்பிய திருத்தந்தை, "மக்களுக்கும், கட்டடங்களுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்த இயற்கை பேரிடருக்கு ஆளான மடகாஸ்கர் மக்களை எண்ணிப் பார்க்கிறேன். இதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர் களின் குடும்பத்தினருக்கும் என் செபங்களை உறுதி செய்வதோடு, சர்வதேச சமுதா யத்தின் தாராள உதவியையும் நம்பிக்கையோடு ஊக்கப்படுத்துகிறேன்" என்றார்.
இறுதியில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.