நாங்கள் நம்பிக்கையால் புரிந்துகொள்கிறோம்
புரிந்துகொள்வதற்காக நம்புகிறோம் - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தி வாசகம் பற்றிய தன் கருத்தை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
கடந்த சில வாரங்களாக, இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக வெளிப்படுத்தியது
குறித்து சிந்தித் தோம். அது குறித்த சீடர்களின் பதில் செயல்பாட்டை இன்றைய
நற்செய்தி நமக்கு தருகிறது. முதலாவதாக நற்செய்தியாளர் யோவான் பின்வருமாறு
எடுத்துரைக்கிறார்: "அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்.
அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை." ஏனெனில்,
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உண்டு
என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" என்ற இயேசுவின்
வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை. அவரது புதிய உடனிருப்பான நற்கருணை பற்றிய இந்த
வெளிப்பாடு அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில்,
உலகின் மீட்புக்காக இயேசு தன்னையே கொடுக்கும் பாஸ்கா மறைபொருளை முன்னுரைத்த
இந்த வார்த்தைகளை அவர்கள் பொருள் சார்ந்த முறையில் சிந்தித்தார்கள்.
சீடருள் பலர் தன்னை விட்டு விலகியதைக் கண்ட இயேசு திருத்தூதர்களிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். பன்னிருவரின் சார்பாக பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த் தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங் கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார். இதற்கு புனித அகுஸ்தீன் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்: "கடவுளின் அருளாலும், தூய ஆவியின் தூண் டுதலாலும் பேதுரு புரிந்துகொண்டதைப் பார்க்கிறீர்களா? அவர் ஏன் புரிந்துகொண் டார்? ஏனெனில் அவர் நம்பினார். நீர் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளைக் கொண் டிருக்கிறீர். நீர் உமது உயிர்த்தெழுந்த உடலையும் இரத்தத்தையும், உம்மை முழுவ துமே எங்களுக்கு தருவதன் வழியாக, எங்களுக்கு நீர் நிலைவாழ்வை அளிக்கின்றீர். நாங்கள் நம்பிக்கையால் புரிந்துகொள்கிறோம். நாங்கள் புரிந்துகொள்வதற்காக நம்பு கிறோம். நாங்கள் எதை நம்புகிறோம்? நாங்கள் எதைப் புரிந்துகொள்கிறோம்? கடவு ளின் மகனாகிய கிறிஸ்து நீரே, அதாவது, உமது சதையிலும் இரத்தத்திலும் நீர் அளிக் கும் உண்மையான நிலைவாழ்வு நீரே."
இறுதியாக, பன்னிரு திருத்தூதர்களிலும் ஒருவர் அதாவது யூதாஸ் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது இயேசுவுக்கு தெரியும். யூதாஸ் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், பல சீடர்கள் விலகிச் சென்றதைப் போல விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவன் இயேசுவோடு இருந்தான். விசுவாசத்தாலோ, அன்பாலோ அவன் தொடர்ந்து அங்கு இருக்கவில்லை, மாறாக குருவைப் பழிவாங்கும் நோக்கத் துடன் இருந்தான். இயேசுவால் காட்டிக்கொடுக்கப்பட்டதாக யூதாஸ் உணர்ந்ததால், அவரைக் காட்டிக்கொடுக்க அவன் முடிவெடுத்தான். யூதாஸ் ஒரு தீவிரவாதியாக வும், உரோமையருக்கு எதிராக புரட்சி செய்து வெற்றிபெறும் மெசியாவை விரும்பு பவனாகவும் இருந்தான். இந்த எதிர்பார்ப்புகள் இயேசுவை ஏமாற்றம் அடையச் செய் தன. பிரச்சனை என்னவென்றால் யூதாஸ் விலகிச் செல்லவில்லை, அலகையின் குறியைக் கொண்டவனாக பொய்மையில் இருந்ததே அவனது மிகப்பெரிய தவறு. எனவேதான் இயேசு பன்னிருவரைப் பார்த்து, "உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார். புனித பேதுருவைப் போல இயேசுவில் நம்பிக்கை கொள்ள வும், எப்பொழுதும் அவரிலும் அனைத்து மக்களிடமும் அக்கறை கொள்ளவும் கன்னி மரியா நமக்கு உதவுமாறு செபிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!