கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான உறவே துறவு வாழ்வின் தன்மையை விளக்குகின்றது - திருத்தந்தை
அர்ப்பண வாழ்வை சிறப்பிக்கும் அனைத்துலக துறவியர் தினமான இவ்வியாழன் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவி யருடன் சேர்ந்து திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற் றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகின்ற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டு, அனைத்து விசுவாசிகளுக்கும், சிறப்பாக துறவியர் அனைவருக்கும், அகப் புதுப்பித்தலுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது என்றும், துறவிகள் சாட்சிய வாழ்வு வாழ்வதற்கும், நற்செய்தி அறிவிப்பதற்கும் சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது என்றும் கூறினார்.
இறைவனோடு தனக்குள்ள உறவை உறுதிப்படுத்துவது, ஒருவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும், இது துறவற வாழ்க்கையின் தன்மையை அதிக ஆழமாக விளக்குவதாகவும் இருக்கின்றது எனவும் கூறிய திருத்தந்தை, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இருபால் துறவிய ரின் விசுவாசத்தின் சான்றுக்கு இந்நாள் அதிகக் கவனம் செலுத்துகின்றது என்றும், துறவிகள் தங்களையே இறைவனுக்குக் கையளிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டுவதாக இத்தினம் அமைகின்றது எனவும் குறிப்பிட்டார்.
ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள், நம்பிக்கை, பற்றுறுதி, பிற ரன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, மக்களை இறைவனிடம் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன என்று கூறிய அவர், துறவிகள் தங்களது சபைகளின் தனி வரம் மூலம், திருச்சபைக்கும் இன்றைய உலகுக்கும் நம்பத்தகுந்த சாட்சிகளாகத் திகழவும், திருச் சபையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், விசுவாசத்துக்கு எடுத்துக் காட்டுகளாக செயல்படவும் அவர்களை வலியுறுத்தினார்.
இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது, கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதை வெளிப்படுத்துகின்றது என்று உரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவே உலகின் ஒளி என்ற கருத்தானது கிறிஸ்து பிறப்பு விழாவில் வெளிப்படுத்தப்பட்டு திருக்காட்சி விழாவில் நிறைவை எட்டியது என்றும் சுட்டிக் காட்டினார்.
பிப்ரவரி 2ம் தேதியன்று இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வு திருச்சபையால் சிறப்பிக்கப்படுகின்றது. அருளாளரான திருத்தந்தை 2ம் ஜான் பால், 1997ம் ஆண்டில் முதன் முறையாக இந்நாளை அனைத்துலக துறவியர் தினமாக அறிவித்து, இத்தினத்தைச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.