Sunday, April 8, 2012

ஏப்ரல் 8, 2012

ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi)
திருத்தந்தையின் ஈஸ்டர் செய்தி

உரோம் நகரிலும் உலகெங்கும் உள்ள என் அன்பு சகோதர சகோதரிகளே!
   எனது நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார். திருச்சபையின் வெற்றிநிறை குரல் உங்களனைவ ரையும், மகதலா மரியாவின் உதடுகளிலிருந்து வரும் பழம்பெரும் பக்தி பாடலின் வார்த்தைகள் வழி வந்தடைவதாக. மகதலா மரியாவே, உயிர்ப்பு நாள் காலையில் இயேசுவை முதலில் சந்தித்தவர். அவரே ஏனைய சீடர்களை நோக்கி ஓடிச்சென்று, 'ஆண்ட வரைக் கண்டேன்' என்று அறிவித்தார் (யோவான் 20:18). தவக்காலம் எனும் பாலை வனத்திலும், பாடுகளின் துன்பம் நிறை நாட்களிலும் பயணம் செய்துள்ள நாமும், இன்று வெற்றியின் குரலை எழுப்புவோம், 'அவர் உயிர்த்துவிட்டார். அவர் உண்மை யில் உயிர்த்து விட்டார்'.
   ஒவ்வொரு கிறிஸ்தவரும் மகதலா மரியாவின் அனுபவத்தை மீண்டும் வாழ்கிறார். இது நம் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு சந்திப்பை உள்ளடக்கியது. இந்த சந்திப்பானது, இறைவனின் நன்மைத்தனத்தையும் உண்மையையும் நாம் அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு தனிச்சிறப்பு மிக்க நபருடனானது. அவர் நம்மைத் தீமையிலிருந்து மேலோட்டமாக அல்ல, மாறாக உள்ளியல்பாக விடுதலை வழங்கி, முற்றிலுமாக குணப்படுத்தி, நம் மாண்பை மீண்டும் பெற்றுத் தருகிறார். இதனாலேயே மகதலா மரியா இயேசுவை 'எனது நம்பிக்கை' என அழைக்கிறார். இயேசுவே அவரின் புதுப்பிறப்புக்கு அனுமதியளித்தார், அவருக்குப் புது வருங்காலத்தை வழங்கினார், அது நன்மைத்தனமும், தீமையிலிருந்து விடுதலையும் கொண்ட வாழ்வு. 'கிறிஸ்துவே என
து நம்பிக்கை' என்ற சொற்கள், நன்மையை விரும்பும் என் ஏக்கங்கள் அனைத்தும் அவரில் நிறைவடையும் என்ற வாய்ப்பை உருவாக்குகிறது. அவரோடு நான், நன்மைத்தனம் கொண்ட முழுமையான, முடிவற்ற ஒரு வாழ்விற்கான நம்பிக் கையைக் கொள்ளமுடியும். ஏனெனில், நம் மனிதத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு கடவுளே நம் அருகில் வந்துள்ளார்.
   இயேசு மக்கள் தலைவர்களால் ஒதுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, துன்புறுத் தப்பட்டு, மரணத் தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையுண்டதை, ஏனையச் சீடர்களைப் போல், மகதலா மரியாவும் கண்டார். மனிதரின் நன்மைத்தனங்கள் தீய எண்ணங் களுக்கு அடிமைப்படுத்தப்படுவதையும், உண்மை பொய்மையால் மேற்கொள்ளப்படு வதையும், கருணை என்பது பழிவாங்கலால் மீறப்படுவதையும் காண்பது தாங்க முடியாத ஒன்று. இயேசுவின் இறப்போடு, அவரில் நம்பிக்கைக் கொண்டிருந்த அனைவரின் நம்பிக்கை களும் தோல்வியுற்றதுபோல் தோன்றியது. ஆனால் அந்த விசுவாசம் முற்றிலுமாகத் தோல்வியுறவில்லை, குறிப்பாக இயேசுவின் அன்னையாம் கன்னி மரியாவின் இதயத்தில் அந்த நெருப்பு, இரவின் இருளிலும் எரிந்தது. இந்த உலகில், நம்பிக்கையானது தீமையின் கொடுமைகளை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. இது மரணச்சுவரால் மட்டும் தடைச் செய்யப்படவில்லை, மாறாக அதற்கும் மேலாக, பொறாமை, கர்வம், பொய்மைத்தன்மை மற்றும் வன்முறை எனும் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. வாழ்வெனும் அரசின் பாதையைத் திறப்பதற்காக,
இயேசுவும் இந்தக் கொடுமையான மரண வேதனையுடைய வேலிகளிடையே நடந்துச் சென்றார். ஒரு சிறிது நேரம் இயேசு தோல்வி அடைந்ததைப்போல் தோன்றியது. இருள் உலகை சூழ்ந்தது, இறைவனின் மௌனம் முழுமையானதாகவும், நம்பிக்கை என்பது அர்த்தமற்ற வார்த்தையாகவும் தோன்றியது.
   இதோ, ஓய்வு நாளுக்கு மறுநாள் காலையில் கல்லறை காலியாக இருந்தது. இயேசு தன்னை மகதலா மரியாவுக்கும், ஏனைய பெண்களுக்கும், தன் சீடர்களுக்கும் வெளிப் படுத்துகிறார். விசுவாசம் புதிதாய் பிறந்தது, மேலும் உயிரூட்டம் கொண்டதாய், எப்போதையும் விட சக்தி கொண்டதாய், வெற்றிக்கொள்ள முடியாதாய் இப்போது மாறியது. ஏனெனில் இது உறுதியான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வோடு இணைந்த மரணம் மகிழ்வடைந்தது. மோதல் வியத்தகு முறையில் முடிவுக்கு வந்தது. வாழ்வின் வெற்றி வீரர் கொல்லப்பட்டும், இப்போது அரசராக வாழ்கிறார். உயிர்ப்பின் அடையாளங்கள், மரணத்தின் மீதான வாழ்வின், பகைமை யின் மீதான அன்பின், மற்றும் பழிவாங்கலின் மீதான இரக்கத்தின் வெற்றிக்கும் சான்று பகர்கின்றன. உயிருள்ளவரை உள்ளடக்கியது கல்லறை. கிறிஸ்து உயிர்த்தபோது அவரின் மகிமையைக் கண்டேன். வானதூதர்கள் சாட்சி பகர்ந்தபோது இயேசுவின் உடையும் கல்லறைத் துணிகளும் அங்கேயே இருந்தன.
   அன்பு சகோதர சகோதரிகளே! இயேசு உயிர்த்தெழுந்துள்ளார் எனில், அதில் மட்டுமே, உண்மையில் புதியது ஒன்று நிகழ்கிறது. அது மனித நிலைகளையும் இவ்வுலகையும் மாற்றக்கூடியது. அவ்வாறெனில் இயேசு என்பவரில் நாம் முழுமையான நம்பிக்கை வைக்கமுடியும். நம் நம்பிக்கையை அவரின் வார்த்தைகளில் மட்டுமல்ல, அவரி லேயே வைக்கலாம். ஏனெனில், உயிர்த்த இயேசு, கடந்தகாலத்திற்கு உரியவர் அல்ல, நிகழ்காலத்திற்கு உரியவர், அவர் உயிரோடு இருக்கிறார். நம்பிக்கையாகவும் ஆறுத லாகவும் உள்ளவர் கிறிஸ்து, அதிலும் சிறப்பாக, தங்கள் விசுவாசத்திற்காக பாகு பாட்டையும் சித்ரவதையையும் அனுபவித்து துன்புறும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு. அவர் தன் திருச்சபை வழியாக நம்பிக்கை எனும் சக்தி யாக பிரசன்னமாகியிருக்கிறார். இத்திரு
ச்சபை அநீதி, துன்பங்கள் என்ற அனைத்து மனித நிலைகளின்போதும் மனித குலத்திற்கு நெருக்கமாக உள்ளது.
   உயிர்த்த இயேசு மத்தியக் கிழக்கு பகுதிக்கு நம்பிக்கையை அருளி, அங்குள்ள அனைத்து இன, கலாச்சார மற்றும் மத குழுக்கள் ஒன்றிணைந்து, பொதுநல மேம்பாட் டிற்கும், மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் உழைக்க ஊக்கமளிப்பாராக! குறிப்பாக, சிரியாவில், இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட்டு, அனைத்துலக சமுதாயம் விண்ணப்பிப்பதுபோல் மதிப்பு, பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவின் பாதைக்கான உடனடி அர்ப்பணம் இடபெறுவதாக. மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அந் நாட்டின் எண்ணற்ற அகதிகள், தங்களின் துன்பங்கள் அகற்றப்படுவதற்கு தேவையான ஒருமைப்பாடு மற்றும் ஏற்புடைமையைக் கண்டுகொள்வார்களாக. பாஸ்கா வெற்றி ஈராக் மக்களின் நிலையான தன்மைக்கும் வளர்ச்சிக்குமான பாதையைத் தொடர்வதில் அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ள ஊக்கமளிப்பதாக! புனித பூமியில் இஸ்ர யேலர்களும் பாலஸ்தீனியர்களும் புதிய அமைதி முயற்சிகளைத் துணிவுடன் மேற் கொள்வார்களாக.
   மரணம் மற்றும் தீமையின் மீது வெற்றி கண்ட நமதாண்டவர், ஆப்ரிக்கக் கண்டத்தின் கிறிஸ்தவ சமூகங்களை உறுதிப்படுத்துவாராக! அவர்கள் தங்கள் துன்பங்களை எதிர்கொள்ளும்போது நம்பிக்கை வழங்குவாராக! அம்மக்களிடையே வளர்ச்சியின் கருவிகளாகவும் அமைதி நடவடிக்கையாளர்களாகவும் செயல்பட அவர்களை உருவாக்குவாராக! ஆப்ரிக்க கொம்பு நாடுகளில் துன்புறும் மக்களூக்கு உயிர்த்த இயேசு ஆறுதலை அளித்து அவர்களுக்கு ஒப்புரவை வழங்குவாராக! ஆப்ரிக்காவின் பெரும் ஏரி நாடுகளில், சூடானிலும் தென்சூடானிலும் வாழும் மக்களுக்கு மன்னிப்பின் சக்தியை வழங்குவாராக! தற்போது அரசியல் நெருக்கடியை அனுபவிக்கும் மாலி நாட்டில், மகிமை நிறை கிறிஸ்து, அமைதியையும் நிலையான தன்மையையும் வழங்குவாராக! அண்மைக்காலங்களில் கொடுமையான பயங்கர வாத தாக்குதல்களை அனுபவித்த நைஜீரியாவில், உயிர்ப்பின் மகிழ்வானது, தேவையான சக்தியை வழங்கி, புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப, அதாவது குடிமக்களின் மதச் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவுவதாக!
அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!