Monday, February 20, 2012

பிப்ரவரி 19, 2012

திருச்சபையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று 22 புதிய கர்தினால்களுடன் தூய பேதுருவின் தலைமைப்பீடம் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்தி மறையுரை ஆற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனக்காக அல்ல, மாறாக மக்களை இயேசு விடம் கொண்டு வரும் நோக்கத்திற்காகவே கத்தோ லிக்கத் திருச்சபை இருந்து வருகிறது என்றும், தான் யாரிடமிருந்து வந்ததோ மேலும் யாரால் வழிநடத் தப்படுகிறதோ அவரைத் தன் வழியாக ஒளிரச்செய் வதற்காகவே திருச்சபை இவ்வுலகில் செயல்படுகின்றது என்றும் கூறினார்.
  
வத்திக்கான் பசிலிக்காவில் எல்லாரையும் கவர்கின்ற 17ம் நூற்றாண்டு பெர்னினி யின் தூய பேதுருவின் தலைமைப்பீடத்தைக் குறிக்கும் வெண்கலச் சிற்பத்தை நோக்கி தனது சிந்தனைகளைத் திருப்பிய அவர், பேதுருவின் இருக்கையை திருச்சபைத் தந்தையர் தாங்கும் இச்சிற்பம், திருச்சபையின் பாரம்பரியத்தையும், ஒரே திருச்சபை பற்றிய உண்மை விசுவாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்று கூறினார்.
   பாறை என்ற பெயர் பேதுருவின் தனிப் பண்பை அல்ல, மாறாக இயேசுவால் அவ ரிடம் ஒப்படைக்கப்பட்ட மறைபொருள் அலுவலைச் சார்ந்தது என்ற திருத்தந்தை, திருவருட்சாதனங்கள், திருவழிபாடு, நற்செய்தி அறிவிப்பு, பிறரன்பு என திருச்சபை யில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
   கிறிஸ்துவின் மந்தையை விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றிணைப்பதற்கான பேதுரு மற்றும் அவரின் வழிவருபவரின் சிறப்புப்பணியின் அடையாளமாகவும் புனித பேதுருவின் தலைமைப்பீடம் இருக்கின்றது என்றும் இப்பெருவிழாத் திருப்பலியில் திருத்தந்தை  எடுத்துரைத்தார்.
   திருப்பலியின் இறுதியில் மக்களோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்த திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிய உரையில், புதிய கர்தினால்களுக்குத் தன
து சிறப்பான வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.