Monday, January 16, 2012

ஜனவரி 15, 2012

கடவுளின் அழைப்புக்கு இளையோர் பதிலளிக்க ஆன்மீக
வழிகாட்டிகள் உதவ வேண்டும் - திருத்தந்தை

   இறை அழைத்தலைக் குறித்து உரைக்கும் இஞ் ஞாயிறு திருப்பலி வாசகங்களை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் வாசகத்தில் இடம்பெற்ற சாமுவேலின் அழைப்பினையும், நற் செய்தியில் காணும் இயேசுவின் முதல் சீடர்களின் அழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார்.
   இந்த இரண்டு நிகழ்வுகளிலும், அழைக்கப்பட்ட வர்கள் கடவுளின் குரலை அடையாளம் கண்டு பின்பற்ற உதவும் இடைநிலையாரின் பங்கை வலியுறுத்துகின்றன; கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் பணியாற்றுவதற்கான விசுவாசப் பயணத்தின் அழைப்பில் பதிலளிக்க, ஆன்மீக வழிகாட்டிகள் இத்தகைய மனநிலையோடு உதவ வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்தினார்.
   இறைபணி செய்வதற்கான அழைப்பில், பெற்றோரின் அடிப்படைப் பங்கை மறக்க முடியாது; பெற்றோரது மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் உரிய விசுவாசமும், இல்லற அன்பும் அவர்களது குழந்தைகளின் வாழ்வை அழகிய விதத்தில் இறையன்பில் கட்டி எழுப்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
   அனைத்து நிலையில் கற்பிப்போரும், குறிப்பாக குருக்களும் பெற்றோரும், இளையோரின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் மட்டுமின்றி, இறைவனின் அழைப் பிற்கு பதிலுரைக்க உதவும் ஆன்மீகப் பங்காற்றுவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று திருத்தந்தை செபித்தார்.
   மூவேளை செப உரையை ஆற்றி, மக்களாடு இணைந்து செபித்த பின், உலகக் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் குறித்த தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, அமைதியில் வாழும் நோக்கில் புது இடங்களைத் தேடி குடிபெயர்வோர் இவர்கள் என்றார். இந்த மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான செப வாரம் குறித்தும் பேசிய அவர், கிறிஸ்தவ சபைகளிடையே முழு ஒன்றிப்பு ஏற்பட அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.