Wednesday, April 4, 2012

ஏப்ரல் 4, 2012

சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவின் அன்பிற்கு
நம் இதயங்களைத் திறப்போம் - திருத்தந்தை

   மெக்சிகோ மற்றும் கியூபா குடியரசுக்கான ஆறு நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து கடந்த வியாழனன்று காலை வத்திக்கான் நாடு திரும்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இப்புதனன்று நிகழ்த்திய பொது மறைபோதக சந்திப்பின்போது, அத்திருப்பய ணம் குறித்த கருத்துக்களை அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
   மெக்சிகோ மற்றும் கியூ
பா குடியரசுக்கான என் அண்மைத் திருப்பயணம், அந்நாடுகளின் மக்களையும், இலத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களையும் விசுவாசத்திலும், நீதியான இணக்க வாழ்வுடன் கூடிய சமூக ஒழுங்கமைவைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நம்பிக்கையிலும் உறுதிப்படுத்து வதற்கானதாக இருந்தது. பக்தியிலும் ஆன்மீக மகிழ்விலும் நிறைந்து காணப்பட்ட லியோன் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், மெக்சிகோ மக்கள் தங்களின் சிறப்பான வருங்காலத்திற்காக உழைப்பதிலும், வன்முறைகளை மேற்கொள்வ தற்கான முயற்சிகளிலும் தங்களின் ஆழமான கிறிஸ்தவ அடிப்படை வேர்களி லிருந்து தூண்டுதலைப் பெறவேண்டும் என அவர்களுக்கு ஊக்கமளித்தேன்.
   கியூபா திருப்பயணத்தின்போது, நற்செய்திக்கான பொது சாட்சியத்திலும், புதுப்பிக் கப்பட்ட, ஒப்புரவான, சுதந்திர சமூகத்திற்கான மக்களின் ஏக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதிலும் தலத் திருச்சபையை உறுதிப்படுத்த ஆவல் கொண்டேன். சான்டி யாகோ டி கியூபாவிலிருந்து எல் கோப்ரே பிறரன்பு அன்னை மரியா திருத்தலத்திற்குத் திருப்பயணியாக நான் சென்றேன். பின் அங்கிருந்து ஹவானா சென்று, விசுவாசம் மீண்டும் உயிர் பெறுவதற்கும், இறை அன்பிற்கு நம்மைத் திறந்தவர்களாக செயல் படுவதற்கும், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட சுதந்திரம் மற்றும் மனித மாண்பு பற்றிய உண்மையை மதிப்பதற்கும் செபித்தேன்.
   இவ்வாறு தன்
திருப்பயணம் குறித்த கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை. புனித வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் நாம் எத்தகைய தயாரிப்பையும் நிலைப் பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என அவர் எடுத்துரைத்தபோது, "இந்த புனித மூன்று நாட்களில், இயேசு சாவிலிருந்து வாழ்வுக்கு கடந்துச் சென்ற மீட்பு நிகழ்வுகளைக் கொண்டாட தயாரித்து வரும் நாம், சிலுவையில் வெளிப்படுத்தப் பட்ட, ஒப்புரவு தரும் இயேசுவின் அன்பிற்கு நம் இதயங்களைத் திறப்போம். அந்த அன்பு நம் வாழ்வை மாற்றவும், உயிர்ப்பு மறையுண்மையை மகிழ்வுடன் சிறப்பிக்க வும் நமக்கு உதவுவதாக" என்றார்.
  
இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட 'உலக நிலக் கண்ணிவெடி விழிப்புணர்வு நாள்' குறித்தும் தன் மறைபோதகத்தின்போது திருத்தந்தை நினைவு கூர்ந்தார். நிலக் கண்ணிவெடி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களோடு தன் அருகாமையையும் அவர் தெரிவித்தார். 'மரணம் மற்றும் அழிவின் ஆபத்துகளைக் குறித்து பயம் கொள்ளாமல் வாழ்வின் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து நடைபோட உதவுமாறு முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் விடுத்திருந்த அழைப்பையும் எடுத்துரைத்து, இத்தகைய அழிவுதரும் கொடுமையான ஆயுதங் களிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ப்பணித்து உழைக்கும் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.