புதன் மறைபோதகம்: நற்கருணை திருச்சபையின்
மேலான செபமாக இருக்கிறது - திருத்தந்தை
மேலான செபமாக இருக்கிறது - திருத்தந்தை
இப்புதனன்று திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத் தில் திருப்பயணிகளை சந்தித்து, புதன் பொது மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் தொடர் மறையுரை யில் இயேசுவின் இறுதி இரவுணவு செபம் பற்றிய கருத்துக்களை வழங்கினார்.
தன் உடலும், இரத்தமும் அடங்கிய அருட்சாதன மான நற்கருணையை நம் ஆண்டவர் நிறுவியது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, தனது சிலுவைப் பலி மற்றும் மகிமையுள்ள உயிர்த்தெழுதலை எதிர்நோக்கிய இயேசு, தன்னையே பரிசாக இதில் தந்திருக்கிறார் என்று கூறினார்.
நற்கருணை இயேசு மற்றும் அவரது திருச்சபையின் மேலான செபமாக இருக்கிறது. பாஸ்காத் திருவிழா மற்றும் இஸ்ராயேலின் விடுதலை குறித்த நினைவுகளுக்கு புது அர்த்தம் கொடுத்த இறுதி இரவுணவில் இயேசுவின் செபம் எபிரேயர்களின் ஆசியுரை ஒன்றை எதிரொலிப்பதாக உள்ளது. எபிரேயர்களின் இந்த செபம் நன்றி கூறுவதையும் ஆசீர் எனும் கொடையையும் உள்ளடக்கியது.
தான் இறப்பதற்கு முந்தைய அந்த இரவில் இயேசு, அப்பத்தைப் பிட்டு கிண்ணத் தைக் கையளித்த நிகழ்வு, தந்தையின் விருப்பத்திற்குத் தாழ்ச்சியுடன் பணிந்து, மீட்பிற்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்ததன் அடையாளமாக இருந்தது. இதன்வழி, தொன்மை வழிபாட்டு முறையை முழு நிறைவுக்குக் கொணர்ந்த உண்மையான பாஸ்கா செம்மறியாகக் காட்சியளிக்கிறார் இயேசு.
இயேசுவின் செபம் அவரின் சீடர்களிடையே, குறிப்பாக, தூய பேதுருவில் புது வலிமையைத் தூண்டுவதாக உள்ளது. கிறிஸ்துவின் கட்டளைக்குப் பணிந்த வகையிலான நம் திருப்பலிக் கொண்டாட்டம், இறுதி இரவுணவு செபத்தில் நம்மை மேலும் ஆழமான முறையில் இணைப்பதாக. மேலும், இயேசுவுடன் கொள்ளும் ஒன்றிப்பில் நம் வாழ்வை மேலும் முழுமையான விதத்தில் தந்தைக்குப் பலியாக வழங்க நம்மைத் தூண்டுவதாக.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.