இயேசுவிலேயே நாம் வாழ்வைக் கொண்டிருக்கிறோம்
என்பதே எப்பொழுதும் நமது நம்பிக்கை - திருத்தந்தை
இறை இரக்கத்தின் ஞாயிறான இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் பாஸ்கா மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு மறையுரை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டு ஈஸ்டரை கொண்டாடும் போதும், உயிர்த்த இயேசுவை அவரது முதல் சீடர் கள் சந்தித்த அனுபவத்தை நாம் மீண்டும் வாழ்கி றோம். கிறிஸ்தவ வழிபாடு என்பது பழைய நிகழ்வு களையோ, குறிப்பிட்ட ஒரு மறைபொருளையோ உள் அனுபவத்தால் நினைவுகூர்வது மட்டுமல்ல; ஆனால் உயிர்த்த ஆண்டவரை சந்திப்பதே மிகவும் அவசியமானது.
காலங்களுக்கு முன்பே கிறிஸ்து தந்தையாம் கடவுளோடு இருந்தார்; மேலும், உண்மையிலேயே நம் அனைவரோடும் இருக்கிறார். மறைநூல் வழியாக நம்மோடு பேசும் அவர், வாழ்வளிக்கும் அப்பமாக தன்னையே நமக்கு உடைத்து தருகிறார். இயேசுவைக் காணுதல், அவரது உடலை, மெய்யான உடலைத் தொடுதல் போன்ற சீடர்களின் அனுபவ அடையாளங்களை வாழும் நாம், உலகு சார்ந்த பிணைப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று இயேசு சீடர்களை வாழ்த்தினார். இந்த பாரம்பரிய வாழ்த்து ஏதோ ஒன்றை புதியதாக உருமாற்றுகின்றது. அது இயேசு மட்டுமே தரக்கூடிய அமைதியின் பரிசாக மாறுகின்றது. ஏனெனில் அது தீமையின் மீது அவர் பெற்ற மாபெரும் வெற்றியின் பலன் ஆகும். இயேசு தனது சீடர்களுக்கு வழங்கிய அமைதி, சாந்தமும் பணிவும் கொண்ட ஆட்டுக்குட்டியாக தனது இரத்தம் முழுவதையும் சிந்தி, சிலுவையில் இறக்கும் அளவுக்கு இட்டுச் சென்ற அருளும் உண்மையும் நிறைந்த இறையன்பின் கனி ஆகும்.
இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடிய கிறிஸ்துவின் விலாவைப் பற்றிய நற் செய்தியே, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த ஞாயிறை இறை இரக்கத் தின் ஞாயிறாக அழைக்க விரும்பியதன் காரணம். இப்போது கிறிஸ்து உயிர்த்து விட்டார். வாழும் கிறிஸ்து உயிர்ப்பின் அருட்சாதனங்களாகிய திருமுழுக்கையும் நற்கருணையையும் ஊற்றெடுக்க செய்கிறார்; அவற்றை நம்பிக்கையுடன் அணுகு வோர் நிலை வாழ்வின் பரிசைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அன்பு சகோதர சகோதரிகளே, உயிர்த்த இயேசு நமக்கு அருளும் அமைதியின் கொடையை நாம் வரவேற்பதுடன், நமது இதயங்களையும் அவரது இரக்கத்தால் நிரப்புவோம். இவ்வாறு, தூய ஆவியின் ஆற்றலால், கிறிஸ்துவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழச் செய்த ஆவியால் நாமும் இந்த உயிர்ப்பின் கொடைகளை பிறருக்கு வழங்க முடியும். இரக்கத்தின் அன்னையாகிய மரியா, இவற்றை நமக்காக பெற்றுத் தருவாராக!
இங்கு திருப்பயணிகளாக வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்து கின்றேன். இன்றைய நற்செய்தியில், இயேசு சீடர்களுக்கு தோன்றி தோமாவின் சந்தேகத்தை நீக்குகிறார். அவரது இறை இரக்கத்தால், இயேசுவே மெசியா என்றும், அவரது பெயரிலேயே நாம் வாழ்வைக் கொண்டிருக்கிறோம் என்றும் எப்பொழுதும் நாம் நம்புவோம். உங்கள் மீதும், உங்கள் அன்புக்குரியவர்கள் மேலும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான ஆசீரைப் பொழிய வேண்டுகிறேன்.