Monday, January 30, 2012

ஜனவரி 29, 2012

கடவுளின் அதிகாரம் அன்பிலும் தாழ்ச்சியிலும்
சேவையிலும் வெளிப்படுகிறது - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளா கத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்க வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புனித பூமியின் அமைதிக்கான உலக பரிந்துரை நாளை முன்னிட்டு 2 புறாக்களைப் பறக்கவிட்டு, கடவுளின் அன்பு நிறைந்த அதிகாரத்தைப் பற்றிப் பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   இன்றைய நற்செய்தி வாசகம், ஒய்வு நாளில் இயேசு கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் கற்பித் ததைப் பற்றி பேசுகிறது. அவரது போதனையின் நடுவே, இயேசுவை "கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' அதாவது 'மெசியா' என்று அடையாளப்படுத்திய தீய ஆவி பிடித்திருந்த மனிதருக்கு விடுதலை அளித்தது மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. உடனேயே அவரது புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. அங்கு அவர் இறையரசை அறிவித்து எல்லா விதமான நோயுற்றோரையும் குணமாக்கினார்.
   இயேசு மனிதரிடம் பேசுகின்ற வார்த்தை, தந்தையின் திருவுளத்துக்கும் மேலும் தங்களைப் பற்றிய உண்மைக்கும் உடனடியாக வழி திறக்கின்றது. வார்த்தையின் விளைவாக, இயேசு தீமையில் இருந்து விடுதலை அளிக்கும் அடையாளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தார். புனித அத்தனாசியுஸ் கூறுவது போன்று, "தீய ஆவிகளுக்கு கட்டளையிட்டு விரட்டுவது மனிதரின் செயலல்ல, அது கடவுளின் செயல். உண்மையில், ஆண்டவர் மனிதரை நோய்களில் இருந்தும் தளர்ச்சியில் இருந்தும் விலக்குகிறார்." இறை அதிகாரம் என்பது இயற்கையின் ஆற்றல் அல்ல. அது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் அன்பின் ஆற்றல். மேலும் அவரது ஒரே பேறான மகனில் மனுவுரு ஏற்று, நமது மனித குலத்திற்கு இறங்கி வந்து பாவக் கறைபடிந்த உலகை குணப்படுத்துகிறார்.
   மனிதரின் அதிகாரம் என்பது உரிமை, பதவி, அடக்கி ஆள்தல், வெற்றி என்னும் விதத்தில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. எப்படியானாலும், கடவுளைப் பொறுத்த வரை அதிகாரம் என்பதன் பொருள் சேவை, தாழ்ச்சி, அன்பு; அதாவது குனிந்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசுவின் வழிமுறையில் நுழைந்தால், அவர் மனிதரின் உண்மையான நன்மையையே விரும்பினார், காயங்களை குணப்படுத் தினார், அன்புக்காக தன் உயிரையே கையளித்தார், ஏனெனில் அவர் அன்பாக இருக்கிறார். சியன்னா புனித கத்தரீன் தனது கடிதங்களுள் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கடவுள் தலைசிறந்த முடிவற்ற அன்பாக இருக்கிறார், மேலும் நமது நன்மையைத் தவிர வேறெதனையும் அவர் விரும்பவில்லை என்பதை, உண்மை யில், விசுவாசத்தின் ஒளியால் நாம் கண்டு அறிந்துகொள்ள வேண்டும்."
   அன்பு நண்பர்களே, வியாழக்கிழமை பிப்ரவரி 2ந்தேதி, நம் ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம்; அது அர்ப்பண வாழ்வுக்கான உலக நாளாகும். நம்பிக்கையோடு நாம் தூய்மைமிகு மரியாவை வேண்டுவோம்; அவர் மனித குலத்தை விடுவித்து குணமாக்கும் இறை இரக்கத்தால் நமது இதயங்கள் ஈர்க்கப்படுமாறு வழிநடத்துவதோடு, அன்பின் ஆற்ற லால் அவற்றை அனைத்து அருளாலும் தயவாலும் நிரப்புவார். வாழ்வின் தடு மாற்றங்களிலும் தீமையின் வெளிப்படையான வளர்ச்சியிலும், வழியும் உண்மை யும் உயிருமான ஆண்டவர் இயேசுவில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்க நாம் செபிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Wednesday, January 25, 2012

ஜனவரி 25, 2012

புதன் மறைபோதகம்: கிறிஸ்துவைப் பின்பற்றுவோர்
அனைவரின் ஒன்றிப்புக்காக செபிப்போம் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் வழக்கமான குளிர் இல்லையெனினும் வாடைக்காற்று வீசி, குளிரின் தாக்கத்தை தந்து கொண்டு இருப்பதன் காரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே திருப் பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனைகளை இன் றைய மறைபோதகத்தில் தொடர்ந்தார்.
   இறுதி இரவு உணவின் போது இயேசு வழங்கிய குருத்துவச் செபம் குறித்து இன்று நோக்குவோம். யோம் கிப்பூர் எனும் யூதர்களின் பரிகாரத் திருவிழாவின் பின்னணியில், குருவும் பலிப்பொருளுமான இயேசு, தான் ஒப்புரவுப் பலியாகும் வேளையில் தந்தை தன்னை மகிமைப்படுத்துவாராக எனச் செபிக்கிறார். தன் சீடர்களைத் தனியாக எடுத்து அவர்களை இவ்வுலகில் தன் பணியைத் தொடர்ந்து நடத்த அனுப்பும் வண்ணம், அவர்களைத் திருநிலைப்படுத்த தந்தையிடம் வேண்டுகிறார் இயேசு.
   திருத்தூதர்களின் போதனை வழி தன் மேல் விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் ஒன்றிப்பு எனும் கொடை வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறார் இயேசு. ஆகவே, அவரின் குருத்துவ செபமானது, திருச்சபையையும், சீடர் சமூகத்தையும் நிறுவிய ஒன்றாக நோக்கப்படலாம். இந்தச் சீடர் சமூகம், இயேசுவில் கொள்ளும் விசுவாசத்தின் வழி ஒரே குடும்பமாக மாற்றப்பட்டு அவரின் மீட்புப் பணியில் பங்கு பெறுகிறது. 
   ஆண்டவராம் இயேசுவின் குருத்துவச் செபத்தை தியானிக்கும் வேளையில், நாம் நம் திருமுழுக்குத் திருநிலைப்பாட்டில் வளரவும், இந்த உலகிற்கும் நம் அயலா ருக்குமான தேவைகளுக்கென நம் செபங்களைத் திறக்கவும் உதவும் அருளைத் தந்தையாம் இறைவனிடம் வேண்டுவோம். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் நாம் செய்தது போல், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரிடையேயான கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு எனும் கொடைக்காகச் செபிப்போம். இந்த ஒன்றிப்பைக் காணும் இவ்வுலகம் மானிடமகனிலும் அவரை அனுப்பிய தந்தையிலும் விசுவாசம் கொள்ளும்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 23, 2012

ஜனவரி 22, 2012

கிறிஸ்துவில் ஒன்றாக நாம் ஆழமான
உறுதி ஏற்போம் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளா கத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஆவலுக்கும் உண்மை சுதந்திரத்திற் கான ஆசைக்கும் இடையே உள்ள ஆழ்ந்த ஆன்மீக தொடர்பை எடுத்துரைத்தார்.
   போலந்து நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஆர்த்தோடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டான்ட் சபை களை உள்ளடக்கிய குழுவினரால் 2012ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்காக (ஜனவரி 18-25) உருவாக்கப்பட்ட, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்' என்ற மையக்கருத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, "நடைமுறை வரலாற்றில் போலந்து பல்வேறு விதமான துன்பங்களுக்கு எதிராக தைரியமாக போராடுவதுடன், விசுவாசத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த உறுதிக்கு மீண்டும் மீண்டும் சான்றாக திகழ்கிறது" என்று கூறினார்.
   மேலும் அவர், "பல நூற்றாண்டுகளின் படிப்பினைகள் மூலம் போலந்து கிறிஸ்த வர்கள், அவர்களின் சுதந்திரத்திற்கான ஆசையில் ஒரு ஆன்மீக பரிமாணத்தை இயற்கையான உள்ளுணர்வாக கொண்டுள்ளனர். மேலும், ஆழ்ந்த உள்மன மாற்றத் தோடு இணைந்திருந்தால் மட்டுமே உண்மையான வெற்றியை அடைய முடியும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.
   திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு: இந்த வாரம் உல கெங்கும் உள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை சிறப்பிக்கிறோம். தூய பவுல் கூறுவது போன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றி வழியாக நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம். கிறிஸ்துவைப் பின்பற்று வோர் அனைவரின் ஒன்றிப்புக்காக நம் செபங்களை புதுப்பிப்பதோடு, அவரில் ஒன்றாக நாம் ஆழமா உறுதி ஏற்போம். உங்கள் ஒவ்வொருவர் மீதும், வீட்டிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்குமான கடவுளின் ஆசிகள் பொழியப்பட செபிக்கிறேன்.
   இத்திங்களன்று சந்திர புத்தாண்டை சிறப்பிக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறிய திருத்தந்தை, "பொருளாதார, சமூக நெருக்கடிகள் நிறைந்த இன்றைய உலகில், புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டதாகவும், துன்புறுவோருக்கு விடுதலை அளிப்பதாகவும் குறிப்பாக இளையோருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் இலட்சிய பயணத்தில் நம்பிக்கை வழங்குவதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

Wednesday, January 18, 2012

ஜனவரி 18, 2012

புதன் மறைபோதகம்: நற்செயதிக்கான ஒன்றிணைந்த சாட்சிகளாக ஆண்டவரை மன்றாடுவோம் - திருத்தந்தை

   ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை திருச்சபையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப் புக்கான செப வாரம் குறித்து, இப்புதன் மறை போதகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கருத்துக்களை வழங்கினார்.
   இப்புதனன்று துவங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், ஒன்றிப்பு எனும் கொடைக்காக செபிக்குமாறு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கி றது. 'நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்' என்ற இவ்வாண்டின் செப வாரத்திற்கான தலைப்பு, கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் போலந்து கிறிஸ்தவ சபைகளின் அவை பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டது. அடக்குமுறை மற்றும் சித்ரவதை குறித்த போலந்தின் அனுபவம், பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றி குறித்து ஆழமாகத் தியானிக்கத் தூண்டுகிறது. விசுவாசத்தின் வழியாக இயேசு பெற்ற இந்த வெற்றியை நாம் பகிர்கிறோம். தன் போதனை, எடுத்துக்காட்டு மற்றும் பாஸ்கா மறையுண்மை வழி வெற்றிக்கானப் பாதையைக் காட்டினார் நமதாண்டவர். 
   இந்த வெற்றியானது, உலக வலிமையால் அல்ல, மாறாக, அன்பாலும் ஏழைகள் மீதான அக்கறையாலும் பெறப்பட்டது. கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமும், உள்மன மாற்றமும், தனிமனித நிலையிலும் சமூக அளவிலும் கிறிஸ்தவ ஒன்றிப் புக்கான செபத்தோடு எப்போதும் இணைந்துச் செல்வதாக இருக்க வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், நம் மனங்கள் மாற்றம் பெற்று நற்செய்திக்கான ஒன்றிணைந்த சாட்சிகளாக விளங்கவும் உதவுமாறு நம் ஆண்டவராம் இயேசுவை நோக்கி இச்செப வாரத்தில் சிறப்பான விதத்தில் செபிப்போம். இதன்வழி நாம், புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு நம் பங்கை ஆற்று வதோடு, இன்றைய காலத்தின் அனைத்து மக்களின் ஆன்மீகப் பசிக்கு முழுமையான விதத்தில் பதிலளிப்போம்.
   இவ்வாறு, தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனை வருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 16, 2012

ஜனவரி 15, 2012

கடவுளின் அழைப்புக்கு இளையோர் பதிலளிக்க ஆன்மீக
வழிகாட்டிகள் உதவ வேண்டும் - திருத்தந்தை

   இறை அழைத்தலைக் குறித்து உரைக்கும் இஞ் ஞாயிறு திருப்பலி வாசகங்களை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் வாசகத்தில் இடம்பெற்ற சாமுவேலின் அழைப்பினையும், நற் செய்தியில் காணும் இயேசுவின் முதல் சீடர்களின் அழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார்.
   இந்த இரண்டு நிகழ்வுகளிலும், அழைக்கப்பட்ட வர்கள் கடவுளின் குரலை அடையாளம் கண்டு பின்பற்ற உதவும் இடைநிலையாரின் பங்கை வலியுறுத்துகின்றன; கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் பணியாற்றுவதற்கான விசுவாசப் பயணத்தின் அழைப்பில் பதிலளிக்க, ஆன்மீக வழிகாட்டிகள் இத்தகைய மனநிலையோடு உதவ வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்தினார்.
   இறைபணி செய்வதற்கான அழைப்பில், பெற்றோரின் அடிப்படைப் பங்கை மறக்க முடியாது; பெற்றோரது மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் உரிய விசுவாசமும், இல்லற அன்பும் அவர்களது குழந்தைகளின் வாழ்வை அழகிய விதத்தில் இறையன்பில் கட்டி எழுப்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
   அனைத்து நிலையில் கற்பிப்போரும், குறிப்பாக குருக்களும் பெற்றோரும், இளையோரின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் மட்டுமின்றி, இறைவனின் அழைப் பிற்கு பதிலுரைக்க உதவும் ஆன்மீகப் பங்காற்றுவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று திருத்தந்தை செபித்தார்.
   மூவேளை செப உரையை ஆற்றி, மக்களாடு இணைந்து செபித்த பின், உலகக் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் குறித்த தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, அமைதியில் வாழும் நோக்கில் புது இடங்களைத் தேடி குடிபெயர்வோர் இவர்கள் என்றார். இந்த மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான செப வாரம் குறித்தும் பேசிய அவர், கிறிஸ்தவ சபைகளிடையே முழு ஒன்றிப்பு ஏற்பட அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.

Thursday, January 12, 2012

ஜனவரி 11, 2012

புதன் மறைபோதகம்: நற்கருணை திருச்சபையின்
மேலான செபமாக இருக்கிறது - திருத்தந்தை

   இப்புதனன்று திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத் தில் திருப்பயணிகளை சந்தித்து, புதன் பொது மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் தொடர் மறையுரை யில் இயேசுவின் இறுதி இரவுணவு செபம் பற்றிய கருத்துக்களை வழங்கினார்.
   தன் உடலும், இரத்தமும் அடங்கிய ருட்சாதன மான நற்கருணையை நம் ஆண்டவர் நிறுவியது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, தனது சிலுவைப் பலி மற்றும் மகிமையுள்ள உயிர்த்தெழுதலை எதிர்நோக்கிய இயேசு, தன்னையே பரிசாக இதில் தந்திருக்கிறார் என்று கூறினார்.
   நற்கருணை இயேசு மற்றும் அவரது திருச்சபையின் மேலான செபமாக இருக்கிறது. பாஸ்காத் திருவிழா மற்றும் இஸ்ராயேலின் விடுதலை குறித்த நினைவுகளுக்கு புது அர்த்தம் கொடுத்த இறுதி இரவுணவில் இயேசுவின் செபம் எபிரேயர்களின் ஆசியுரை ஒன்றை எதிரொலிப்பதாக உள்ளது. எபிரேயர்களின் இந்த செபம் நன்றி கூறுவதையும் ஆசீர் எனும் கொடையையும் உள்ளடக்கியது. 
   தான் இறப்பதற்கு முந்தைய அந்த இரவில் இயேசு, அப்பத்தைப் பிட்டு கிண்ணத் தைக் கையளித்த நிகழ்வு, தந்தையின் விருப்பத்திற்குத் தாழ்ச்சியுடன் பணிந்து, மீட்பிற்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்ததன் அடையாளமாக இருந்தது. இதன்வழி, தொன்மை வழிபாட்டு முறையை முழு நிறைவுக்குக் கொணர்ந்த உண்மையான பாஸ்கா செம்மறியாகக் காட்சியளிக்கிறார் இயேசு. 
   இயேசுவின் செபம் அவரின் சீடர்களிடையே, குறிப்பாக, தூய பேதுருவில் புது வலிமையைத் தூண்டுவதாக உள்ளது. கிறிஸ்துவின் கட்டளைக்குப் பணிந்த வகையிலான நம் திருப்பலிக் கொண்டாட்டம், இறுதி இரவுணவு செபத்தில் நம்மை மேலும் ஆழமான முறையில் இணைப்பதாக. மேலும், இயேசுவுடன் கொள்ளும் ஒன்றிப்பில் நம் வாழ்வை மேலும் முழுமையான விதத்தில் தந்தைக்குப் பலியாக வழங்க நம்மைத் தூண்டுவதாக.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 9, 2012

ஜனவரி 8, 2012

திருமுழுக்கு இறைவனின் குழந்தைகளாக இருப்பதன்
மகிழ்ச்சியை உணர்வதற்கான அழைப்பு - திருத்தந்தை

   நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருமுழுக்கு திருவருட்சாதனத்தால் இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை கிறிஸ்தவர்களுக்கு நினை வுபடுத்தினார்.
   இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, ஒவ்வொரு படைப்புயிரின் இருப்புக்கும், இறைவனே மூலக் காரணமாக இருக்கிறார் என்றும், தந்தையாம் இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் தனிப்பட்ட விதத்தில் உறவு வைத்துள்ளார் எனவும் எடுத்துரைத்ததோடு, நம்மை ஒன்றிணைப்பதற்கு அடிப்படையான வரையறை, நாம் குழந்தையாக இருப்பது என் றும், நம்மில் எல்லோரும் பெற்றோர் அல்ல, ஆனால் நாம் எல்லாரும் குழந்தைகள் எனவும் கூறினார்.
   இவ்வுலகில் பிறப்பது நமது தேர்வு அல்ல, நாம் பிறப்பதற்கு ஆசைப்படுகிறோமா என்று நம்மிடம் முதலில் கேட்கப்படுவதுமில்லை என தெரிவித்த
அவர், வாழ்க் கையை ஒரு கொடையாக வரவேற்பதற்கு, நாம் வாழும் காலத்தில் வாழ்க்கை பற்றிய ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது, நமது ஆன்மாவிலும் நம் பெற்றோ ருடனான உறவிலும் பக்குவமடைந்த நிலையைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
   இவ்வெண்ணமானது, உயிரியல் ரீதியாக அல்ல, மாறாக, ஒழுக்க ரீதியாக பெற்றோராக இருக்கும் திறமையை மக்களில் ஏற்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்பட்டு அவரின் திட்டத்தின்படி இருக்கிறோம்
எனவும்,
திருச்சபைக்கும் உலகத்திற்கும் மறுபிறப்பின் ஊற்றாக விளங்கும் திருமுழுக்கின் மாபெரும் மறையுண்மைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

Sunday, January 8, 2012

ஜனவரி 8, 2012

குழந்தைகளுக்கு கற்பிக்கும் சரியான வழியை
செபத்திலும் அருட்சாதனங்களிலும் பெற்றோர்கள்
கண்டுகொள்ள முடியும் - திருத்தந்தை

   வத்திக்கான், சிஸ்டைன் சிற்றாலயத்தில் இந்த ஞாயிறு ஆண்டவரின் திருமுழுக்கு விழா திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கி, அவர்களின் பெற்றோர்களுக்கும், ஞானப் பெற்றோருக்கும் பின் வருமாறு மறையுரை ஆற்றினார்.
   கல்வி கற்பிப்பது என்பது ஒரு சவாலான பணி ஆகும். சில தருணங்களில் இது மனித திறனுக்கு மேற்பட்ட கடின செயலாக இருக்கிறது. அனைத்து மனிதர்களுக்கும் உண்மையான முதல் கல்வி அளிப்பவரான கடவுளோடு இணைந்து நாம் செயலாற்றும்போது கல்வி ஒரு அற்புதமான பணியாக மாறுகிறது.
   திருமுழுக்கு யோவான் தனது சீடர்களுக்கு சிறந்த ஆசிரியராக திகழ்ந்த போதிலும், அவரைவிட வல்லமைமிக்க தூய ஆவியால் திருமுழுக்கு வழங்கும் ஒருவரைப் பற்றி அறிந்திருந்தார். எனவே, அவர் இயேசுவுக்கு சாற்று பகர்ந்தார்.
    இறையன்பின் உயிரளிக்கும் இரத்தம் வழிந்தோடும் வாய்க்கால்களாக பெற்றோர் உள்ளனர். வாய்க்கால்களாகிய தாயும் தந்தையும் கடவுளிடம் இருந்து தொலைவில் இருந்தால், அவர்கள் கல்வி கற்பிக்கும் திறனை இழக்க நேரிடும். பெற்றோரும் ஞானத் தாய், தந்தையரும் தூய ஆவியாரின் பிரசன்னத்திலும் செயல்பாட்டிலும் நம்பிக்கை கொண்டு, செபத்திலும் அருட்சாதனங்களிலும் அவரை வரவேற்று, அவர் உதவியைக் கேட்க வேண்டும்.
   கற்பித்தலுக்கு முதல் தேவையாக இருப்பது செபமே. ஏனெனில், நாம் செபத்தில் நம்மையே கடவுளுக்கு கொடுக்கிறோம்; நம் குழந்தைகளை கடவுளிடம் ஒப்படைக் கிறோம். அவரே நமக்கு முன்பாகவும், நமக்கு மேலாகவும் அவர்களை அறிந்தவரும், அவர்களது உண்மை நலம் எது எனத் தெரிந்தவருமாக இருக்கிறார்.
   செபத்திலும் அருட்சாதனங்களிலும், குழந்தைகளுக்கு கற்பிக்கும் மிகச் சரியான வழியை, பெற்றோர் கண்டுகொள்ள முடியும். எப்போது மென்மையாக அல்லது உறுதி யாக நடந்துகொள்ள வேண்டும், மேலும் எந்தெந்த வேளையில் அமைதியாக இருப் பது அல்லது குழந்தைகளைத் திருத்துவது என்பவற்றை கற்க முடியும்.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது மறையுரையை நிறைவுசெய்த வேளையில், புதிதாக திருமுழுக்கு பெற்ற குழந்தைகளின் வாழ்வில் இயேசு உடனிருக்கும் வகை யில், அவர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வரவேண்டும் என்றும் செபித்தார்.

Saturday, January 7, 2012

ஜனவரி 6, 2012

வழிநடத்தும் விண்மீனாகிய கிறிஸ்துவின் ஒளியை
திருச்சபையே உலகுக்கு வழங்குகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் இவ்வெள் ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில், அயர்லாந் துக்கான புதிய திருப்பீடத்தூதர் பேரருட்திரு சார்லஸ் ஜான் பிரவுன், ஜார்ஜியா மற்றும் அர்மேனியாவுக் கானத் திருப்பீடத்தூதர் பேரருட்திரு மரெக் சொல்க் சின்ஸ்கி ஆகிய இருவரையும் பேராயர்களாகத் திரு நிலைப்படுத்தினார். 
   இத்திருப்பலியில் மறையுரை ஆற்றிய திருத் தந்தை, கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்ட மனிதர் களாவும், உண்மையைப் பகுத்து அறியக்கூடியவர்களாகவும் ஆயர்கள் விளங்க வேண்டும் என்றும், கடவுளின் உண்மை வழியில் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டுமென்றும் கூறினார். கடவுளை அறியும் ஒருவரால் மட்டுமே பிறரை கடவுளிடம் இட்டுச்செல்ல முடியும் என்று கூறிய பாப்பிறை, மனிதருக்காக ஏங்கும் கடவுளைப் பெற்று, பின்னர் மனிதருக்கு அவரையே வழங்குவது ஆயர்களுடைய பணியாகும் என்றும் கூறினார்.
   கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிகாட்டிய விண்மீன் பற்றி,
விண்மீன்கூட்டம், சூப்பர்நோவா அல்லது வால்நட்சத்திரம் என வல்லுனர்கள் பலவாறு பேசினாலும், நம்மை வழிநடத்தும் மாபெரும் சூப்பர்நோவா விண்மீன் உண்மையில் இயேசு கிறிஸ்துவே என்று திருத்தந்தை கூறினார். புனிதர்கள் கடவுளின் விண்மீன்கள் என்றும் உரைத்த அவர், கடவுளின் ஒளியை உலகுக்குக் காட்டுவதற்கானப் பணியைப் பெற்றுள்ள ஆயர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்குப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம் என்றார்.

   இப்பெருவிழா நாளில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் உலகத் துக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெரு விழா நாளில் நாம் பெற்ற விசுவாசத்திற்கு நன்றி செலுத்துவோம். உலகளாவிய திருச்சபையின் திருப் பணிக்கு, விசுவாசிகள் தங்களது சொல்லாலும் செய லாலும் சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   இந்த உலகத்தில் எத்தனை வளங்கள் இருந்த போதிலும் அது, மனித சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒளியைக் கொடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றது. ஆயினும், திருச்சபை இறைவார்த்தையின் வழியாக நற்செய்தி ஒளியை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கொடுக் கின்றது என்று கூறிய திருத்தந்தை, "ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு சமூகமும் மீட்பராம் கிறிஸ்துவின் ஒளியாலும் அமைதியாலும் நிரப்பப்படட்டும்" எனவும் வாழ்த்தினார்.

Wednesday, January 4, 2012

ஜனவரி 4, 2011

புதன் மறைபோதகம்: புதிதாக பிறந்துள்ள மீட்பரை
நம் இதயங்களில் வரவேற்போம் - திருத்தந்தை

   இந்த கிறிஸ்து பிறப்பு காலத்தில் திருப்பயணி களைச் சந்தித்து புத்தாண்டின் முதல் புதன் மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இக்காலத்தின் முக்கியத்துவம் குறித்த தன் கருத்துக் களை வழங்கினார்.
   இறைமகன் மனுவுடல் எடுத்த மறையுண்மை யையும், உலகின் மீட்பராக தன்னை வெளிப்படுத்தி யதையும் திருச்சபை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் சிறப்பிக்கின்றது. கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த நம் முதல் பதிலுரை மகிழ்ச்சி என்பதை விவிலியத்தின் சாட்சியத்திலிருந்தும், திரு
ச் சபையின் பாரம்பரியங்களிலிருந்தும் கண்டுகொள்கிறோம். தனது தெய்வீக வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக மாற்றும் வண்ணம் இறைவன் மனித நிலையை எடுத்துக் கொண்டார் என்பதை உணர்வதிலிருந்து இந்த மகிழ்ச்சி பிறக்கின்றது. 
   திருநற்கருணையில் நாம் உள்ளார்ந்த விதமாக அனுபவிக்கும் இந்த வியக்கத்தகு பரிமாற்றம் குறித்து நாம் ஆழமாக தியானிப்பது, நாம் கடவுளின் உரிமைப் பிள்ளைகளாகும் மேன்மைமிகு மாண்பை புரிந்து ஏற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது ஒளியின் திருவிழா என திருவழிபாடு நமக்குக் கற்பிக்கின்றது. ஏனெனில், உலகின் ஒளியாகவும் இறைத்தந்தையுடைய மகிமையின் சுடரொளியாகவும் இருக்கும் இயேசு, நம்மை இருளிலிருந்து ஒளியின் ஆட்சிக்குள் கொணர்ந்ததுடன், நற்செய்தியின் ஒளியை அனைத்துப் படைப்புகளுக்கும் எடுத்துச் செல்லும்படி நமக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிதாகப் பிறந்துள்ள மீட்பரை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம் இதயங்களுக்குள் வரவேற்போம். அவ்வாறு வரவேற் பதன் வழியாக அவரிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி, புத்துணர்வு மற்றும் ஒளி எனும் கொடைகள் நம் வாழ்வை மாற்றியமைப்பதாக.
   இவ்வாறு, புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். பின்னர் எல்லோ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 2, 2012

ஜனவரி 1, 2012

உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநிறுத்துவது
ஒரு சவாலான பயணம் - திருத்தந்தை

   புதிய ஆண்டின் முதல் நாளன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்த யிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாண்டின் முதல் மூவேளை செப உரையை வழங்கும்போது, ஜனவரி முதல் நாளில் கொண்டாடப்படும் இறைவனின் தாய் மரியா என்ற திருநாளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அன்னை மரியாவின் வழியாகவும், குழந்தை இயேசுவின் முகத்திலும் இறைவனின் திருமுகத்தைக் கண்டு, புலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டை நாம் துவக்குகிறோம் என்றார்.
   45வது உலக அமைதி நாளுக்கென்று தான் வெளியிட்டுள்ள செய்தியில் வலியுறுத்தியுள்ள இளையோர் குறித்த தன் கருத்துக்களைக் குறித்து இம்மூவேளை செப உரையில் பேசிய திருத்தந்தை, கல்வி, வேலை தேடுதல், வாழ்க்கைத் துணையைத் தேர்தல், குடும்பம் அமைத்தல் என்று வாழ்வின் முக்கியமான முடிவு களில் சரியான பாதையைத் தேடும் இளையோருக்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய அனைத்து அமைப்புக்களும் சரியாக வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
   நீதியையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துவது மிகப் பெரிய சவால் என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அமைதி என்பது ஒரு நாளில் அடையக்கூடிய ஓர் இலக்கு அல்ல என்றும், தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவாலான பயணம் என்றும் கூறினார்.
   கிறிஸ்மஸ் காலத்தில் நாம் கொண்டாடும் அமைதியின் அரசரும் அவரது தாயும், நம் உலகத் தலைவர்கள் அனைவரையும் அமைதி மற்றும் நீதியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுதலுடன் தன் மூவேளை
செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்த அனைவருக்கும் தனது சிறப்பு ஆசீரையும் வழங்கினார்.

Sunday, January 1, 2012

ஜனவரி 1, 2012

இயேசுவின் வழியாக கடவுள் விடுக்கும் அமைதியின் அழைப்புக்கு செவிகொடுங்கள் - திருத்தந்தை

   இன்றைய நாள் தொடங்கிய வேளையில், உரோம் தூய பேதுரு பேராலயத்தில் புத்தாண்டின் முதல் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மரியா இறைவனின் தாய் பெருவிழா பற்றியும் உலக அமைதி நாள் பற்றியும் மறையுரை வழங்கினார்.
   "மரியா திருச்சபையின் தாயாகவும் எடுத்துக் காட்டாகவும் இருக்கிறார். அவர் விசுவாசத்தினால் இறை வார்த்தையை பெற்று, தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்தார். மரியாவைப் போன்றே, அன்னை யாம் திருச்சபையும் கடவுளின் ஆசிகளுக்கு இடைநிலையாளராக விளங்குகிறாள்: அவள் இயேசுவைப் பெறுவதில் அதைப் பெற்று, இயேசுவைப் பெற்றெடுப்பதில் அதை வழங்குகிறாள். அவர் உலகினால் வழங்க முடியாத இரக்கமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்; அப்பத்தின் அளவிலாவது உலகிற்கு அது தேவைப்படுகிறது" என்று திருத்தந்தை கூறினார்.
   "இளையோரை நீதியிலும் அமைதியிலும் பயிற்றுவித்தல்" என்ற மையக்கருத்தில் உலக அமைதி நாளுக்கான செய்தியை வழங்கிய பாப்பிறை, "இந்த காலத்தில், தொழில் நுட்ப அறிவில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நிழல்களின் முகத்தில் தெளிவற்றதாக உள்ள இன்றைய உலகின் அடிவானத்தில், நம்பிக்கை உள்ள எதிர் காலத்தை காண உண்மையின் அறிவிலும், அடிப்படை மதிப்பீடுகளிலும், புண்ணியத் திலும் இளையோரைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு உள்ளது. அனைத்தையும் உள் ளடக்கிய இந்த கல்வியில், நீதியிலும் அமைதியிலும் உருவாக்குதலும் இடம்பெற வேண்டும்" என்று உரைத்தார்.
   நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகி, பின்னர் பள்ளிகளிலும், இளையோரை நெறிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களிலும் இருக்க வேண்டும் என்ற திருத்தந்தை, அமைதியாக வாழ்வது என்பது இளையோர் சுயமாக விரும்பும் ஒரு நல்ல பண்பு; ஆயினும், உலகின் பல்வேறு எதிர்மறை சக்திகள் இளையோருக்கு அமைதிப் பாதையைக் காட்டத் தவறுவதால், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
   "பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண் ணினின்று நீதி கீழ்நோக்கும்" என்ற திருப்பாடல் 84ன் வரிகளை மேற்கோள்காட்டி தனது மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், "தன் மகன் இயேசு கிறிஸ்துவில் கடவுள் நம்மோடு பேசியிருக்கிறார்... அக்குரல் அமைதியைப் பற்றி பேசுகிறது... கடவுள் கூறுவதற்கு செவிகொடுங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.