நன்றி செலுத்தி பகிர்ந்து அளிக்கப்படும் அப்பம்
நற்கருணையை நினைவூட்டுகிறது - திருத்தந்தை
நற்கருணையை நினைவூட்டுகிறது - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ் தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தியில் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தது குறித்த கருத்தை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர, சகோதரிகளே,
இன்று நாம் யோவான் நற்செய்தியின் 6ஆம் அதி காரத்தை வாசிக்க தொடங்குகிறோம்.
இது அப்பங் களைப் பலுகச் செய்த நிகழ்வோடு தொடங்குகிறது, பின்னர்
கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக
அடையாளப்படுத்துகிறார். இயேசுவின் செயல்கள் இறுதி இரவுணவுக்கு இணையா னதாக
அமைந்துள்ளன: 'அவர் அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி
அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்' என்று நற்செய்தி கூறுகிறது. நன்றி
செலுத்தி, பகிர்ந்து அளிக்கப்படும் அப்பம் உலகின் மீட்புக்காக பலியான
கிறிஸ்துவின் நற் கருணையை நினைவூட்டுகிறது.
பாஸ்கா விழா அண்மையில்
நிகழ இருந்ததாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். பார்வை அன்பின் கொடையான
சிலுவையையும், இந்த கொடையின் நிலைப்பேறான நற்கருணையையும் நோக்கிச்
செல்கிறது. புனித அகஸ்டின் கூறுகிறார்: "கிறிஸ்துவே அன்றி விண்ணக அப்பம்
யார்? வானதூதர்களின் ஆண்டவர் மனிதரானதால்தானே, வானதூதர்களின் அப்பத்தை
மனிதர் உண்ண முடிகிறது. இது நடக்கவில்லை என்றால், நாம் அவரது உடலை, அவரது
சொந்த உடலை, திருப்பீடத்தின் அப்பத்தைப் பெற்றிருக்க முடியாது." நற்கருணை
என்பது கடவுளுடன் பெரிய அளவில் நீடிக்கும் சந்திப்பு, ஆண்டவர் நமது உணவாக
மாறும்போது, நம்மை அவருக்குள் உருமாற்ற தன்னையே வழங்குகிறார்.
பலுகல் நிகழ்வில் பெரிய அளவிலான மக்கள் கூட்டத்துக்கு உணவு வழங்கும்
இக்கட்டான நிலையில் காணப்படும் சிறுவன், சிறிய அளவில் ஐந்து
அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொள்கிறான். சிறுவன் தன்னிடம்
இருந்தவற்றைக் கொண்டு தொடங்கிய முதல் சிறிய பகிர்தலால்தான் இந்த அற்புதம்
நிகழ்ந்தது. இயேசு நம்மிடம் இல்லாததைக் கேட்கவில்லை, ஒவ்வொருவரும் சிறிய
அளவில் கொடுத்தாலே நாம் மீண்டும் மீண்டும் அற்புதத்தை நிறைவேற்ற முடியும்:
நமது சிறிய அன்பு செயல்களைப் பெருகச்செய்யவும், தனது கொடையில்
பங்குபெறுபவர்களாக நம்மை மாற்றவும் கடவுளால் முடியும். மக்கள் அற்புதத்தின்
தாக்கத்தைப் பெற் றிருந்தனர்: அவர்கள் இயேசுவை புதிய மோசேயாகவும்,
அதிகாரத்துக்கு உரியவ ராகவும் பார்த்ததோடு, அவர்கள் உண்ட உணவின் காரணமாக
பாதுகாப்பான எதிர் காலத்தையும் கண்டனர். அவர்கள் வந்து தம்மைப்
பிடித்துக்கொண்டு போய் அரச ராக்க போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு
மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். இயேசு அதிகாரம் செலுத்தும் உலகு
சார்ந்த அரசர் அல்ல, உணவுக்கான பசியோடு, உண்மை மற்றும்
கடவுளுக்கான பசியையும் போக்க பணியாற்றும் அரசர்.
அன்பு சகோதர,
சகோதரிகளே, உணவை மட்டுமின்றி, உண்மை, கிறிஸ்துவின் அன்பு ஆகியவற்றையும்
ஊட்ட ஆண்டவரை வேண்டுவோம். கிறிஸ்துவின் உடலா கிய நற்கருணை திருவிருந்தில்
விழிப்புணர்வுடனும், விசுவாசத்துடனும் பங்கேற் போம். உண்மையில் நாம் அவரோடு
நெருக்கமாக இணைக்கப்படுகிறோம்: "நற் கருணை நமக்கு உணவாக மாறாமல், நம்மை
மறைமுகமாக உருமாற்றுகிறது. கிறிஸ்து நம்மை தன்னோடு இணைப்பதன் மூலம் நமக்கு
ஊட்டம் அளித்து, அவ ருக்குள் நம்மை ஈர்த்துக்கொள்கிறார்." அதே நேரத்தில்,
வன்முறை ஆயுதங்களினால் அன்றி அன்பினாலும் பகிர்தலினாலும் ஏற்றத்தாழ்வுகளை
களைய நாம் செபிப்போம். நமக்காகவும், நம் அன்புக்குரியவர்களுக்காகவும் கன்னி
மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.
மூவேளை செபத்துக்கு பின் திருப்பயணிகளிடம் பேசிய திருத்தந்தை, சிரியா மற்றும் ஈராக்கில் அமைதி ஏற்பட அழைப்பு விடுத்தார்: "சிரியாவில் தொடரும் துயரம் நிறைந்த வன்முறை நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன. அதிகரித்து வரும் உள்நாட்டு கலவரத்தால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓராண்டுக்கும் மேலாக மறை விடங்களில் வசித்து வருகின்றனர். தங்கள் வீடுகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டி லேயே பலரும் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பாதிக் கப்பட்ட அனைவருக்கும் மனிதநேய உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அருகாமையையும் செபங்களை யும் வாக்களிக்கிறேன். இந்த இரத்தம் சிந்தும் வன்முறைகளை நிறுத்தவும், அமைதி மற்றும் ஒப்புரவுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சரியான அரசியல் தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஈராக்கில் கடந்த வாரம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை எனது செபங்களில் நினைத்துப் பார்க்கிறேன். அங்கு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற் பட்டோரைக் கொன்ற தீவிரவாத தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. அந்த பெரிய நாடு மீண்டும் நிலைத்தன்மையையும், ஒப்புரவையும் அமைதியையும் காணட்டும்."