Sunday, November 25, 2012

நவம்பர் 25, 2012

இறையாட்சியை அறிவித்து பரப்பும் பணியைத்
திருச்சபை கொண்டுள்ளது - திருத்தந்தை

   கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலி முடிந்ததும், வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்பதைக் கொண்டாடுகிறது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் வரும் இந்த பெருவிழா, கடவுளே அனைத்துக்கும் அனைத்துமாக இருக்கும் இறையாட்சியைப் பற்றிய நமது பார் வையை விரிவாக்குகிறது. புனித சிரில் இவ்வாறு கூறுகிறார்: "நாம் கிறிஸ்துவின் முதல் வருகையைப் பற்றி மட்டுமல்ல, அதைவிட அழகான இரண்டாவது வருகை யைப் பற்றியும் அறிவிக்கிறோம். உண்மையில், முதலாவது வெளிப்பாடு துன்பத்துக் குரியது, இரண்டாவதோ இறை அரசுரிமைக்குரிய மாட்சியைக் கொண்டு வரும்... முதலாவதில், அவர் சிலுவையின் அவமானத்துக்கு உட்பட்டார், இரண்டாவதில் அவர் வானதூதர்கள் புடைசூழ மாட்சி பெறுவார்."
   இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறி விப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன் மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவதையும் கொண்டுள்ளன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவது போல, தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிறிஸ்து நிறுவிய இறையாட்சி முதலில் கிறிஸ்து என்ற மனிதரில் வெளியானது. கிறிஸ்துவின் இந்த இறையாட்சி திருச்சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு தொடக்கமும் விதையுமாக இருக்கும் இத்திருச்சபை, தூய ஆவியின் வல்லமையால் அனைத்து நாடுகளிலும் அதனை அறிவித்து பரப்பும் பணியைக் கொண்டுள்ளது. குறித்த காலத்தின் முடிவில் நமது ஆண்டவர் இறையாட்சியைத் தந்தையாம் இறைவனிடம் வழங்குவார் மற்றும் அன்புக் கட்டளைக்கு இயைந்த வகையில் வாழ்ந்த அனைவரையும் அவரிடம் கையளிப்பார்.
   நற்செய்திக்குரிய நமது மனமாற்றத்தின் மூலம், கடவுளின் மீட்பு பணியைத் தொடர்ந்தாற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பணிவிடை ஏற்க அன்றி, உண் மைக்கு சான்று பகர வந்த அரசரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோம். இந்த உணர் வுடன், இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஆறு பேருக் காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் தூய ஆவியால் நம்பிக்கை யிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு அவரின் அனைத்துக் கொடைகளாலும் அவரால் நிரப்பப்படுவார்களாக!