நம் மீட்புக்காக மனுவுரு எடுத்த இயேசுவை
நம் இதயங்களில் வரவேற்போம் - திருத்தந்தை
நம் இதயங்களில் வரவேற்போம் - திருத்தந்தை
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2013ஆம் ஆண்டில் தன் முதல் புதன் பொது
மறைபோதகத்தை வத்திக்கானில் உள்ள பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் உள்ளூர்
நேரம் காலை 10.30 மணிக்கு வழங்கினார்.
நம் மீட்புக்காக மனுவுரு எடுத்த புதிய ஆதாமாம் இயேசுவை, நமது இதயங்களில் வரவேற்போம். இவ் வுலகில் நம் வாழ்வை உருமாற்ற வல்ல நம்பிக் கையைக் கொணரும் இயேசுவின் பிறப்பைச் சூழ்ந் திருக்கும் ஒளி குறித்து இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நாம் மகிழ்கிறோம். நம் மீட்புக்காக மனிதனாகப் பிறப்பெடுத்த இறைவனின் ஒரே மகனாம் இயேசுவின் தனித்தன்மை குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஒவ்வோர் ஆண்டும் இச்சிறப்புக் கொண் டாட்டங்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன. கன்னி மரியாவிடம் பிறந்த அவரே உண்மையில் இம்மானுவேல், 'கடவுள் நம்மோடு'. இறைவன் மனுவுரு எடுத்ததை நம் விசுவாச அறிக்கையில் நாம் வெளியிடும்போது நாம் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
அன்னை மரியாவின் சுதந்திர விருப்ப ஒத்துழைப்புடன் தூய மூவொரு கடவுள் ஆற்றிய பணியே 'மனுவுருவெடுத்தல்' என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மனுவுரு வெடுத்தல் என்பது புதிய படைப்பின் தொடக்கம். தூய ஆவியின் வல்லமையால் கருவில் உருவான இயேசு கிறிஸ்துவே புதிய ஆதாம். அவரே, திருமுழுக்குத் தண்ணீரின் வழியாக மனிதகுலத்திற்கு புதுப்பிறப்பை வழங்குகிறார். இதன் வழியாக நாம் வானகத் தந்தையின் புதல்வர், புதல்வியராக மாறுகிறோம். புதிய படைப்பின் விடியலுக்கு மகிழ்வுநிறைச் சாட்சியாக விளங்கவும், நம் பலவீனங்களை உருமாற்றி பலத்தை வழங்கும் இறைவல்லமையை நம்மில் அனுமதிக்கவும் உதவும் பொருட்டு, இந்தப் புனித காலத்தில் நம் மீட்பரை இதயங்களில் வரவேற்போம்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.