மனிதர் இறைவனின் குரலைக் கேட்கச்
செய்யவே இயேசு மனிதரானார் - திருத்தந்தை
செய்யவே இயேசு மனிதரானார் - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை இல்லமான
காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட், காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு குணமாக் கிய
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற்கு 7:31 -37) மையமாக வைத்து மூவேளை செப
உரை யாற்றினார்.
இன்றைய நற்செய்தியின் மையமாக ஒரு சிறிய, மிகவும் முக்கியமான சொல் அமைந்துள்ளது. ஒரு வார்த்தை, அதன் ஆழ்ந்த பொருள் இவ்வுலகில் கிறிஸ்துவின் மறைப்பணியை முழுமையாக தொகுத்து தந்துள்ளது. இயேசு உச்ச ரித்த அதே மொழியிலேயே, நற்செய்தியாளர் மாற்கு அந்த வார்த்தையைத் தருவதால் அது நமக்கு உயிரோட்டமுள்ளதாக விளங்குகிறது. அந்த வார்த்தை 'எப்பத்தா' அதா வது 'திறக்கப்படு.' இந்த வார்த்தை உள்ள பகுதியைப் பார்ப்போம். இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்து குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார் (மாற்கு7:35).
'எப்பத்தா' என்று இயேசு சொன்னவுடன் அந்த மனிதரின் காதுகள் திறக்கப்பட்டன, நாவும் கட்டவிழ்ந்தது, இந்தக் குணப்படுத்தலால் அந்த மனிதர் உடனே பிறருக்கும் உலகினருக்கும் திறந்த உள்ளம் கொண்டவரானார், அவரால் புதிய வழியில் மற்ற வரோடு தொடர்பு கொள்ள முடிந்தது. காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்த நிலை அந்த மனிதரின் உடல் உறுப்புக்களை மட்டும் சார்ந்ததாக இல்லாமல், அவரது அகவாழ்வையும் மூடியிருந்ததை நாம் அறிகிறோம். பாவத்தால் அகவாழ் வில் காது கேளாமலும், பேச முடியாமலும் இருக்கும் மனிதர் இறைவனின் குரலைக் கேட்குமாறுச் செய்யவே இயேசு மனிதனானார். மேலும், குணமடைந்த மனிதர் அன்பின் குரல் பேசுவதைத் தனது இதயத்தில் கேட்கவும், இறைவனோடும் மற்றவ ரோடும் தொடர்பு கொள்வதற்கு அன்பின் மொழியைப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வும் இயேசு மனிதனானார். இதனாலே திருமுழுக்கு அருட்சாதனச் சடங்கில் 'எப்பத்தா' என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அருட்சாதனத்தின் மூலம் மனிதர் தூய ஆவியை சுவாசித்து பேசுவதற்குத் தொடங்குகிறார்.

இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.