மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதியின்
பணியாளர்களை இறைவன் தர வேண்டும் - திருத்தந்தை
பணியாளர்களை இறைவன் தர வேண்டும் - திருத்தந்தை
லெபனான் நாட்டு திருப்பயணத்தின் இறுதி நாளான இன்று பெய்ரூட்டின் பரந்த வெளியில் திருப்பலி நிகழ்த்திய திருத் தந்தை 16ம்
பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
இயேசுவைப் பின்செல்வது என்பது ஒவ்வொருவரும் அவரவர் சிலுவையைச் சுமந்து
கொண்டு அவரின் அடிச்சுவடுகளைப் பின்செல்வதாகும். அனைவருக்கும் தன்னைப்
பணியாளராக் கிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதைத் தேர்ந்து
கொள்வது அவருக்கு நெருக்கமாக இருந்து அவரது சொற்க ளைக் கவனமுடன் கேட்டு நாம்
செய்யும் அனைத்திற்கும் அவற்றிலிருந்து தூண்டுதல் பெறுவதாகும். வருகிற
அக்டோபர் 11ந்தேதி தொடங்கும் விசுவாச ஆண்டை அறிவித்த போது ஒவ்வொரு
விசுவாசியும் இந்த உண்மையான மனமாற்றப் பாதையைத் தேர்ந்து கொள்வதற்கு தன்னை
அர்ப் பணிக்குமாறு விரும்பினேன். இயேசுவின் சாயலில் அனைத்து
கிறிஸ்தவர்களும் உண்மையான ஊழியர்களாக வேண்டும். இதுவே திருச்சபையின்
பணியாகும். தொடர் வன்முறை மரணத்தையும் அழிவையுமே விட்டுச் செல்லும்.
உலகத்தில் நீதிக்கும் அமைதிக்கும் சேவையாற்ற வேண்டிய அவசரத் தேவை
ஏற்பட்டுள்ளது. இந்த மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதி மற்றும்
ஒப்புரவின் பணியாளர்களை இறை வன் தர வேண்டுமென்று செபிக்கிறேன். இதன்மூலம்
அனைத்து மக்களும் மாண்புடன் அமைதியில் வாழ்வார்கள். கிறிஸ்தவர்கள், நன்மனம்
கொண்ட எல்லாருடன் சேர்ந்து ஒத்துழைத்து செய்ய வேண்டிய பணி இதுவே. நீங்கள்
எங்கெங்கு இருந்தாலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருங்கள் என்பதே உங்கள்
எல்லாருக்கும் நான் விடுக்கும் அழைப்பாகும். உடல் ரீதியாக அல்லது ஆன்மீக
ரீதியாக துன்பப்படும் என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்களது துன்பங்கள்
வீணாய்ப் போகவில்லை. உங்க ளது துன்பங்களோடு இயேசு அருகில் இருக்கிறார். அவர்
எப்பொழுதும் உங்களுக்கு அருகில் இருக்கிறார்.
இன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய மூவேளை செப உரை பின்வருமாறு:
கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாடிச்செல்லும் லெபனான் அன்னை மரியாவிடம்
செபிப்போம். லெபனன் மக்களாகிய உங்கள் எல்லாருக்கும், சிறப்பாக, சிரியா
மற்றும் அண்டை நாடுகளின் மக்கள் அனைவருக்கும் அமைதி எனும் கொடையை அந்த அன்னை
தமது திருமகனிடம் பெற்றுத் தருவாராக! சண்டைகளும் வன்முறையும் எவ்வளவு
துன்பங்களை வருவிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். விதவை கள் மற்றும்
அனைதைகளின் அழுகுரல்களோடு ஆயுதங்களின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே
இருப்பது வருத்தமாக இருக்கின்றது. மக்களின் வாழ்வை வன் முறையும் வெறுப்பும்
ஆக்ரமித்துள்ளது. இதற்கு பெண்களும் சிறாரும் முதலில் பலிகடா ஆகின்றனர்.
இவ்வளவு கொடுமைகள், இத்தனை இறப்புகள் ஏன்? ஒவ்வொரு மனிதரின் மாண்பும்
உரிமைகளும் மத உரிமையும் மதிக்கப்படும் விதத்தில் தீர்வு களுக்கு பணி
செய்யுமாறு அரபு நாடுகளுக்கும், அனைத்துலகச் சமுதாயத்துக்கும் அழைப்பு
விடுக்கிறேன். அமைதியைக் கட்டியெழுப்ப விரும்புகிறவர்கள், மற்றவரில் தீமை
ஒழிக்கப்படுவதைக் காண வேண்டும். இது எளிதானதல்ல, ஆயினும் அமைதி யைக்
கட்டியெழுப்ப இது தேவை. உங்களது லெபனன் நாட்டுக்கும், சிரியாவுக்கும்,
மத்திய கிழக்குக்கும் அமைதிநிறை இதயங்கள், ஆயுதங்கள் மௌனம் அடைவது மற்றும்
எல்லா வன்முறையும் நிறுத்தப்படும் கொடையை இறைவன் அருள்வாராக! அனைவரும்
சகோதரர்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வார்களாக! முதுபெரும் தலைவர்கள்
மற்றும் ஆயர்களுடன் இணைந்து மத்திய கிழக்குப் பகுதியை அன்னை மரியாவிடம் நான்
ஒப்படைக்கின்றேன்.