செபம்

புனித தெரேசாவின் நவநாள் செபம்
   குழந்தை இயேசுவின் புனித தெரேசாவே, சிறிய நறுமண மலரே, அன்பினால் பற்றியெரிந்த கன்னியர் மாமணியே, துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, அண்டி வந்தவர்களை கைவிடாத உதவியாளரே, அம்மா, பாவி நான் உம்மை நம்பி வந்தேன். நான் கேட்கும் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயையுடன் இயேசுவின் திரு இதயத்தினின்று பெற்றுத் தந்தருளும். -ஆமென். 
(விண்ணப்பத்தை இங்கே குறிப்பிடவும்)
இயேசுவின் சிறுமலராகிய புனித தெரேசாவே, 
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறையன்பினால் பற்றியெரிந்த புனித தெரேசாவே, 
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செப, தவ வாழ்வில் சிறந்து விளங்கிய புனித தெரேசாவே,
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைத் திருவுளத்திற்கு உம்மை முற்றிலும் கையளித்த புனித தெரேசாவே,
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பொறுமையைக் கடைபிடித்த புனித தெரேசாவே, 
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனிடத்தில் வல்லமையுள்ள புனித தெரேசாவே, 
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
விண்ணுலகினின்று ரோசா மலர் மாரிப் பொழிகின்ற புனித தெரேசாவே, 
   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.