Sunday, March 18, 2012

மார்ச் 18, 2012

இயேசுவோடு கல்வாரிப் பாதையில் பயணித்தால்
புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருச்சபை ஈஸ்டருக்காகத் தன்னையே தயாரிக்கும் காலமாக விளங்கும் தவக்காலத்தினை மையமாக கொண்டு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தவக்காலம் என்பது இயேசுவோடு பாலைநிலத் தில் பயணம் செய்யும் ஓர் அனுபவம் ஆகும். இந்த காலத்தில் கடவுளின் குரலை மிகமிக நெருக்கமாக கேட்கவும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் பேசிக் கொண்டிருக்கின்ற சோதனைகளின் முகமூடிகளை அகற்ற
வும் வேண்டும். இஞ்ஞாயிறு நாம் தவக்காலத்தின் பாதி பய ணத்தை நிறைவு செய்கிறோம். நமது வழியில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டி யிருப்பதால், நம் இலக்கில் நமது கண்களை பதிப்போம். நம் ஆண்டவரோடு சேர்ந்து நாம் கல்வாரிப் பாதையில் பயணம் செய்தால், அவரோடு இணைந்து நாம் புதுவாழ் வுக்கும் உயிர்த்தெழுவோம். உலகின் ஒளியாகிய கிறிஸ்து உங்கள் மேல் ஒளிர்ந்து, உங்களைத் தனது ஆசீரால் நிரப்புவாராக!
   மூவேளை செப உரைக்கு பின்னர், இந்த வியாழனன்று கொண்டாடப்படும் உலக தண்ணீர் தினத்தையும், சனிக்கிழமை நடைபெறும் ஆறாவது உலக தண்ணீர் கருத் தரங்கையும் மனதில் கொண்டு பேசிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் வாழ்வ தற்கும் ஊட்டம்பெறுவதற்குமான உரிமைகளை அதிகரிக்கவும், நிகழ்காலத் திலும் எதிர்காலத்திலும் பூமியின் வளங்களை பொது நலனுக்காக பொறுப்புணர்வோடு பயன் படுத்தவும் இத்தகைய முயற்சிகளின் வெற்றி உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். இறுதியாக இவ்வாரம் தான் மேற்கொள்ள இருக்கும் மெக்சிக்கோ மற்றும் கியூபா நாடுகளுக்கான திருப்பயணத்திற்காக இறைமக்களின் செபங்களையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.