Monday, January 9, 2012

ஜனவரி 8, 2012

திருமுழுக்கு இறைவனின் குழந்தைகளாக இருப்பதன்
மகிழ்ச்சியை உணர்வதற்கான அழைப்பு - திருத்தந்தை

   நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருமுழுக்கு திருவருட்சாதனத்தால் இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை கிறிஸ்தவர்களுக்கு நினை வுபடுத்தினார்.
   இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, ஒவ்வொரு படைப்புயிரின் இருப்புக்கும், இறைவனே மூலக் காரணமாக இருக்கிறார் என்றும், தந்தையாம் இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் தனிப்பட்ட விதத்தில் உறவு வைத்துள்ளார் எனவும் எடுத்துரைத்ததோடு, நம்மை ஒன்றிணைப்பதற்கு அடிப்படையான வரையறை, நாம் குழந்தையாக இருப்பது என் றும், நம்மில் எல்லோரும் பெற்றோர் அல்ல, ஆனால் நாம் எல்லாரும் குழந்தைகள் எனவும் கூறினார்.
   இவ்வுலகில் பிறப்பது நமது தேர்வு அல்ல, நாம் பிறப்பதற்கு ஆசைப்படுகிறோமா என்று நம்மிடம் முதலில் கேட்கப்படுவதுமில்லை என தெரிவித்த
அவர், வாழ்க் கையை ஒரு கொடையாக வரவேற்பதற்கு, நாம் வாழும் காலத்தில் வாழ்க்கை பற்றிய ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது, நமது ஆன்மாவிலும் நம் பெற்றோ ருடனான உறவிலும் பக்குவமடைந்த நிலையைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
   இவ்வெண்ணமானது, உயிரியல் ரீதியாக அல்ல, மாறாக, ஒழுக்க ரீதியாக பெற்றோராக இருக்கும் திறமையை மக்களில் ஏற்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்பட்டு அவரின் திட்டத்தின்படி இருக்கிறோம்
எனவும்,
திருச்சபைக்கும் உலகத்திற்கும் மறுபிறப்பின் ஊற்றாக விளங்கும் திருமுழுக்கின் மாபெரும் மறையுண்மைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் குறிப்பிட்டார்.