Saturday, January 7, 2012

ஜனவரி 6, 2012

வழிநடத்தும் விண்மீனாகிய கிறிஸ்துவின் ஒளியை
திருச்சபையே உலகுக்கு வழங்குகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் இவ்வெள் ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில், அயர்லாந் துக்கான புதிய திருப்பீடத்தூதர் பேரருட்திரு சார்லஸ் ஜான் பிரவுன், ஜார்ஜியா மற்றும் அர்மேனியாவுக் கானத் திருப்பீடத்தூதர் பேரருட்திரு மரெக் சொல்க் சின்ஸ்கி ஆகிய இருவரையும் பேராயர்களாகத் திரு நிலைப்படுத்தினார். 
   இத்திருப்பலியில் மறையுரை ஆற்றிய திருத் தந்தை, கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்ட மனிதர் களாவும், உண்மையைப் பகுத்து அறியக்கூடியவர்களாகவும் ஆயர்கள் விளங்க வேண்டும் என்றும், கடவுளின் உண்மை வழியில் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டுமென்றும் கூறினார். கடவுளை அறியும் ஒருவரால் மட்டுமே பிறரை கடவுளிடம் இட்டுச்செல்ல முடியும் என்று கூறிய பாப்பிறை, மனிதருக்காக ஏங்கும் கடவுளைப் பெற்று, பின்னர் மனிதருக்கு அவரையே வழங்குவது ஆயர்களுடைய பணியாகும் என்றும் கூறினார்.
   கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிகாட்டிய விண்மீன் பற்றி,
விண்மீன்கூட்டம், சூப்பர்நோவா அல்லது வால்நட்சத்திரம் என வல்லுனர்கள் பலவாறு பேசினாலும், நம்மை வழிநடத்தும் மாபெரும் சூப்பர்நோவா விண்மீன் உண்மையில் இயேசு கிறிஸ்துவே என்று திருத்தந்தை கூறினார். புனிதர்கள் கடவுளின் விண்மீன்கள் என்றும் உரைத்த அவர், கடவுளின் ஒளியை உலகுக்குக் காட்டுவதற்கானப் பணியைப் பெற்றுள்ள ஆயர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்குப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம் என்றார்.

   இப்பெருவிழா நாளில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் உலகத் துக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெரு விழா நாளில் நாம் பெற்ற விசுவாசத்திற்கு நன்றி செலுத்துவோம். உலகளாவிய திருச்சபையின் திருப் பணிக்கு, விசுவாசிகள் தங்களது சொல்லாலும் செய லாலும் சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   இந்த உலகத்தில் எத்தனை வளங்கள் இருந்த போதிலும் அது, மனித சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒளியைக் கொடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றது. ஆயினும், திருச்சபை இறைவார்த்தையின் வழியாக நற்செய்தி ஒளியை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கொடுக் கின்றது என்று கூறிய திருத்தந்தை, "ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு சமூகமும் மீட்பராம் கிறிஸ்துவின் ஒளியாலும் அமைதியாலும் நிரப்பப்படட்டும்" எனவும் வாழ்த்தினார்.