Thursday, March 29, 2012

மார்ச் 28, 2012

கிறிஸ்துவை கொண்ட சமுதாயம் மனிதநேயம்
மிகுந்ததாக மாற்றம் பெறும் - திருத்தந்தை

   இப்புதன் காலை கியூபா தலைவர் பிடெல் காஸ்ட்ரோ உடனான சந்திப்புக்கு பிறகு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வின் ஹவானா நகரில் அமைந்துள்ள புரட்சி வளாகத்திற்கு திருப்பலி நிறைவேற்றுவதற் காக சென்றார். இவ்வளாகத்தில் ஆறு இலட்சத் துக்கும் அதிகமானோர் திருத்தந்தையின் திருப்பலி யைக் காணக் காத்திருந்தனர். "எல் கோப்ரே பிறரன்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூபிலி ஆண்டில் உங்களோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்து வதில் மகிழ்கிறேன்" என்று இத்திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை, அதில் பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
  ஆண்டவராம் கடவுளே, உமது மகிமைமிகு பெயர் போற்றப்படுவதாக என்ற தானியேல் புத்தக வாழ்த்தொலிகள், இன்றைய திருவழிபாட்டில் எதிரொலிக்கின்றன. பாபிலோனிய மன்னரால் துன்புறுத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் தங்கள் மனசாட் சியையும் விசுவாசத்தையும் மறுதலிப்பதற்குப் பதிலாக சாவை எதிர்கொள்வதற்கும் தயாராய் இருந்தார்கள். இந்த உலகின் மற்றும் வரலாற்றின் ஆண்டவர் தங்களைக் கைவிடமாட்டார் என்பதில் ஆழமான உறுதி கொண்டிருந்தார்கள். உண்மையில் கடவுள் தமது பிள்ளைகளை ஒருபோதும் கைவிட மாட்டார், ஒருபோதும் மறக்க மாட்டார். அவர் நமக்கு மேலே இருந்து தமது வல்லமையால் நம்மை மீட்கிறார். அதேசமயம், அவர் தமது மகன் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு வெகு அருகில் இருக்கிறார். தம்மை தந்தையின் மகனாகவும் மீட்பராகவும் வெளிப்படுத்தும் இயேசு மட்டுமே உண்மையையும் உண்மையான சுதந்திரத்தையும் நமக்கு காட்ட முடியும்.
   உண்மைக்காக மனிதன் ஆவல் கொள்கிறான். இந்த உண்மைக்கான தேடல், உண்மையான சுதந்திரத்தை செயல்படுத்துவதில் உள்ளது. எல்லாருக்கும் பொருந்தக் கூடிய ஓர் உண்மை இருக்கின்றது என்பதை மனிதர் அறியக்கூடிய திறனைக் கொண்டுள்ளனர் அல்லது அதனை மறுதலிக்கவும் செய்கின்றனர். இந்த மனப் பான்மை இதயங்களை மாற்றி, அவர்களைப் பிறரிடமிருந்து தூரமாக வைக்கின்றது. மற்றொரு புறம், இந்த உண்மைக்கானத் தேடலுக்குத் தவறாக விளக்கம் கூறுவோரும் உள்ளனர். இது அறிவற்றத்தன்மைக்கும் அடிப்படைவாதத்துக்கும் இட்டுச் சென்று அவர்களின் உண்மைக்குள்ளே அவர்களை முடக்கி, அதைப் பிறர்மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் குருட்டு சதுசேயர் போன்றவர்கள்; இயேசுவை சிலுவை யில் அறையும் எனக் கத்தியவர்கள் போன்றவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, மனித சமுதாயத்தை விஞ்சி நிற்கும் உண்மை, சுதந்திரத்தை அடைவதற்கு தவிர்க்க முடியாத கூறாகும். ஏனெனில் அதில்தான் ஒழுக்கநெறிகளுக்கான அடித்தளத்தை நாம் கண்டு கொள்கிறோம். இந்த ஒழுக்கநெறி விழுமியங்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவம் அவற்றை யார் மீதும் திணிப்பதில்லை, ஆனால் நம்மை விடுதலை யாக்கும் உண்மையை அறிவதற்கு கிறிஸ்து விடுக்கும் அழைப்பை முன்வைக்கிறது என்ற திருத்தந்தை, அன்பு நண்பர்களே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தயங்க வேண்டாம். கடவுள் மற்றும் மனித சமுதாயம் பற்றிய உண்மையை அவரில் கண்டு கொள்கிறோம்.
   கியூபாவில் திருச்சபை, தனது விசுவாசத்தை வெளிப்படையாகவும் பொதுவாகவும் வெளிப்படுத்தும் முக்கியமான பணியைச் செய்வதற்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியோடு கூற வேண்டும். கியூபா சமுதாயம் முழுவதற்கும் உண்மையாகவே பணி செய்வதற்கான இந்த பாதையை அரசு அதிகாரிகள் வலுப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். குடிமகனாகவும் மத நம்பிக்கையாளராகவும் இருக்கும் மனிதரின் ஒன்றிப்பை சமய சுதந்திரம் எடுத்துக்காட்டுகின்றது. இந்த சுதந்திரம், சமுதாயத்தைக் கட்டி எழுப்புவ தற்கு அவர்கள் சட்டரீதியாக செயல்பட உதவுகின்றது. சமய சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது, சமூகப்பிணைப்புக்களை ஒருங்கிணைக்கிறது. நல்லதோர் உலகுக்கான நம்பிக்கையைப் பேணுகின்றது. அமைதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றத்துக்குச் சாதகமான வழிகளை உருவாக்குகிறது. அதேசமயம், வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கின்றது.
   திருச்சபை இந்த மனித உரிமைகளை வலியுறுத்தும் போது, அது தனக்காக எவ்வித சிறப்புச் சலுகைகளையும் கேட்கவில்லை. ஆனால் அது தனது விண்ணக நிறுவ னருக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறது. கிறிஸ்து இருக்கும் இடத்தில் மனித சமுதாயம் மிகுந்த மனிதநேயம் உள்ளதாக மாறும். இதனாலே திருச்சபை தனது பள்ளிகள், நிறுவனங்கள், போதனைகள், மறைக்கல்வி போன்றவை மூலம் சான்று பகர முயற்சிக்கின்றது. திருச்சபை தான் கொண்டிருக்கும் கிறிஸ்துவை மற்றவர் களும் பங்குதாரர்களாக்கிக் கொள்வதற்காக வாழ்கிறது. அருள்தந்தை வரேலா, உண்மையான சமுதாய சீர்திருத்தத்தின் பாதையை நமக்கு அருளுகின்றார். கியூபா வும் உலகும் மாற்றம் பெற வேண்டும். ஆயினும், ஒவ்வொருவரும் உண்மையைத் தேடி, அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்து, ஒப்புரவையும் சகோதரத்துவத்தையும் விதைத்தால் மட்டுமே இந்த மாற்றம் நடைபெறும். தவறின் இருளை அழிக்கும் கிறிஸ்துவின் ஒளியில் நடப்போம். கடவுளுக்கு உறுதியுடனும் தாராளத்துடனும் சுதந்திரத்துடனும் நாம் செவிமடுக்க அவரின் உதவியைக் கெஞ்சுவோம்.

Monday, March 26, 2012

மார்ச் 25, 2012

இயேசு கிறிஸ்துவின் ஆட்சி மனித இதயங்களை வெற்றி
கொள்ளும் மேலான சக்தியால் ஆனது - திருத்தந்தை

   மெக்சிகோவுக்கான திருப்பயணத்தின் மூன்றாவது நாளான இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 9.15 மணிக்கு, 200வது ஆண்டு பூங்காவுக்குச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அதன் அருகில் உள்ள குபிலெட் மலையின் உச்சியில் 22 மீட்டர் உயர முடைய கிறிஸ்து அரசர் திருவுரும் உள்ளது. இரு கரங்களையும் விரித்தபடி நிற்கும் கிறிஸ்துவின் பாதத்துக்கு அருகில், ஒரு பக்கம் மகுடமும் மறு புறம் முள்கீரிடமும் ஏந்தியவாறு இரு வானதூதர் நிற்கின்றனர். 200வது ஆண்டு நிறைவு பூங்காவில் இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை நிகழ்த்திய விழாத் திருப்பலியில் கலந்து கொள்வதற்காக, உலகின் பெரிய செல்வந்தரான கார்லோஸ் ஸ்லிம் உட்பட ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் வந்திருந்தனர். மக்களின் அன்பு மழையில் நனைந்து திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
   நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மாபெரும் மறைபொருளை வரும் வாரத்தில் சிறப்பிப்பதற்கு நம்மையே நாம் தயாரித்து வரும் இவ்வேளையில், இறைவா, தூயதோர் இதயத்தை எம்மில் உருவாக்கும் என்று பதிலுரைப் பாடலில் செபித்தோம். நமது இதயத்தை ஆழமாக நோக்குவதற்கும், குறிப்பாக, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்கள் துன்பங்களையும் அதே சமயம், நம்பிக்கையையும் எதிர்நோக்கி வரும் இக்காலத்தில் இச்செபம் மிகவும் உதவியாக இருக்கின்றது. தூய்மையான, புதிய இதயம், தனது சக்தியின்மையை ஏற்று, இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, அவரது கரங்களில் தன்னையே அர்ப்பணிக்கிறது. இதற்குச் சுயபரிசோதனை தேவை. மீட்பு வரலாறு முழுவதும், குறிப்பாக, இஸ்ரயேலின் விவிலிய வரலாறு முழுவதும் இது தெளி வாகத் தெரிகிறது.
   இஸ்ரயேலின் வரலாறு சில பெரும் நிகழ்வுகளோடும் போர்களோடும் தொடர்பு கொண்டது. ஆனால் அது தனது வாழ்வையும், தனது இறுதிக் கதியையும், தனது மீட்பையும் குறித்த விவகாரங்களை எதிர்கொண்டபோது, அது தனது நம்பிக்கையை, தனது முயற்சிகளில் வைக்காமல், கடவுளில் வைத்தது. கடவுளே உணர்ச்சியுள்ள, புதிய இதயத்தை உருவாக்குபவர் என்று நம்பியது. நாமும் நமது தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கையின் ஆழமான கூறுகள் பற்றிப் பேசும் போது, மனித யுக்திகள் நம்மை மீட்க முடியாது என்பதை, மீட்பு வரலாற்றின் இந்தப் போக்கு நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகின்றது. கடவுள் ஒருவரால் மட்டுமே மனித சமுதாயத்தை மீட்க முடியும். வாழ்வை அதன் முழுமைத் தன்மையோடு தர வல்லவர் அவர் ஒருவரே என்று அவரிடம் சரணடைய வேண்டும். ஏனெனில் அவரே வாழ்வின் ஆதாரம், அவரே வாழ்வை உருவாக்கியவர். அவரது மகன் இயேசு கிறிஸ்து வழியாக அவ்வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக ஆக்கியுள்ளார்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நான் இங்கு வந்துள்ளதால் குபிலெட் மலை உச்சியிலுள்ள கிறிஸ்து அரசர் நினைவுச் சின்னத்தைப் பார்க்க முடிந்தது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் மெக்சிகோவுக்கு பலதடவைகள் (ஐந்து முறை) திருப் பயணம் மேற்கொண்டிருந்தாலும்,
குவனஜுவட்டோவுக்கு வர அவர் ஆசைப்பட்டிருந் தாலும் அவரால் வர முடியவில்லை. நான் இங்கு வருவதற்கு இறைவன் வரம் அருளியதை நினைத்து அவர் விண்ணக்ததிலிருந்து மகிழ்வார். இன்னும், அவரது திருப்பண்டங்களை நாடெங்கும் வைத்து வணக்கம் செலுத்தும் இலட்சக்கணக்கான மெக்சிகோ மக்களை ஆசீர்வதிக்கிறார் என்று நம்புகிறேன்.
   இந்தக் கிறிஸ்து அரசர் நினைவுச் சின்னத்தின் மகுடங்களில் ஒன்று அரசத் துவத்தைக் குறிப்பதாயும் மற்றொன்று முட்கள் தா
ங்கியதாயும் உள்ளன. இவரது இறையாட்சி பலரால் புரிந்து கொள்ளப்பட்டது போன்றது அல்ல என்பதை இந்தக் மகுடங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கிறிஸ்துவின் ஆட்சி, பலத்தால் அல்லது வன் முறையால் அடக்கி ஆளும் படைபலத்தால் ஆனது அல்ல. ஆனால், அது மனித இதயங்களை வெற்றி கொள்ளும் மேலான சக்தியால் ஆனது. அவரது ஆட்சி, அவர், தமது தியாகத்தால் இவ்வுலகிற்கு கொண்டு வந்த இறையன்பாலும், தான் சான்று பகரும் உண்மையாலும் ஆனது. இறைவனின் வல்லமை நன்மைத்தனத்தின் மற்றும் அன்பின் வல்லமை. இந்த அவரது அரசத்துவத்தை யாரும் அவரிடமிருந்து பறித்து விட முடியாது. அதை யாராலும் மறக்கவும் முடியாது. எனவே கிறிஸ்து நமது இதயங்களில் ஆட்சி செய்வதற்கு, நமது இதயங்களைத் தூய்மையானதாகவும், பணிவானதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும், அடக்கத்துடன் கூடிய துணிவு கொண்டதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
   இவ்வாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் 2007ம் ஆண்டில் வெளியிட்ட, புதுப்பித்தல் மற்றும் நற்செய்திப்பணி குறித்த இலத்தீன் அமெரிக்க அப்பரேசிடா ஏடு பற்றியும் குறிப்பிட்டார். அன்னை மரியாவின் எடுத்துக் காட்டைப் பின்பற்றி, இறைவார்த்தைக்கு மிகுந்த கவனம் செலுத்தி, நம் இதயங்களில் தியானித்து, அன்றாட வாழ்வில் அவை கொடுக்கும் சவால்களுக்கு நம்மை அனுமதிப்பதை உள்ளடக்கியதாக நற்செய்திப்பணி உள்ளது. இவ்வாறு மேலோட்ட மான விசுவாச வாழ்வின் சோதனைகளை சமூகங்கள் வெற்றி கொள்ள முடியும். இதன் மூலம் கிறிஸ்துவை அறிவதிலும், அவரின் திருச்சபையைச் சார்ந்து இருப்ப திலும், கிறிஸ்தவர்களாய் இருப்பதிலும் இருக்கும் ஆழமான மகிழ்வை மீண்டும் கண்டுணர வேண்டும். புனித கன்னி மரியா நம் இதயங்களைத் தூய்மையாக வைப்ப தற்கு உதவுவாராக என்று கூறி இம்மறையுரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
   இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளின் சுமார் 250 கர்தினால்கள், சுமார் மூவாயிரம் அருட்பணியாளர்கள் ஆகியோருடன் திருத்தந்தை நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டு திருப்பலியின் இறுதியில், அவர் மூவேளை செப உரையும் நிகழ்த்தி விசுவாசிகளை ஆசீர்வதித்தார். பின்னர் அந்நாட்டின் பல்வேறு மறை மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் மெக்சிகோவின் பாதுகாவலியாகிய குவாதலூப்பே அன்னை மரியாவின் 91 படங்களை ஆசீர்வதித்தார். 

Saturday, March 24, 2012

மார்ச் 23, 2012

பற்றுறுதி, நம்பிக்கை மற்றும் அன்பின் திருப்பயணியாக
வந்துள்ளேன் – மெக்சிகோவில் திருத்தந்தை

   திருத்தந்தையின் 23வது வெளிநாட்டு திருப்பயண மாக மெக்சிகோ நாட்டுக்கு சென்றுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந் நாட்டு விமான நிலையத்தில் தனது முதல் உரையை வழங்கினார்.
   மெக்சிகோவுக்கு வந்திருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. மெக்சிகோவும் பெரும் பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அண்மை ஆண்டுகளாக தாம் சுதந்திரம் பெற்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடி வருகின்றன. இத்தருணத்தில் பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக நான் இங்கு வந்துள்ளேன். இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பவர்களை, அதில் உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்த விரும்புகிறேன். மதிப்பும் அமைதியும் கலந்த ஒருங்கிணைந்த நல் வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில், மெக்சிகோ கத்தோலிக்கர்கள் வேதபோதக மறைப் பணியாளர்களாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரின் ஒப்பிடப்பட முடியாத மற்றும் புறக்கணிக்க எவருக்கும் உரிமையில்லாத மாண்பிலிருந்து இந்த ஒருங்கி ணைந்த வாழ்வு பிறக்கின்றது. இந்த மாண்பு, மத சுதந்திரத்திற்குரிய அடிப்படை உரிமையில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நல்லதோர் உலகத்தை உருவாக்குவதற்கு தங்களைச் செயல்ரீதியாக அர்ப்பணிப்பதற்கு, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்கள் தங்களது நம்பிக்கையை இறைவனில் வைக்க வேண்டு மென, நம்பிக் கையின் திருப்பயணியாக வந்துள்ள நான் கேட்டுக்கொள்கிறேன்.
    மேலும், தேவையில் இருப்போர், குறிப்பாக, அனைத்து வகையான வன்முறை களாலும் பழைய புதிய பகைமைகளாலும் வெறுப்புக்களாலும் துன்புறுவோருக்காக சிறப்பாக செபித்த திருத்தந்தை, விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மெக்சிகோவில், தானும் அப்பண்பை உணர்வதாகவும்,
அதேசமயம், இந்நாட்டில் எவரும் வரவேற்க படாமல் இருப்பதாக உணரக்கூடாது என்றும் தெரிவித்தார். இந்த மாபெரும் நாட்டிற்கு செல்ல வேண்டுமென்ற தனது நீண்டகால ஆவலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி தெரிவித்த அவர், தங்களது தாயகத்தைவிட்டுத் தொலைவில் வாழ்வோரும், இந்நாடு நல்லிணக்கத்திலும் உண்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும் வளர் வதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் ஆர்வம் இழக்கக்கூடாது எனவும் கூறினார். இறுதியாக மெக்சிகோ நாட்டு மக்கள் தாங்கள் பெற்ற விசுவாசத்திற்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாக வாழ அன்னை மரியாவிடம் செபித்து தனது உரையை திருத் தந்தை நிறைவு செய்தார்.

Sunday, March 18, 2012

மார்ச் 18, 2012

இயேசுவோடு கல்வாரிப் பாதையில் பயணித்தால்
புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருச்சபை ஈஸ்டருக்காகத் தன்னையே தயாரிக்கும் காலமாக விளங்கும் தவக்காலத்தினை மையமாக கொண்டு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தவக்காலம் என்பது இயேசுவோடு பாலைநிலத் தில் பயணம் செய்யும் ஓர் அனுபவம் ஆகும். இந்த காலத்தில் கடவுளின் குரலை மிகமிக நெருக்கமாக கேட்கவும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் பேசிக் கொண்டிருக்கின்ற சோதனைகளின் முகமூடிகளை அகற்ற
வும் வேண்டும். இஞ்ஞாயிறு நாம் தவக்காலத்தின் பாதி பய ணத்தை நிறைவு செய்கிறோம். நமது வழியில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டி யிருப்பதால், நம் இலக்கில் நமது கண்களை பதிப்போம். நம் ஆண்டவரோடு சேர்ந்து நாம் கல்வாரிப் பாதையில் பயணம் செய்தால், அவரோடு இணைந்து நாம் புதுவாழ் வுக்கும் உயிர்த்தெழுவோம். உலகின் ஒளியாகிய கிறிஸ்து உங்கள் மேல் ஒளிர்ந்து, உங்களைத் தனது ஆசீரால் நிரப்புவாராக!
   மூவேளை செப உரைக்கு பின்னர், இந்த வியாழனன்று கொண்டாடப்படும் உலக தண்ணீர் தினத்தையும், சனிக்கிழமை நடைபெறும் ஆறாவது உலக தண்ணீர் கருத் தரங்கையும் மனதில் கொண்டு பேசிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் வாழ்வ தற்கும் ஊட்டம்பெறுவதற்குமான உரிமைகளை அதிகரிக்கவும், நிகழ்காலத் திலும் எதிர்காலத்திலும் பூமியின் வளங்களை பொது நலனுக்காக பொறுப்புணர்வோடு பயன் படுத்தவும் இத்தகைய முயற்சிகளின் வெற்றி உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். இறுதியாக இவ்வாரம் தான் மேற்கொள்ள இருக்கும் மெக்சிக்கோ மற்றும் கியூபா நாடுகளுக்கான திருப்பயணத்திற்காக இறைமக்களின் செபங்களையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

Wednesday, March 14, 2012

மார்ச் 14, 2012

புதன் மறைபோதகம்: விசுவாசம் மற்றும் பிறரன்பில்
அன்னை மரியா நம் வழிகாட்டி - திருத்தந்தை

   இயேசுவின் செபம் குறித்த தன் மறைக்கல்வி சிந்தனைகளை ஒரு தொடராக சில வாரங்கள் வழங்கி, அதனைக் கடந்த புதனன்று நிறைவுசெய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தூய பேதுரு பேராலய வளாகத்தில் இன்று வழங்கிய தனது புதன் மறை போதகத்தில் செபம் குறித்த ஒரு புதிய தொடரைத் தொடங்கினார்.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, திருத்தூதர் பணி நூல் மற்றும் புனித பவுலின் திருமுகங்களில் செபம் குறித்துக் காணப்படு பவைகள் பற்றிய புதியத் தொடர் ஒன்றைத் துவக்குவோம். இன்று நான் அன்னை மரியா குறித்து உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திருத்தூதர்களுடன் எருசலேம் மாடியறையில் தூய ஆவியாரின் கொடைக்காகக் செபத்தோடு காத்திருந்த அன்னை மரி
யாவை நோக்குவோம்.
   கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு முதல் இயேசுவின் சிலுவை மற்றும் அதற்குப் பின்னான பெந்தகோஸ்தே வரையிலும், அன்னை மரியாவின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும், கிறிஸ்துவில் இறைவனின் மீட்புத்திட்ட மறையுண் மையை ஆழ்ந்து தியானித்து செபிக்கும் தாயாகவே அன்னை மரியாவை நமக்கு முன்வைக்கிறார் புனித லூக்கா. எருசலேம் மாடியறையில் நாம் அன்னை மரியின் முக்கிய இடத்தைக் காண்கிறோம். அவரே விசுவாசம் மற்றும் பிறரன்பில் நம் வழிகாட்டியாகவும் முதன்மை எடுத்துக்காட்டாகவும் உள்ளார்.
   இறைவனின் தாயாகவும் திருச்சபையின் அன்னையாகவும் இருக்கும் மரியா, மீட்பு வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய வேளையிலும் திருச்சபைக்குள்ளும் திருச்சபை யோடு இணைந்தும் செபிக்கிறார். நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அன்னை மரியாவின் கைகளில் ஒப்படைத்து, செபத்தின் தேவை குறித்து நமக்குக் கற்றுத்தர அவரை அனுமதிப்போமாக. இதன்வழி, நாம் அவரின் மகனுடன் அன்பின் ஒன்றிப்பில், தூய ஆவியாரின் அருட்பொழிவுக்கும், உலகின் அனைத்து இறுதி எல்லை வரையிலான நற்செய்தி பரவலுக்கும் வேண்டுவோமாக.
   இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, March 11, 2012

மார்ச் 11, 2012

வன்முறை ஒருபோதும் மனித குலத்திற்கு
உதவியாக அமைந்ததில்லை - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றைய நற்செய்தியை மையமாகக் கொண்டு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத் தியதை எடுத்துக்கூறுகின்ற இஞ்
ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், கோவிலில் இருந்த ஆடு, மாடு, புறா விற்போரையும், நாணயம் மாற்றுவோரையும் அங் கேயிருந்து துரத்திய இயேசு ஓர் இறைவாக்கினரைப் போல செயல்படுவதைப் பார்க்கிறோம். கடவுளின் பெயரால் வரும் இறைவாக்கினர் கள், அத்துமீறல்களை அடிக்கடி கண்டனம் செய்தனர், சில சமயங்களில் அடையாளச் செயல்களையும் மேற்கொண்டனர். இயேசுவை ஒரு வன்முறையாளராக விவரிக்க முடியாது. ஏனெனில், வன்முறை இறையாட்சிக்கு எதிரானது; அது எதிர் கிறிஸ்து வின் ஆயுதம். வன்முறை ஒருபோதும் மனித குலத்திற்கு உதவியாக அமைந்த தில்லை - அது மனிதத்தன்மையை இழக்கச் செய்வதாகவே இருக்கிறது.
   மூவேளை செப உரைக்கு பின் புயலால் பேரழிவை சந்தித்த மடகாஸ்கர் மக்கள் மீது தனது சிந்தனையை திருப்பிய திருத்தந்தை, "மக்களுக்கும், கட்டடங்களுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்த இயற்கை பேரிடருக்கு ஆளான மடகாஸ்கர் மக்களை எண்ணிப் பார்க்கிறேன். இதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர் களின் குடும்பத்தினருக்கும் என் செபங்களை உறுதி செய்வதோடு, சர்வதேச சமுதா யத்தின் தாராள உதவியையும் நம்பிக்கையோடு ஊக்கப்படுத்துகிறேன்" என்றார்.
   இறுதியில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Wednesday, March 7, 2012

மார்ச் 7, 2012

நம் துன்ப வேளைகளில் மௌனத்தின் வழியாக
இறைவன் நம்மோடு பேசுகிறார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, தனது புதன் பொது மறைபோதகத்தை தொடங்கிய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், அர்மீனிய கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மாநாட்டுக்காக உரோம் நகர் வந்திருக்கும் அத்திருச்சபைத் தலைவர்களை வாழ்த்திய பின்பு, இயேசுவின் செபம் குறித்த தன் மறைபோதகத்தின் நிறைவுரையை வழங்கினார்.
   இயேசுவின் செபம் குறித்த மறைபோதக
ங்களின் நிறைவாக இன்று, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவில் மௌனத்தின் முக்கி யத்துவத்தைப் பற்றி உரையாட விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் செபத்திலும், குறிப்பாக அவரின் சிலுவை அனுபவத்தில், வார்த்தையும் மௌனமும் தொடர்ந்து ஒன்றையொன்று இடைமறித்து ஒன்றுக்குள் ஒன்றாய் வருவதைக் காண்கிறோம். சிலுவையில், மரணத்தருவாயில் இயேசு கொண்ட மௌனமே இறைத் தந்தைக்கு அவர் தந்த இறுதி வார்த்தை. அதுவே அவரின் உன்னத செபம்.
   இறைவனின் வார்த்தைக்கு நாம் செவிமடுக்க வேண்டுமெனில் நம் அகம், புறம் இரண்டிலும் மௌன விதையிட்டு வளர்க்க வேண்டும். அப்போது, இறைவனின் வார்த்தைகள் நம் இதயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். நம் துன்பகரமான வேளைகளில் இறைவன் தன் மௌனத்தின் வழி நம்மோடு பேசுகிறார் என்பதை இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். நம் துன்பத்தில் இறைவனின் மௌனம், நமது விசுவாசத்தினை ஆழப்படுத்தவும், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கைக் கொள்ளவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
   இயேசுவே நம் உயரிய செப ஆசிரியர். வானகத்தந்தையின் அன்புக்குரிய குழந்தை களாக முழு நம்பிக்கையுடன் அவரோடு உரையாட இயேசுவின் செபத்திலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். இறைவனின் பல்வேறு கொடைகளைக் கண்டு கொள்ளவும், அவரின் விருப்பத்திற்குப் பணியவும், குழந்தைகளுக்குரிய இந்த உரையாடலில் நாம் கற்பிக்கப்படுகிறோம். இதுவே நமது வாழ்வுக்கான அர்த்தத்தையும் வழியையும் தருகிறது.
   புதன் மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.

Monday, March 5, 2012

மார்ச் 4, 2012

எப்பொழுதும் மறையாத ஒளி இயேசுவே! - திருத்தந்தை

   ரோமின் புனித ஜான் பாப்டிஸ்ட் தெ லா சால் பங்கு ஆலயத்திற்கு சென்று அங்கு திருப்பலி நிறைவேற்றி இன்றைய நாளினைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள சிறுவர் களிடம் இயேசுவைப் பற்றியும், அவரது சொல், செயல் பற்றியும், அவர் அனுபவித்த வேதனைகள் பற்றியும் அறிந்து கொள் ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், திருச்சபை மற்றும் திருவருட்சாதனங்கள் பற்றி கற்றுக்கொள்ளு மாறும் கூறினார்.
  வத்திக்கான் திரும்பியதும், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியி ருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் உரு மாற்றம் குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை விளக்கினார்.
   இயேசு திருத்தூதர்கள் முன்பு உருமாற்றம் அடைந்தபோது, அங்கு முக்கியமாக இருந்தவை ஒளியும் குரலுமே; அதாவது இயேசுவின் முகத்தில் ஒளிர்ந்த தெய்வீக ஒளியும், அவரோடு பேசிய விண்ணகத் தந்தையின் குரலும் ஆகும். தான் உயிர்த் தெழுமாறு, துன்பங்களுக்கு உட்பட்டு, சிலுவையில் இறக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தும், இயேசு அடைந்த உருமாற்றத்தின் மறைபொருள் அவரது பணி வாழ்வின் நிறைவை நோக்கியதாக இருந்தது.
   இயேசு தனது நண்பர்களையும் தன்னோடு மலைக்கு அழைத்துச் செல்கிறார். ஏனெனில் அவரில் வாழுகின்ற, மிகவும் நெருக்கமான இந்த ஒளியின் அனுபவத்தை அவர்களுக்கு அளிக்க விரும்பினார். அதனால் இந்த நிகழ்வுக்கு பின், அவர் அவர்களது உள் ஒளியாக இருக்க முடியும்; மேலும், இருளின் தாக்குதல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்க முடியும். நாமும் நம் வாழ்வின் துன்பச் சூழல்களை வெற்றிகொள்ள உள் ஒளி தேவைப்படுகிறது. இயேசுவே எப்பொழுதும் மறையாத ஒளியாக இருக்கிறார்.
   இறுதியாக ஆங்கிலத்திலும் வேறு பல மொழிகளிலும் பேசிய திருத்தந்தை, தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் தியாகச் செயல்கள் கிறிஸ்துவின் ஒளியைப் புதுப்பிக்கும் அனுபவத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.