நமது ஆழ்ந்த குணம்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி! - திருத்தந்தை
இஞ்ஞாயிறு காலை தூய பேதுரு பசிலிக்கா பேரா லய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குணம் அளித்தலை மையப்படுத்தி பேசினார். இந்த ஞாயிறு நற்செய்தியில் தொழுநோயாளர் ஒருவர் கிறிஸ்து இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று வேண்டியதையும், அதற்கு இயேசு, "நான் விரும்பு கிறேன், உமது நோய் நீங்குக!" என்று கூறி நலம் அளித்ததையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
"அந்த செய்கையிலும், கிறிஸ்துவின் அந்த வார்த்தைகளிலும் மீட்பின் முழு வரலாறு காணப்படுகிறது; அதாவது நம்மை சிதைத்து, நம் உறவுகளை அழிக்கும் அனைத்து தீமைகளிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்தி, குணமாக்கும் கடவுளின் திருவுளம் உள்ளடங்கி இருக்கிறது" என்று திருத்தந்தை கூறினார்.
தொழுநோயாளரில் கிறிஸ்துவைக் கண்ட புனித பிரான்சிசின் வாழ்க்கையை சுட்டிக் காட்டிய திருத்தந்தை, "தொடக்க பிரிவில் இருந்து மீண்டபோது, பிரான்சிஸ் தொழு நோயாளரை அணைத்துக் கொண்ட போதிலும், இயேசு அவரது தொழுநோயை அதாவது தற்பெருமையை குணப்படுத்தி, அவரை கடவுளின் அன்பு கருவியாக மாற்றினார். அவ்வாறே நமது ஆழ்ந்த குணம்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி!" என்று எடுத்துரைத்தார்.
முன் தினம், நினைவுகூரப்பட்ட லூர்து நகரில் காட்சியளித்த கன்னி மரியாவிடம் செபித்து தனது கருத்துக்களை நிறைவு செய்த திருத்தந்தை, "நம் அன்னை திருக் காட்சியாளரான புனித பெர்னதெத்துக்கு வழங்கிய எக்காலத்துக்கும் ஏற்ற செய்தி, செபம் மற்றும் தபத்திற்கான அழைப்பு" என்றார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது உரையின் இறுதியில், சிரியாவில் நடைபெறும் வன்முறைகளும் இரத்தம் சிந்துதலும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அவசர அழைப்புவிடுத்தார். மோதலில் பாதிக்கப்பட்டோரை செபத்தில் நினைவுகூரு மாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அவர், சிரியாவில் உள்ள அரசியல் அதிகா ரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொண்டு, அமைதிக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.