Wednesday, December 26, 2012

டிசம்பர் 26, 2012

நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட விரும்புவோருக்கு
புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித ஸ்தேவான் திருவிழாவான இன்று வத்திக் கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாறு மூவேளை செப உரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விற்கு அடுத்த நாள், திருச்சபையின் முதல் மறை சாட்சியாம் புனித ஸ்தேவான் திருவிழாவைச் சிறப் பிக்கின்றோம். புனித ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராகவும், தூய ஆவியின் வல்லமையை நிறைவாய் பெற்றவராகவும் இருந்தாரென திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைக்கின்றது. அபாயகரமான சூழல்களிலும், பாதுகாப்பற்ற நிலைகளிலும் அச்சமின்றி இயேசுவுக்கு சான்று பகர விசுவாசிகள் அழைக்கப் படுகின்றனர். ஏனெனில், "அஞ்சவேண்டாம், அந்நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது உங்களுக்கு அருளப்படும். பேசுவது நீங்களல்ல, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற இயேசுவின் வாக்குறுதி இப்புனிதரில் நிறைவேறியது.
   தூய ஆவியின் வல்லமையின் துணைகொண்டு செயலாற்றி, பேசி, மரித்த திருத்தொண்டர் ஸ்தேவான், இறுதி நிமிடம் வரை இயேசுவுக்குச் சான்று பகர்பவராக இருந்தார். அவர், தன் மரணத்திலும் இயேசுவின் மாதிரியை பின்பற்றினார். இயேசு சிலுவையில் தொங்கியபோது செபித்ததுபோல் இவரும் தன் ஆவியை இயேசுவின் கைகளில் ஒப்படைப்பதாகக் கூறி உயிர் விட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத் துன்புறுத்தியவர்கள் சார்பில் இறைவனிடம் மன்றாடினார். அவர் சாகும் வேளையில் வானத்தை உற்று நோக்கியபோது, வானம் திறந்திருப்பதையும் மானிட மகன் கடவு ளது வலப்பக்கத்தில் நிற்பதையும் கண்டார்.
   கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மகிழ்வில் இருக்கும் நாம், புனித ஸ்தேவானைப்போல் இறைமகனில் நம் பார்வையைத் திருப்பி, இறைவன் மனுவுருவான மறையுண்மை குறித்து ஆழ்ந்து தியானிப்போம். திருச்சபை வழங்கும் அருளடையாளங்கள் வழி ஊக்கம்பெற்று, இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய இணைப்பைக் கொண்டுள்ள நம் மில் தன் மீட்புபணிகளைத் தொடர அவர் ஆவல் கொள்கிறார். புனித ஸ்தேவானைப் போல் நாமும் ஒளிக்கென நம் வாழ்வைத் திறந்து, நன்மையின் பாதையில் நடந்து, இறையன்பின் திட்டத்திற்கு இயைந்த மனித குலத்தைப் படைக்க உதவுவோம்.
   இறுதியாக, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். எடுத்துரைக்கும் முறைகளும் தொழில்நுட்பங்களும் இப்பணியில் ஓரளவு உதவினாலும், தூய ஆவியின் வழிநடத் துலின் இன்றியமையாமைக் குறித்தும் இப்புனிதர் நமக்குக் காட்டுகின்றார். இப்புதிய நற்செய்தி அறிவித்தல், இயேசுவை உயிரூட்டமுள்ள முறையில் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கின்றது. இந்த நம்பிக்கையின் ஆண்டில் இயேசுவுக்குத் துணிவுடன் சான்று பகரும் மக்கள் அதிகரிக்க உதவுமாறு அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Tuesday, December 25, 2012

டிசம்பர் 25, 2012

ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi)
திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தி

உரோமையிலும் உலகம் முழுவதிலும் இருக்கின்ற சகோதர சகோதரிகளே!
   உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள். இந்த நம்பிக்கை ஆண்டில் என் கிறிஸ்துமஸ் வாழ்த்து, திருப்பாடலி லிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் வருகிறது. 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்'. உண்மை யில் பார்க்கப்போனால், இத்திருப்பாடல் வார்த்தை களில் வருங்காலத்தைக் காண்கிறோம். 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது'. வாக்குறுதியாய் வரும் இது, ஏனைய வார்த்தை வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகிறது. அதாவது, 'பேரன்பும் உண்மையும் ஒன் றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண் ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழிவகுக்கும்' (திருப்பா. 85:11-14) என்பவையே அந்த வாக்குறுதிகள்.
   இன்று இந்த இறைவாக்கு நிறைவேறிற்று. பெத்லகேமில் கன்னி மரியாவிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்தமிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக்கியது. புனித அகுஸ்தீனும் மகிழ்வோடு சுருக்கமாக விளக்குகிறார்: உண்மை என்றால் என்ன? இறை மகன். உலகம் என்றால் என்ன? உடல் சார்ந்தது. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், ஏன் உண்மை இவ்வுலகில் முளைத்தது என பார்க்கும் போதும்... உண்மை கன்னி மரியாவிடம் பிறப்பெடுத்தது. கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஒன்றில் அவர் வழங்கிய உரையில், "ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இந்த விழாவில் நாம் இறைவாக்கு நிறைவேறியதைக் கொண்டாடுகிறோம். 'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது; விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது'. இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை உலகிலிருந்து முளைத்தெழுந்தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமையையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது, ஏனெனில் இது ஒரு பெண்ணின் கை களிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டிலில் படுத்திருக்கின்றது. மேன்மை சிறப்பு வாய்ந்த இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப்பெடுப்பதால் என்ன பயன்? இதனால் அவருக்கு எவ்வித பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ளதாகும்" என்கிறார்.
   'நாம் நம்பினால்' இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம்பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற் றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் நான் விசுவாசக் கதவுகளைத் திறக்கவில்லையெனில் இதே கடவுள் என் இதயத்திற்குள் நுழைய இயலாது. மறுக்கவும் துணியும் பெருவல்லமை குறித்து நமக்கு அச்சம் வரலாம். இறைவனுக்கும் திறக்க மறுக்கும் சக்தி குறித்து பயம் எழ லாம். ஆனால் இந்த எண்ணத்தை விரட்டியடிக்கும் உண்மை உள்ளது, அச்சத்தை மேற்கொள்ளும் நம்பிக்கை உள்ளது. ஆம். உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள் ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது. ஆம், நல்ல நிலமுள்ளது, அது நலமான நிலம், அனைத்து சுயநலங்களிலிருந்தும், திறக்க மறுக்கும் நிலைகளிலிருந்தும் விடுதலை தருகிறது. இவ்வுலகிலுள்ள ஒரு நிலம் கடவுள் நம்மிடையே குடிகொள்ள தயாரிக்கப் பட்டுள்ளது. இவ்வுலகில் அவரின் இருப்பைக் கொண்டுள்ள பூமி. அந்த இடம் இன்றும், இந்த 2012லும் இருக்கிறது. இந்த நிலமே உண்மையை முளைத்தெழ வைத்தது. ஆகவே, உலகில் நம்பிக்கை உள்ளது, நம்பத்தகும் நம்பிக்கை, துன்ப வேளைகளிலும், மிகவும் கடினமான சமயங்களிலும்கூட! அன்பையும் நீதியையும் அமைதியையும் கொண்டதாய் அந்த உண்மை முளைத்தெழுந்தது.
   ஆம். சிரியா நாட்டு மக்களுக்காக அமைதி மொட்டவிழ்கிறது, ஆழமாகக் காயமுற வும், பிரிவினைகளைச் சுமக்கவும் காரணமாகும் மோதல், இங்கு, உதவிகள் இல்லா மக்களைக்கூட விட்டுவைக்காமல், அப்பாவி மக்களைப் பலிவாங்கி நிற்கிறது. இந்த இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட, மீண்டுமொரு முறை அழைப்பு விடுக்கிறேன். அகதி களுக்கும் குடிபெயர்ந்தோர்க்கும் உதவிகள் வழங்கப்படவும், பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணவும் விண்ணப்பிக்கிறேன். மீட்பர் பிறந்த மண்ணில் அமைதி மலர்கிறது. இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாய் நிலவும் பிரிவினைகளையும் மோதல்களையும் முடிவுக்கு கொணரவும், பேச்சுவார்த்தைகளின் பாதையில் தீர்மானத்துடன் நடக்கவும் அவரே கொடைகளை வழங்குகிறார்.
   வடஆப்ரிக்க நாடுகளில், புதிய வருங்காலத்தைத் தேடும் ஆழமான மாற்றத்தின் வழியாக குறிப்பாக எகிப்தில் -இயேசுவின் குழந்தைப்பருவத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த அன்புநிறை பூமியில்- குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீதி, விடுதலை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு ஆகியவைகளின் அடிப்படையில் சமூகங்களை எழுப்புவார்களாக!
   பெரிய ஆசியக் கண்டத்தில் அமைதி முளைத்தெழுகிறது. இப்பூமியில் வாழும் எண் ணற்ற மக்களை குழந்தை இயேசு கருணையுடன் நோக்குகிறார், குறிப்பாக அவரில் நம்பிக்கை கொள்வோரை. அமைதியின் மன்னர் சீன மக்கள் குடியரசின் புதிய தலை வர்கள் மீதும் பார்வையைத் திருப்புகிறார், அவர்கள் எதிர்நோக்கும் பெரும் சவால்களை மனதில்கொண்டு. மதங்களின் பங்களிப்பை அந்நாடு ஊக்குவிப்பதாக, அதுவும் அந்நாட் டின் உன்னத மக்கள் மற்றும் உலகம் முழுமையின் நலனுக்காக ஒருவர் ஒருவருக் கான மதிப்பில், அவை, நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதாக!
  கிறிஸ்துவின் இப்பிறப்புப் பெருவிழா மாலி நாட்டில் அமைதியும், நைஜீரியாவில் இணக்க வாழ்வும் திரும்பி வருவதை ஊக்குவிப்பதாக. நைஜீரியாவில் கொடூரத் தீவிர வாதத் தாக்குதல்கள் தொடர்ந்து பலிவாங்கி வருகின்றன, குறிப்பாக கிறிஸ்தவர்களை! நம் மீட்பர் உதவிகளை வழங்கி ஆறுதலளிக்கிறார், காங்கோ குடியரசின் கிழக்கில் உள்ளவர்களுக்கு. கென்ய மக்களுக்கு அமைதி எனும் கொடையை வழங்குகிறார். இங்கு இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் குடிமக்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அழிவுக்குள்ளாக்குகின்றன.
   இலத்தீன் அமெரிக்காவில் இவ்விழாவைச்சிறப்பிக்கும் விசுவாசிகளை குழந்தை இயேசு ஆசீர்வதிக்கிறார். அவர்களின் மனிதாபிமான மற்றும் கிறிஸ்தவ குணநலன்கள் வளர உதவுகிறார். தங்கள் குடும்பங்களையும் குடியிருப்புகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரமளிக்கிறார். குற்றங் களுக்கு எதிரான போர் மற்றும் வளர்ச்சி குறித்த அர்ப்பணத்தில் ஆட்சியாளர்களுக்குச் சக்தி வழங்குகிறார்.
   அன்பு சகோதர சகோதரிகளே! அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித்தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனித உடல் எடுத்துள் ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றினார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நில மும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப்பட்டு, முளை விடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!

Wednesday, December 19, 2012

டிசம்பர் 19, 2012

மரியாவின் விசுவாசம் இறைவனின் வாக்குறுதியில்
முழு நம்பிக்கை கொள்வதாக இருந்தது - திருத்தந்தை

   திருவருகைக் காலத்தில் கிறிஸ்து பிறப்பு விழா வுக்கு முந்தைய இவ்விறுதி புதனன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த திருப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங் கிய பொது மறைபோதகத்தில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்த தன் சிந்தனைகளை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பகிர்ந்து கொண்டார்.
   நம்பிக்கை ஆண்டின் நம் மறைக்கல்வி போதனை யில், இந்த திருவருகைக் காலத்தின் இறுதி நாட்க ளில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்து சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக்கும். ஆண்ட வரின் தூதர் கபிரியேல் கிறிஸ்து பிறப்பு பற்றிய மங்கள வார்த்தையை அறிவித்தபோது, அன்னை மரியாவை நோக்கி "கடவுள் உம்மோடு" எனக்கூறி, அவரின் மகிழ்ச்சிக் கொண் டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த மகிழ்வானது, இறைமக்களின் மெசியா குறித்த நம்பிக்கையோடு தொடர்புடையதாகும். சீயோனின் மகளாம் இறைமக்களின் இந்த நம்பிக்கை, தற்போது அன்னை மரியாவில் நிறைவு பெறுகிறது. இறைவார்த் தைக்கு கீழ்ப்படிய அன்னை மரியாவை வடிவமைத்து அவர் இதயத்தை நிறைத்த அருளின் கனியே இது! ஆபிரகாமைப் போல் அன்னை மரியாவின் விசுவாசமும், எதுவும் தெளிவாகத் தெரியாத நிலையிலும் இறைவனின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொள்வதில் இணைந்ததாக இருந்தது.
   இறைவனின் திட்டங்கள் சில வேளைகளில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக, தெளிவற்றதாக, சிலுவை எனும் மறையுண்மையைத் தழுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை நம்மைப் போலவே அன்னை மரியாவும் தன் வாழ்வில் உணர்ந்திருத்தார். மங்கள வார்த்தை அறிவிப்பின்போதும் அன்னை மரியா, வான தூதரின் வார்த்தைகளைத் தன் இதயத்தில் நிறுத்தி தியானித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. விசுவாசம் என்பது இறைவிருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிதலுடன் இருக்கும் அதேவேளை, அவ்விருப்பத்தை உய்த்துணரவும், புரிந்துகொள்ளவும், ஏற்க வும் தினமும் முயல வேண்டும் என்பதை அன்னைமரியின் எடுத்துக்காட்டு நமக்கு எடுத்துரைக்கின்றது. இந்த புனித காலத்தில் நம் இதயங்களிலும், நம் இந்த உலகிலும் இறையருளுக்கான கதவுகளைத் திறக்கும் தாழ்ச்சியுடைய, நம்பிக்கைமிகு விசுவா சத்தில் நாம் வளர, இயேசு கற்பித்த செபம் நமக்கு உதவுவதாக!
   இவ்வாறு, இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, December 16, 2012

டிசம்பர் 16, 2012

நமது நடத்தை கடவுளின் திருவுளத்தை பின்
தொடர்வதை நிரூபிக்க வேண்டும் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப் பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருவருகைக்காலத்தின் இஞ்ஞாயிறு நற்செய்தி, யோர்தான் நதியில் திருமுழுக்கு பெறச் சென்ற மக்களுக்கு போதித்த திரு முழுக்கு யோவானை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. யோவா னின் அழுத்தமான வார்த்தைகள், மெசியாவின் வருகைக்காக ஒவ்வொருவரும் மனம்மாற அவசரப்படுத்தின. "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று சிலர் அவரிடம் கேட்டனர். குறித்த நேரத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல் மிகவும் சுவாரசியமானது.
   முதல் பதில் மக்கள் கூட்டத்துக்கு பொதுவாக வழங்கப்படுகிறது. திருமுழுக்காளர் கூறுகிறார்: "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்." பிறரன்போடு வாழும் நீதியின் சூழலை நாம் இங்கு காண முடிகிறது. தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்களுக் கும், பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள சமமின்மையை போக்க நீதி அழைப்பு விடுக்கிறது. ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொள்ளவும், அவர்களது தேவைகளை சந்திக்கவும் பிறரன்பு அவசரப்படுத்துகிறது. நீதியும் அன்பும் ஒன்றை ஒன்று எதிர்க்கவில்லை, மாறாக ஒன்றுக்கொன்று தேவையாகவும் உதவியாகவும் இருக்கின்றன. "மிகவும் நீதியுள்ள சமூகத்திலும், எப்பொழுதும் அன்பு தேவை. ஏனெ னில், உலக தேவைகளுக்கான சூழ்நிலைகளில், அடுத்திருப்பவரின் நிலையான அன்பு உதவி இன்றியமையாததாக உள்ளது."
   அடுத்தது இரண்டாவது பதிலை நோக்குவோம், அது உரோமையருக்காக வரி வசூலிப்பவர்களிடம் நம்மைத் திருப்புகிறது. வரி வசூலிப்பவர்கள் தங்கள் பதவியை கொள்ளையடிக்க பயன்படுத்தியதால் வெறுப்புடன் நோக்கப்பட்டார்கள். திருமுழுக்கா ளர் அவர்களிடம், வேறு எதைப் பற்றியும் பேசாமல் அவர்களின் பணிகளை மாற்றச் சொல்கிறார். கடவுளின் பெயரால் வந்த இறைவாக்கினர், விதிவிலக்கானவற்றை செய்யுமாறு கேட்கவில்லை, மாறாக அனைத்துக்கும் மேலாக கடமையை நேர்மை யாக நிறைவேற்றச் சொல்கிறார். நிலைவாழ்வை அடைவதற்கான முதல் படியாக எப்பொழுதும் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், இங்கு ஏழாவது கட்டளை: "களவு செய்யாதே."
   மூன்றாவது பதில் படைவீரர்களைப் பற்றியது, அதிகாரம் படைத்த மற்றொரு வகை யினர், அதை தவறாக பயன்படுத்த சோதனைக்கு ஆட்படுபவர்கள். படைவீரர்களிடம் யோவான் கூறுகிறார்: "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார் மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்." பிற ரிடம் நேர்மையாகவும் மரியாதையோடும் நடந்து கொள்வதில் ஒவ்வொருவரிடமும், குறிப்பாக அதிக பொறுப்பு உள்ளவர்களிடம் மீண்டும் மாற்றம் தொடங்க வேண்டும்.
   இந்த உரையாடல்களை முழுமையாக கவனித்தால், யோவானின் வார்த்தைகளில் உள்ள நிலைத்தன்மை புரியும்: கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நமக்கு தீர்ப்பு வழங்குவார் என்பதால், நமது நடத்தை அவரது திருவுளத்தை பின் தொடர்வதை நிரூபிக்க வேண்டும். திருமுழுக்காளரின் அடையாளங்கள் நமது சிக்கலான உலகின் இன்றைய நாளிலும் பொருந்தும், இந்த நடத்தை விதிகளை உள்வாங்கினால் அனைத்தும் சிறப்பாக அமையும். கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பு மனமாற்றத்தின் நற்கனிகளைத் தர, தூய மரியாவின் பரிந்துரை வழியாக ஆண்டவரை வேண்டுவோம்.
   இன்றைய மூவேளை செபத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்து கிறேன். வெள்ளிக்கிழமை நியூட்டனில் நிகழ்ந்த அறிவற்ற வன்முறையால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக குழந்தையை இழந்தவர்களுக்கு செபத்தின் வழியாக என் அருகாமையை உறுதி அளிக்கிறேன். ஆறுதலின் கடவுள் அவர்களது இதயத்தைத் தொட்டு, அவர்கள் வலி யைக் குறைப்பாராக! இந்த திருவருகைக்காலத்தில், நம்மை செபத்திலும், அமைதி பணிகளிலும் ஆர்வமுடன் அர்ப்பணிப்போம். இந்த துயர நிகழ்வால் பாதிக்கப்பட்ட வர்கள் மீதும், உங்கள் ஒவ்வொருவர் மீதும், கடவுளின் நிறைவான ஆசீர் பொழியப்பட நான் வேண்டுகிறேன்!

Wednesday, December 12, 2012

டிசம்பர் 12, 2012

கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு
திட்டத்தில் அவர் நம்மில் ஒருவரானார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளுக்கு ஒத்திணங்கிச் செல்லும் விதமாக இவ்வார புதன் பொது மறைபோதகத்தில், இறைவ னின் மீட்பு திட்டம் குறித்த தனது கருத்துக்களை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக் கல்வி போதகத்தின் தொடர்ச்சியாக இன்று, கடவுள் இவ்வுகிற்கு தன்னையே வெளிப்படுத்தியது மற் றும் அவரின் மீட்பு திட்டம் குறித்து நோக்குவோம். இஸ்ரயேலர்களின் வரலாற்றில் இது எவ்வகையில் வளர்ச்சியடைந்தது என்பது குறித்து திருவிவிலியம் நமக்குக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில், தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் வழியாக கடவுள் வரலாற்றில் நுழைந்ததை காண்கிறோம். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், மையமாக திகழ்ந்த விடுதலைப்பயண நிகழ்வில் கடவுளின் வல்லமை சிறப்பாக வெளிப்பட்டது. பாஸ்கா நிகழ்வு இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கடவுளின் நினைவாக தொடர்ந்தது. கடவுள் எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை விடுவித்ததால், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு சென்று அவரை உண்மையான ஒரே கடவுளாக வழிபட்டார்கள். பின் வந்த நூற்றாண்டுகளில் இஸ்ர யேல் மக்கள் இறைவனின் இந்த மீட்பு செயல்களைத் தங்கள் மனதிற்குள் மகிழ்ச்சி யுடன் நினைத்து கொண்டாடி வந்தனர். மீட்பின் வரலாற்றில் கடவுளது செயலைப் புகழ்ந்துரைக்கும் கன்னி மரியா, "மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமை யும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண் டுள்ளார்" என்கிறார். கடவுளின் விடுதலை அளிக்கும் திட்டம் தொடர்வதால், மனிதர் தமது ஆண்டவருக்கு பணிந்து, தனது நம்பிக்கையாலும் அன்பு செயல்களாலும் பதி லளிக்க வேண்டும். கடவுள் படைப்பு செயலில் மட்டுமின்றி, நமது வரலாற்றில் நுழைந்ததன் வழியாகவும் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் உருவாக காரண மான வாக்கு, கடவுளின் உண்மை முகத்தை காட்டும் வகையில் இயேசுவாக மனித உடலெடுத்தார்.
   கடவுள் தொடக்கத்தில் இருந்தே தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருக்க மனிதரை அழைத்துள்ளார். மனிதன் அவருக்கு கீழ்ப்படிய மறுத்து, அவரது நட்புறவை இழந்தபோதிலும், கடவுள் அவனை ஒருபோதும் மரணத்தின் ஆற்றலுக்கு கையளிக் கவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் மனிதரோடு உடன்படிக்கை செய்து கொண் டார். முதலில் நோவா வழியாகவும், பின்பு ஆபிரகாம் வழியாகவும், விடுதலைப்பய ணத்தின்போது சீனாய் மலையில் மோசே வழியாகவும் கடவுள் உடன்படிக்கைகளை செய்து கொண்டார். அதன் பிறகு மனித குலம் அனைத்தும் எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக் கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத் திட்டம், இறைமகனின் வருகையில் தன் உச்சநிலையை அடைந்தது. இறுதியாக, வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு திட்டத்தில், அவர் நம்மில் ஒருவரானார். இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டது குறித்து ஆழ்ந்து தியானிக்கவும், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். நமது விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழியாக ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் உடனிருப்புக்கு சாட்சிகளாக திகழவும், இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும், பெத்லகேம் குடிலை நிறைத்த ஒளியை நம் வாழ்வில் பிரதிபலிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். உலக வாழ்வின் துன்பங் களில் இயேசுவின் அன்னையாம் மரியா உங்களுக்கு துணையாக இருந்து ஆறுதல் அளிப்பாராக!
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, December 9, 2012

டிசம்பர் 9, 2012

இயேசுவை வரவேற்க யோவானின் குரலுக்கு
செவிசாய்ப்பதே நமது நோக்கம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்துகளை எடுத் துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இந்த திருவருகைக்காலத்தின் திருவழிபாட்டில் கன்னி மரியா, திருமுழுக்கு யோவான் ஆகிய இருவ ரும் மெசியாவின் வருகைக்காக தயார் செய்கிறார்கள். அனைத்து நற்செய்திகளுமே இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் திரு முழுக்கு யோவானை அவரது முன்னோடியாக காட்டுகின்றன. புனித லூக்கா இந்த இருவருக்கும், அவர்களது பணிக்கும் இடையே உள்ள தொடர்பையும் விளக்குகிறார். குருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செக்கரியா மற்றும் எலிசபெத்தின் மகனான யோவான், இறைவாக்கினர்களில் இறுதியானவராக மட்டுமின்றி, பழைய உடன்படிக்கையின் குருத்துவத்தை அடையாளப்படுத்துபவராகவும் இருப்பதால், இயேசுவால் தொடங்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் வழிபாட்டுக்கு மக்களைத் தயார் செய்கிறார். லூக்கா திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை வரலாற்று சூழ் நிலையையும் விவரிக்கிறார்: 'திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார் ... அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.' (லூக்கா 3:1-2) அக்காலத்தவர்களால் கவனிப்படாத நிலையிலும் உண்மையான மாபெரும் நிகழ்வாகிய கிறிஸ்துவின் பிறப்பு, இத்தகைய வரலாற்று கட்டமைப்பிற்குள் இருந்தது.
   "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மை யாக்குங்கள்" (லூக்கா 3:4) என்று பாலைநிலத்தில் முழங்கும் குரலாக திருமுழுக்கு யோவான் குறிப்பிடப்படுகிறார். அந்த குரல் வார்த்தையை அறிவிக்கிறது, ஆனால் இங்கு பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவான், கடவுளின் வாக்கைப் பெற்றார். எனவே, கிறிஸ்துவை தொடர்புடைய பணியில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: யோவான் கடந்து போகும் குரலாக இருந்தார், இயேசுவோ தொடக்கம் முதலே இருந்த நிலையான வாக்காக இருக்கிறார். குரலில் இருந்து வார்த்தையை (வாக்கை) எடுத்துவிட்டால் என்ன மிஞ்சும்? ஒரு மங்கலான ஒலிதான். வார்த்தை இல்லாத குரலும் செவிகளை அடையும், ஆனால் உள்ளத்தை கட்டியெழுப்பாது." நம்மை மீட்கும் வார்த்தையாகிய இயேசுவுக்கு இடம் கொடுத்து, நம் உள்ளத்தில் வரவேற்க அந்த குரலுக்கு செவி சாய்ப்பதே இன்று நமது நோக்கம். கடவுளின் மீட்பை பெத்லகேமின் எளிய தொட்டி லில் காண, இந்த திருவருகைக்காலத்தில் விசுவாச கண்களோடு தயாராவோம். நாம் இன்பம் தேடும் இந்த நுகர்வு சமூகத்தில், இன்றியமையாத ஒரு வழியில் வாழ திருமுழுக்கு யோவான் நமக்கு கற்பிக்கிறார். அதன் மூலம், கிறிஸ்து பிறப்பை வெளி கொண்டாட்டமாக அன்றி, மக்களுக்கு அமைதியையும், வாழ்வையும், உண்மையான மகிழ்ச்சியையும் கொணர வரும் இறைமகனின் விழாவாக சிறப்பிக்க முடியும்.
   இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக காத்திருக்கும் நாம் அவரது வழியைத் தயார் செய்ய, மனம் வருந்தி தூய்மையாவதன் தேவையை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரது உண்மை வீடாகிய விண்ணகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு இயேசுவே ஒரே வழி. உங்களையும், உங்களது அன்புக்குரியவர் களையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

Wednesday, December 5, 2012

டிசம்பர் 5, 2012

நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் இறைவனுக்கு
நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு முன் தயாரிப்புகளின் காலமான திருவருகைக் காலத்தின் முதல் புதனன்று வத்திக்கானில் திருப் பயணிகளை சந்தித்த திருத்தந்தை, திருவருகைக் காலத்தின் சிறப்புக்கள் குறித்து எடுத்துரைத்தார்.
   இந்த 'நம்பிக்கை ஆண்டில்' நம் மீட்பு குறித்த இறைத்திட்டத்தின் மகத்துவத்தை ஆழ்ந்து சிந்தித்து திருவருகைக்காலத்தை தொடங்குவோம். இறைவ னின் சொந்த பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், உலகம் தோன்றுவதற்கு முன்னரே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந் தெடுத்தார் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின் தொடக்கத்தில் வாசிக்கின்றோம். இத்திருமுக பகுதி, இறைவனின் கருணைமிகு அன்பை புகழ்ந்து பாடுகின்றது. காலநிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தை யுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டமாகும். தனது இத்திட்டத்தை இறைவன் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி யுள்ளார். இறைமகனின் மனித பிறப்பிலும் தூய ஆவியை பொழிந்ததிலும் அவ் வெளிப்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன. இறைவன் தம் மகன் இயேசுவில் தன்னை வெளிப்படுத்தியது நம் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களோடுத் தொடர்புடை யது. அதேவேளை, நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் நம்மை இறைவனுக்கு அர்ப் பணிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வீக வெளிப்பாடுகளுக்கு நம் மனம் மற்றும் விருப்பத்தின் சுதந்திர இசைவாக, நம் வாழ்வு மற்றும் நம்மைச் சுற்றியி ருக்கும் உலகின் உண்மை நிலைகளை புதிய வழிகளில் காண்பதற்கு உதவும் மனமாற்றத்திற்கு விசுவாசம் அழைப்பு விடுக்கிறது. இத்திருவருகைக்காலத்தில், இறைவனின் அன்பு திட்டத்தின் உள்ளழகைக் குறித்து மேலும் ஆழமாகத் தியா னிப்போம். அதே நேரம், இவ்வுலகில் இறைவனின் மீட்புத் தொடர்புடைய உடனி ருப்பின், வாழும் அடையாளமாக இருக்க முயல்வோம்!
   இவ்வாறு தன் பொதுமறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, December 2, 2012

டிசம்பர் 2, 2012

கிறிஸ்துவுக்கு பகர்ந்த சான்று தேவசகாயம் பிள்ளை
நமக்கு ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று திருச்சபை ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை, விசுவாச ஆண்டோடு இணைந்து தொடங் குகிறது. திருவருகை காலத்தின் நான்கு வாரங்கள், மனித உடலேற்பு மறை பொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்து செல்கிறது. திருவருகை என்பதன் பழைய பொருள் அரசர் அல்லது பேரரசரின் சந்திப்பு என்பதாகும்; கிறிஸ்தவ மொழியில் இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறைபொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இந்த இரண்டு தருணங்களும் கால வரிசையில் தொலைவில் இருந்தாலும், படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மரணம் மற்றும் உயிர்ப்பின் வழி யாக, இயேசு ஏற்கனவே மனிதரையும், அனைத்துலகையும் உருமாற்றி விட்டார். ஆனால் முடிவு வருவதற்கு முன், அனைத்து நாடுகளிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென இயேசு கூறியிருக்கிறார். ஆண்டவரின் வருகை தொடர்கிறது, அவரது உடனிருப்பால் இந்த உலகம் நிரப்பப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து வின் வாக்களிக்கப்பட்ட மணமகளாம் திருச்சபை, ஆண்டவரோடு ஒன்றித்து, ஏற் கனவே தொடங்கிவிட்ட ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக உழைக்கிறது.
   ஆண்டவரின் வருகைக்கு தயாராக இருக்கும் வகையில், நல்லொழுக்கத்தைப் பின் பற்றி வாழ வேண்டும். லூக்கா நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்குக் கூறுகிறார்: "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு ... எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றா டுங்கள்'' (லூக்கா 21:34,36) எனவே, எளிமையும் செபமும் தேவை. திருத்தூதர் பவுல், நம் உள்ளங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, நமக்குள் அனைவருக் காகவும் அன்பில் வளர்ந்து பெருக அழைப்பு விடுக்கிறார். உலகின் குழப்பங்கள், அலட்சியம் மற்றும் உலகப்போக்குகளுக்கு நடுவில், கிறிஸ்தவர்கள் கடவுளிட மிருந்து வரும் மீட்பை ஏற்றுக்கொண்டு, மலை மேல் அமைந்துள்ள நகரைப் போன்று பல வகையான வாழ்க்கை முறைகளில் சான்று பகர்கிறார்கள். "அந்நாள்களில் எருசலேம் பாதுகாப்புடன் வாழும்; மேலும், 'ஆண்டவரே நமது நீதி' என்னும் பெயரால் அழைக்கப்படும்" என்று இறைவாக்கினர் எரேமியா (33:16) அறிவிக்கிறார். வரலாற்றில் செயல்பட்டும் முழுமையாக உணரப்படாத கடவுளின் அன்புக்கும், நீதிக்கும் அடை யாளமாக நம்பிக்கையாளர்களின் சமூகம் இருக்கிறது. கன்னி மரியாவின் வழிகாட் டுதலால், நம் ஒவ்வொருவரிடமும் கடவுளின் அன்பு, நீதி மற்றும் அமைதியின் அரசு விரிவடையட்டும்!
   அன்பு சகோதர சகோதரிகளே, இன்று இந்தியாவின் கோட்டாறு மறைமாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொதுநிலை விசுவாசியான தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திருச்சபையின் மகிழ்ச்சி யில் நாமும் இணைவதோடு, அந்த பெரிய நாட்டின் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தை புதிய அருளாளர் பாதுகாக்கவும் செபிப்போம். தேவசகாயம் பிள்ளையின் அருளாளர் பட்ட விழாவை சிறப்பிக்கும் கோட்டாறு மக்களை நான் சிறப்பாக வாழ்த்துகிறேன். கிறிஸ்துவுக்கு அவர் பகர்ந்த சான்று, இந்த திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவின் வருகைக்கான விழிப்புணர்வுக்கு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. நமது வாழ்வு மேலும் கிறிஸ்துவை மையப்படுத்தியதாக அமைய இந்த புனித காலம் நமக்கு உதவட்டும். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வ திப்பாராக!