துன்பங்களில் வாடும் குடும்பங்களுக்கு சிலுவையில்
அறையுண்ட இயேசு உதவி செய்கிறார் - திருத்தந்தை
புனித வெள்ளியன்று இரவு உரோம் நகரின் கொலோசியம் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற சிலுவைப்பாதையை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னின்று நடத்தினார். குடும் பங்கள் என்ற மையப்பொருளில் அமைந்த இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை முதல் முறையாக, 'புதிய குடும்பங்கள்' என்ற இயக்கத்தை தோற்றுவித்த டானிலோ சான்சூச்சி - அன்னா மரியா என்ற இத்தாலியத் தம்பதியர் உருவாக்கி இருந்தனர். சிலுவைப்பாதையின் இறுதியில் திருத்தந்தை பின்வருமாறு உரை வழங்கினார்.
பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும் குடும்பங் களுக்கு சிலுவையில் அறையுண்ட இயேசு உதவி செய் கிறார். உறவுகளில் உருவாகும் முறிவுகள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை, குடும்பங்களில் நோயுற்றோர் என்ற பல கவலைகளில் சூழப்படும் குடும்பங்கள், கடந்த சில ஆண்டுகளாக பொருளா தாரச் சரிவு, நிலையான பணி வாய்ப்புகள் இல்லாத நிலை என்ற கூடுதல் பிரச்சனைக ளையும் சந்தித்து வருகின்றன. நம்மைச் சூழும் பிரச்சனை களில் நாம் தனித்து விடப்படுவதில்லை; மாறாக, சிலுவையில் அறையுண்ட இயேசு நம்முடன் துணை யாக வருகிறார். அவர் துன்பங்களைத் தாங்கிய விதம் நமக்கு மன உறுதியை அளிக்கிறது.