புதன் மறைபோதகம்: இறை விருப்பத்திற்கு கையளிப்பதன் மூலமே மனிதத்துவம் முழுமை பெறும் - திருத்தந்தை
திருத்தந்தையின் இன்றைய மறையுரை, இயேசு தனது இறுதி இரவு உணவிற்கு பின் கெத்சமனி ஒலிவத் தோட்டத்தில் மேற்கொண்ட செபம் பற்றி யதாக இருந்தது. தன் சாவை எதிர்கொள்ளவிருக் கும் இவ்வேளையில், தந்தையுடனான முழு ஒன்றிப்பில் தனியாகச் செபிக்கிறார் மானிட மகனாம் இயேசு. தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் தன்னருகிலிருக்கவும் அவர் ஆவல் கொள்கிறார். அங்கு இவர்களின் இருப்பு, சிலுவைப்பாதையின் போது அனைத்துச் சீடர்களும் இயேசுவின் அருகில் இருப்பதற் கான அழைப்பாக உள்ளது.
இயேசு இங்கு செபித்த செபம், மரணத்தின் முன்னால் மனித பயத்தை வெளிப் படுத்துவதாக இருந்தாலும், தந்தையின் விருப்பத்திற்கு முழுமையாக கீழ்ப்படிவதை யும் காட்டி நிற்கின்றது. "என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்ற இயேசுவின் வார்த்தைகள், இறைவிருப்பத்திற்கு நாம் முழுமையாக நம் மையே கையளிப்பதன் வழியாகவே மனிதத்துவத்தின் முழுமையைப் பெறமுடியும் என்பதை நமக்குக் கற்பிக்கின்றது.
தந்தையாம் இறைவனுக்கு இயேசு 'ஆம்' என உரைத்ததிலேயே ஆதாமின் பாவம் மீட்புப்பெற்று, மனித குலம் உண்மை வி்டுதலையை அடைந்தது. அதுவே இறைவ னின் குழந்தைகள் எனும் சுதந்திரம். நமக்கும் நம் வாழ்வுக்குமான கடவுளின் விருப்பத்தை சிறந்த முறையில் கண்டுகொள்ளவும், 'உம்முடைய திருவுளம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல மண்ணகத்திலும் நிறைவேறுக' என்ற தினசரி விண்ணப்பம் பலம் பெறவும், இயேசுவின் கெத்சமனி தோட்ட செபம் குறித்த நம் தியானம் உதவுவதாக.
இவ்வாறு தனது புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு தனது புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.