இந்த பிரபஞ்சத்தின் மாபெரும்
அற்புதம் இயேசுவே - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தியில் இயேசு தனது சொந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது
பற்றிய கருத்து களை எடுத்துரைத்தார்.
"சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்." உண்மையில்
இது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று தான். ஏனெனில் மனித நிலையில் புகழை
விரும்புகின்றபோது, அதைக் கடந்து தெய்வீகப் பரிமாணத்துக்கு திறந்திருப்பது
கடின மானது. இயேசு உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, நாசரேத்தில் எந்த அற்புதத் தையும் செய்ய முடியவில்லை. ஏனெனில்
அந்த மக்கள் ஆன்மீக பரிமாணத்துக்கு மூடப்பட்டிருந்தார்கள். இறைவன்
நிகழ்த்தும் புதுமைகளைப் பெற வேண்டுமெனில் அவர்மீது நம்பிக்கை கொண்டு
அவருக்குத் திறந்த மனம் உள்ளவர்களாய் வாழ்வது அவசியம் என்பதை இயேசு
நசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. கிறிஸ்துவின்
அற்புதங்கள் வல்லமையின் வெளிப்பாடு அல்ல, மாறாக இறையன்பின் அடையாளங்கள்,
மனித ரிடத்தில் விசுவாசத்தைக் காணும் போது அவை நிகழும்.
தனது சொந்த மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். உண்மையின் ஒளியை அவர்கள் கண்டறிய முடியாமல் போனது எப்படி? நமது மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்ட கடவுளின் நன்மைத்தனத்துக்கு அவர்கள் ஏன் தங்களைத் திறக்கவில்லை? உண்மையில், நாசரேத்து இயேசு என்ற மனிதரில் கடவுள் கண்ணுக்கு தெரிபவராக வந்தார்; அவரில் கடவுள் முழுமையாக வாழ்கிறார். நாமும் எப்பொழுதும் வேறு அடையாளங்களையும், வேறு அற்புதங்களையும் தேடும் போது, அவரே உண்மையான அடையாளம் என்பதை நாம் உணர்வதில்லை, 'கடவுள் மனிதரானார்'; அவரே இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம்: கடவுளின் அன்பு அனைத்தும் ஒரு மனித இதயத்தில், ஒரு மனித முகத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.
நற்செய்தியை விளக்கிய பின்னர், திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, "விசுவாசத்தால் ஊட்டம் பெற்ற திறந்த மற்றும் எளிய இதயத்தோடு நாம் வாழும் போது, நமது வாழ்வில் கடவுள் உடனிருப்பதை நாம் கண்டுணர்ந்து அவரது திரு வுளத்தைப் பின்பற்ற முடியும் என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார்" என்று கூறினார். இறுதியாக அவர், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.