புதன் மறைபோதகம்: செபத்தின் வழியாகவே சான்று
பகர்வதற்கு நாம் பலம் பெறுகிறோம் - திருத்தந்தை
கோடைவிடுமுறை
காலத்தை காஸ்தல் கந்தல்போ வில்
செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று திருச்சபை சிறப்பித்த 'புனித திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணம்’ குறித்து
புதன் பொது மறைபோதகத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
புனித
திருமுழுக்கு யோவானின் பிறப்பை ஜூன் மாதம் 24ம் தேதியும், அவரின்
மறைசாட்சிய மர ணத்தை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதனான இன் றும்
சிறப்பிக்கின்றோம். திருச்சபையின்
உரோமன் நாட்காட்டியில், ஒருவரின் பிறப்பும்
இறப்பும் சிறப்பிக்கப்படுவது இப்புனிதருக்கு மட்டுமே. புனித லூக்கா
எழுதிய நற் செய்தியில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அவர் மேற்கொண்ட
பாலைவன வாழ்வு, அவரது போதனை ஆகியவைகளையும், மாற்குவின் நற்செய்தியில்,
திருமு ழுக்கு யோவானின் மரணம் குறித்தும் வாசிக்கின்றோம். திபேரியு சீசர்
ஆட்சி செய்து வந்த காலத்தில் மக்களை நோக்கி, மனம் திரும்ப அழைப்பு விடுத்து
போதித்த திருமுழுக்கு யோவான், அதோடு நிறுத்தி விடவில்லை. 'இதோ! கடவுளின்
ஆட்டுக் குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' என
இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்கிறார். இறுதியாக, இறைக் கட்டளைகளுக்கு
விசுவாசமாக இருப்பதற்கு, தன் இரத்தம் சிந்துதல் மூலம் புனித திருமுழுக்கு
யோவான் சான்று பகர்ந்தார். உண்மை மீதான அன்பின் சாட்சியமாக அது
இருந்தது.
புனித திருமுழுக்கு யோவான், செபத்தின் மனிதர் மட்டுமல்ல, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். இயேசு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் முன்னர், அவருடைய சீடர்களுள் ஒருவர் 'ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொ டும்' என இயேசுவை நோக்கி வேண்டியதை புனித லூக்கா எடுத்துரைக்கிறார். செபம் என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல, அதற்கு நேர் எதிரானது. ஏனெனில், செபத்தின் வழியாகவே நாம், அன்பான, அமைதியான ஒரு வாழ்வைப் பெறுவதற்கும், துன்பங் களை மேற்கொள்வதற்கும், துணிவுடன் சான்று பகர்வதற்கும் தேவையான பலத்தை இறைவனிடமிருந்து பெறுகிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசு நுழைந்து, அதன்வழி அவரைக் குறித்து இவ்வுலகிற்கு நாம் பறைசாற்ற உதவும் பொருட்டு புனித திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம்.
இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.