கிறிஸ்துவின் வார்த்தைகளால் நற்கருணையின் அழகை
மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும் - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் இருந்து
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ் ஞாயிறு
நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற இயேசு வின் உரையைப் பற்றி எடுத்துரைத்தார்.
முந்திய நாளில் இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு
ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். அந்த அற்புதத்தின்
உண் மையை,
அதாவது வாக்குறுதிகள் நிறைவேறும் நேரத்தை அவர் கப்பர்நாகுமில் வெளிப்படுத்துகிறார். இன்றைய
திருவழிபாட்டு நற்செய்தியில், விண்ண கத்திலிருந்து இருந்து இறங்கி வந்த
வாழ்வு தரும் உணவாக இயேசு தன்னை காண்பிக்கிறார். நற்கருணை பலியில் அவரது
உடனிருப் பின் கொடைக்காக நாம் எப்போதும் பசியோடு இருப்போம். அதில் தன்னையே
நமக்கு உணவாகவும் பானமாகவும் தரும் இயேசு, விண்ணகத் தந்தையை நோக்கிய
பய ணத்தில் நம்மைத் தாங்கி நடத்துவார்.
இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக அறிவித்தது, ஒரு இக்கட்டான தருணமாக அவரது பணி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. இயேசு அப்பத்தின் உருவில் தன்னைக் காண்பித்து, தனது வாழ்வை கையளிக்க அனுப்ப்பப்பட்டிருப்பதை அவர் விளக்குகிறார். அவரைப் பின்பற்ற விரும்புவோர் அனைவரும், ஆழ்ந்த, தனிப்பட்ட விதத்தில் அவரோடு இணையவும், அவரது அன்பின் பலியில் பங்கேற்கவும் அழைக் கப்படுகிறார்கள். இறுதி இரவுணவு வேளையில், இயேசு நற்கருணையை ஏற்படுத்தி யதன் நோக்கம் இங்கு புலனாகிறது. கப்பர்நாகுமில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள், அவர் உலக அரசைக் கைப்பற்ற விரும்பும் மெசியா அல்லர் என்பதைப் புரிந்து கொண்டார்கள். திருப்பலிகளில் பிட்கப்படும் அப்பமாக தன்னை மாறச் செய்யும் சிலுவைப் பலியைப் பற்றிய குறிப்பை இயேசு அளிக்கிறார். திரும்பவும் ஒருமுறை கிறிஸ்துவின் வார்த்தைகளால் வியப்படைந்தவர்களாய், நற்கருணையின் அழகை மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும்.