வழி தவறிப்போன ஆடுகளின் ஆயராக
இயேசு தன்னை வழங்குகிறார் - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு
நற்செய்தியில் இயேசு நல்ல ஆயராக செயல்பட்டது குறித்த கருத்தை எடுத் துரைத்தார்.
மனித குலத்தின் ஆயராக
விளங்கும் கடவுள் நம்மை நல்ல மேய்ச்சல் நிலத்துக்கு, அதாவது 'வாழ்வின்
முழுமை'க்கு அழைத்துச்செல்ல விரும்புகிறார். இன்றைய உலகில், ஒவ் வொரு
தந்தையும், ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக் காக விரும்புவது: ஒரு நல்ல
வாழ்க்கை, மகிழ்ச்சி, சாதனை. இயேசு இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளின் ஆயராக
தன்னை வழங்குகிறார். அந்த வழிதவறிய ஆடுகளின் மத்தியில் மகதலா மரியா,
நற்செய்தியாளர் லூக்கா போன்ற புனிதர்களும் இருந்தார்கள். கடவுளின் ஆழ்ந்த
குணப்படுத்தல் இயேசுவின் வழியாக வெளிப்பட்டது, அதில் உண்மை அமைதி மற்றும்
ஒப்புரவின் கனிகள் அடங்கியுள்ளன. போரின் தீய விதை மத்தியில், கடவுள்
அமைதியை உருவாக்குகிறார்.
மூவேளை செபத்துக்கு பின் திருப்பயணிகளிடம் பேசிய திருத்தந்தை, இந்த வாரம்
அமெரிக்காவின் அரோரா டென்வரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து
தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 12 பேர் கொல்லப்பட்ட இந்த நிகழ்வை
'அறிவற்ற வன்முறை' என்று அவர் விமர்சித்தார். இறுதியாக லண்டனில் ஜூலை
27ந்தேதி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றியும் பேசினார்:
"ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சர்வதேச
விளையாட்டு நிகழ் வான ஒலிம்பிக் கொண்டு வரும் அமைதி, நல்லெண்ணம் ஆகியவற்றின்
விளைவாக உலகெங்கும் அமைதியும் ஒப்புரவும் பரவ நான் செபிக்கிறேன். லண்டன்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்போர் அனைவர் மீதும் எல்லாம் வல்ல கடவுளின்
நிறைவான ஆசீரை நான் வேண்டுகிறேன்."