வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு தரும் உண்மையான உணவு இயேசுவே! - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தியில் இயேசு வாழ்வு தரும் உண வாக தன்னை வெளிப்படுத்துவது குறித்த கருத்தை
எடுத்துரைத்தார்.
ஐந்து அப்பங்களை பலுகச் செய்த பிறகு,
கப்பர் நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு பேசிய புகழ் பெற்ற பேச்சைப் பற்றி
நாம் இன்று சிந்திக்கிறோம். மக்கள் தன்னை பின்தொடர்ந்து வந்ததன் நோக்கத்தை
இயேசு அறிந்திருந்தார். அவர் அதை அவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கிறார்:
"நீங்கள் அரும் அடையாளங் களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார
உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்." உலகு சார்ந்த தேவைகள்
முக்கியமானவையாக இருந்தாலும், அவற் றில் உடனடியாக நிறைவு காணாமல் விலகிச்
செல்ல மக்களுக்கு உதவ இயேசு விரும்புகிறார். சாதாரணமாக நம் அன்றாடத்
தேவைகளான உணவு, உடை மற்றும் ஒருவரது வேலை போன்றவற்றை அன்றி வாழ்வின் தொடு
எல்லையை ஆண்டவர் நமக்காக திறக்க விரும்புகிறார். "அழிந்து போகும் உணவுக்காக
உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வு ணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார்" என்று இயேசு கூறுகிறார்.
நாம் தேடி வரவேற்க வேண்டிய இந்த அழியாத உணவைப் பற்றி அவர் பேசுகிறார்.
வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு தரும் உண்மையான உணவு இயேசுவே! இஸ்ரயேலர் உண்ட மன்னாவை விட மேலான உணவால் கிறிஸ்தவர்கள் ஊட்டம்
பெறுகிறார்கள். ஏனெ னில், நற்கருணை வழியாக கிறிஸ்து தன்னையே உணவாக
வழங்குகிறார். "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருப வருக்கு பசியே இராது;
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று இயேசு
கூறுகிறார். நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவரது வாக்குறுதிகளில்
நம்பிக்கை கொள்ளும் போது நிறைவான வாழ்வைப் பெறுவோம்.
மூவேளை செபத்துக்கு பின் திருத்தந்தை, பின்வருமாறு ஆங்கிலத்தில்
கூறினார்: "இங்கு வந்துள்ள ஆங்கிலம் பேசும் அனைத்து பார்வையாளர்களையும்
திருப்பயணி களையும் வரவேற்பதுடன், உரோமில் இருப்பது நீங்கள் ஆண்டவர்
இயேசுவோடு நெருக்கமாக வளர நான் செபிக்கிறேன். இன்றைய நற்செய்தியில் இயேசு
மக்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே
இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்று
கூறுகிறார். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவரது வாக்குறுதிகளில் தாகம்
கொள்வோம், அதனால் நாம் நிறைவான வாழ்வைக் கொண்டிருப்போம். கடவுள் உங்கள்
அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!"