கிறிஸ்துவில் ஒன்றாக நாம் ஆழமான
உறுதி ஏற்போம் - திருத்தந்தை
உறுதி ஏற்போம் - திருத்தந்தை
இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளா கத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஆவலுக்கும் உண்மை சுதந்திரத்திற் கான ஆசைக்கும் இடையே உள்ள ஆழ்ந்த ஆன்மீக தொடர்பை எடுத்துரைத்தார்.
போலந்து நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஆர்த்தோடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டான்ட் சபை களை உள்ளடக்கிய குழுவினரால் 2012ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்காக (ஜனவரி 18-25) உருவாக்கப்பட்ட, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்' என்ற மையக்கருத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, "நடைமுறை வரலாற்றில் போலந்து பல்வேறு விதமான துன்பங்களுக்கு எதிராக தைரியமாக போராடுவதுடன், விசுவாசத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த உறுதிக்கு மீண்டும் மீண்டும் சான்றாக திகழ்கிறது" என்று கூறினார்.
மேலும் அவர், "பல நூற்றாண்டுகளின் படிப்பினைகள் மூலம் போலந்து கிறிஸ்த வர்கள், அவர்களின் சுதந்திரத்திற்கான ஆசையில் ஒரு ஆன்மீக பரிமாணத்தை இயற்கையான உள்ளுணர்வாக கொண்டுள்ளனர். மேலும், ஆழ்ந்த உள்மன மாற்றத் தோடு இணைந்திருந்தால் மட்டுமே உண்மையான வெற்றியை அடைய முடியும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு: இந்த வாரம் உல கெங்கும் உள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை சிறப்பிக்கிறோம். தூய பவுல் கூறுவது போன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றி வழியாக நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம். கிறிஸ்துவைப் பின்பற்று வோர் அனைவரின் ஒன்றிப்புக்காக நம் செபங்களை புதுப்பிப்பதோடு, அவரில் ஒன்றாக நாம் ஆழமான உறுதி ஏற்போம். உங்கள் ஒவ்வொருவர் மீதும், வீட்டிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்குமான கடவுளின் ஆசிகள் பொழியப்பட செபிக்கிறேன்.
இத்திங்களன்று சந்திர புத்தாண்டை சிறப்பிக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறிய திருத்தந்தை, "பொருளாதார, சமூக நெருக்கடிகள் நிறைந்த இன்றைய உலகில், புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டதாகவும், துன்புறுவோருக்கு விடுதலை அளிப்பதாகவும் குறிப்பாக இளையோருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் இலட்சிய பயணத்தில் நம்பிக்கை வழங்குவதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.